வடபழநி ஆண்டவர் கோவிலில் தங்க தேர் பவனி மீண்டும் துவக்கம்

Updated : நவ 21, 2022 | Added : நவ 20, 2022 | கருத்துகள் (21) | |
Advertisement
சென்னை:வடபழநி ஆண்டவர் கோவிலில், தங்க தேர் புதுப்பிக்கப்பட்டு, தங்க தேர் பவனி மீண்டும் துவக்கப்பட்டு உள்ளது. மேலும், கோவில் தல வரலாறு பாடல்கள் உடைய குறுந்தகடு வெளியிடப்பட்டது. ஹிந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு, தங்க தேர் பவனியை துவக்கி வைத்தார். அவருடன், வடபழநி ஆண்டவர் கோவில் தக்கார் எல்.ஆதிமூலம், தி.மு.க., - எம்.எல்.ஏ., வேலு, அறநிலையத் துறை இணை கமிஷனர்

சென்னை:வடபழநி ஆண்டவர் கோவிலில், தங்க தேர் புதுப்பிக்கப்பட்டு, தங்க தேர் பவனி மீண்டும் துவக்கப்பட்டு உள்ளது. மேலும், கோவில் தல வரலாறு பாடல்கள் உடைய குறுந்தகடு வெளியிடப்பட்டது.



latest tamil news


ஹிந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு, தங்க தேர் பவனியை துவக்கி வைத்தார். அவருடன், வடபழநி ஆண்டவர் கோவில் தக்கார் எல்.ஆதிமூலம், தி.மு.க., - எம்.எல்.ஏ., வேலு, அறநிலையத் துறை இணை கமிஷனர் தனபாலன், துணை கமிஷனர் முல்லை உள்ளிட்டோர், தேரை வடம் பிடித்து இழுத்து, கோவிலை சுற்றி வந்தனர்.


பின், அமைச்சர் சேகர்பாபு கூறியதாவது:தமிழக முதல்வராக ஸ்டாலின் பொறுப்பேற்றதும், தமிழக கோவில்களில் தங்கம், வெள்ளி மற்றும் மரத்தால் ஆன தேர்கள், மீண்டும் பவனி வருவதற்கான உத்தரவை பிறப்பித்தார்.திருச்சி சமயபுரம், திருத்தணி முருகன், ராமேஸ்வரம் ராமநாத சுவாமி ஆகிய கோவில்களில், நீண்ட காலமாக ஓடாதிருந்த தேர்கள் சீரமைக்கப்பட்டு பவனி வருகின்றன.


கடந்த, 2021- - 22ம் நிதியாண்டில் புதிய தேர்கள் உருவாக்கவும், பழைய தேர்களை சீரமைக்கவும், 15 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டது.அதேபோல், இந்த நிதியாண்டில், ஒன்பது புதிய தேர்கள் செய்யவும், நான்கு பழைய தேர்கள் பழுது நீக்கவும் உத்தரவிடப்பட்டு உள்ளது.

தமிழகத்தில் இருந்து சபரிமலை யாத்திரை செல்லும் பக்தர்களின் வசதிக்காக, 24 மணி நேரமும் செயல்படக்கூடிய உதவி மையம், அறநிலையத் துறை தலைமை அலுவலகத்தில் அமைக்கப்பட்டு உள்ளது.


latest tamil news


உ.பி., காசியில் நடந்து வரும் 'காசி தமிழ் சங்கமம்' நிகழ்ச்சிக்காகவும், காசி யாத்திரைக்காகவும், 50 லட்சம் ரூபாயை, தமிழக அரசு ஒதுக்கி உள்ளது.கொரோனா காலத்தில், இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக, வடபழநி ஆண்டவர் கோவிலில் தங்க தேர் பவனி நடத்தப்படாமல் இருந்தது.பக்தர்களின் வேண்டுகோளை ஏற்று, தேர் புதுப்பிக்கும் பணி முடிந்து, தேர் பவனி மீண்டும் துவக்கி வைக்கப்பட்டு உள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (21)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Dharmavaan - Chennai,இந்தியா
29-நவ-202209:45:01 IST Report Abuse
Dharmavaan இந்த ஈவேரா கூட்டத்தை கோயிலிருந்து விரட்ட வேண்டும். அப்போது எல்லாம் சரியாகிவிடும்.
Rate this:
Cancel
D.Ambujavalli - Bengaluru,இந்தியா
22-நவ-202206:23:22 IST Report Abuse
D.Ambujavalli தங்கத்தேரை பக்தர்கள் இன்றே 'முழுதாக ' பார்த்துக்கொள்ளட்டும். விடியல் ஆட்சியில் அடுத்த சில ஆண்டுகளில் கட்டெறும்பு மிஞ்சுமோ, சிற்றெறும்பாகி விடுமோ ?
Rate this:
Cancel
Kasimani Baskaran - Singapore,சிங்கப்பூர்
22-நவ-202205:56:58 IST Report Abuse
Kasimani Baskaran ஆர்கிமிடிஸ் தத்துவத்தை வைத்து தேர் ஒரிஜினல்தானா இல்லையா என்பதை சரி பார்த்து விடுவது நல்லது.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X