நேபாள சிறுமியர் கோரக்பூர் பயணம்| dinamalar coimbatore news | Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

நேபாள சிறுமியர் கோரக்பூர் பயணம்

Added : செப் 14, 2011
Share

கோவை : கோவை மாவட்டம், சூலூர் காப்பகத்தில் இருந்து மீட்கப்பட்ட, நேபாளத்தை சேர்ந்த 23 சிறுமியர், நேற்று ரயில் மூலம் கோரக்பூர் புறப்பட்டனர். நேபாளத்தை சேர்ந்த சிறுமியர் பலர், சூலூரில் செயல்படும் மைக்கேல் ஜாப் காப்பகத்தில் இருப்பதாக, புகார் எழுந்தது. "அனாதைகள்' என்று தவறான தகவலைக்கூறி, சிறுமியரை இந்தியாவுக்கு கடத்தி வந்து விட்டதாகவும், உண்மையில் அவர்களது பெற்றோர் நேபாளத்தில் இருப்பதாகவும், அங்கிருந்து வந்த தொண்டு நிறுவனத்தினர் கூறினர். இதையடுத்து, கோவை கலெக்டர் கருணாகரன் தலைமையில், ஆர்.டி.ஓ., சாந்தகுமார் உள்ளிட்ட அதிகாரிகள் விசாரணை நடத்தி, காப்பகத்தில் இருந்த நேபாள நாட்டை சேர்ந்த 23 சிறுமியரை மீட்டனர். அவர்களை தாய்நாட்டுக்கு அனுப்ப, மாவட்ட நிர்வாகம் சார்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டது. "கோவையில் இருந்து, சிறுமியரை உ.பி., மாநிலம் கோரக்பூர் அனுப்பு வது' என்றும், "அந்த மாவட்ட கலெக்டர் மூலம் நேபாளத்துக்கு அனுப்பி வைப்பது' என்றும், முடிவு செய்யப்பட்டது. ""சிறுமியர் 23 பேரும், திருவனந்தபுரம்-கோரக்பூர் எக்ஸ்பிரஸ் ரயில் மூலம் நேற்று பகல் 3.15 மணிக்கு கோவையில் இருந்து புறப்பட்டனர். அவர்களுடன், போலீசார் எட்டு பேரும், சமூக பாதுகாப்புத்துறையை சேர்ந்த அலுவலர்கள் இருவரும் செல்கின்றனர்,'' என்று கோவை ஆர்.டி.ஓ., சாந்தகுமார் தெரிவித்தார். நேபாளத்தில் இருந்து சிறுமியரை தேடி வந்த தொண்டு நிறுவனத் தினரும் உடன் செல்கின்றனர்.


Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X