பொது செய்தி

இந்தியா

பத்மநாப சுவாமி கோவிலின் "பி' அறையை திறக்க சுப்ரீம் கோர்ட் தடை

Added : செப் 22, 2011 | கருத்துகள் (6)
Share
Advertisement
SC, Padmanabha Swamy Temple, 	பத்மநாப சுவாமி கோவில் , சுப்ரீம் கோர்ட் தடை,

புதுடில்லி: "பத்மநாப சுவாமி கோவில் பாதாள அறைகளில், இதுவரை திறக்கப்படாத, "பி' அறையை, தற்போது திறக்க வேண்டாம். கோவிலுக்கு மத்திய போலீஸ் பாதுகாப்பு தேவையில்லை' என, சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது.


கேரளா தலைநகர் திருவனந்தபுரத்தில் உள்ள பிரசித்திப் பெற்ற பத்மநாப சுவாமி கோவில் பாதாள அறைகளில், பல கோடி ரூபாய் மதிப்புள்ள பொக்கிஷங்கள் இருப்பது கண்டறியப்பட்டது. அவற்றை மதிப்பீடு செய்ய, ஐந்து பேர் கமிட்டியை சுப்ரீம் கோர்ட் நியமித்துள்ளது. இக்கமிட்டி கோவிலில் நடத்திய ஆய்வின் அடிப்படையில், இடைக்கால அறிக்கையை கோர்ட்டில் தாக்கல் செய்தது. அதை நீதிபதிகள் ஆர்.வி.ரவீந்திரன் மற்றும் ஏ.கே.பட்நாயக் ஆகியோர் அடங்கிய சுப்ரீம் கோர்ட் பெஞ்சு நேற்று விசாரித்தது. அப்போது நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு விவரம் வருமாறு: பத்மநாப சுவாமி கோவில் பாதாள அறைகளை திறந்து, அங்குள்ள பொக்கிஷங்களை மதிப்பீடு செய்யும் பணியை துவக்கலாம். ஆனால், அவற்றில் இதுவரை திறக்கப்படாத, "பி' அறையை தற்போது திறக்கவேண்டாம். பாதாள அறைகளில், "பி' அறை தவிர, பிற அறைகளில் மதிப்பீடு பணி முடிந்த பிறகு, "பி' அறையை திறப்பது குறித்து, பரிசீலிக்கப்படும்.


கோவில் பாதுகாப்புக்கு மத்திய ரிசர்வ் போலீஸ் படையின் பாதுகாப்பு தேவை என, கோருவதை ஏற்க முடியாது. மாநில அரசின் போலீஸ் பாதுகாப்பு போதுமானது. கோவில் பாதுகாப்பு ஏற்பாடுகளை மாநில அரசு செய்யவேண்டும். கோவில் மற்றும் ஐவர் குழு பாதுகாப்புக்கென ஆண்டுக்கு, ஒன்றரை கோடி ரூபாய் தேவை என, மதிப்பிடப்பட்டுள்ளது. அதில், ஆண்டுக்கு 25 லட்சம் ரூபாய் கோவில் நிர்வாகம் வழங்க வேண்டும்; மீதமுள்ள தொகை அரசு செலவிட வேண்டும். பாதாள அறைகளில் உள்ள பொக்கிஷங்களை பாதுகாக்க, அறைகளைச் சுற்றிலும் பாதுகாப்பு சுவர் அமைக்கப்படவேண்டும். இதுகுறித்து மூன்று மாதங்களுக்கு பின் மீண்டும் விசாரணை நடத்தப்படும். அப்போது அதுவரை நடந்துள்ள மதிப்பீடு குறித்த அறிக்கையை தாக்கல் செய்யவேண்டும். இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.


சகஸ்ரநாம ஜபம்: ஆயிரம் பேர் பங்கேற்பு: திருவனந்தபுரம்: தேவ பிரசன்னத்தில் தெரிவித்த கருத்துக்களின் அடிப்படையில், பத்மநாப சுவாமி கோவிலில் விஷ்ணு சகஸ்ரநாம கூட்டு ஜபம் நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இதில், ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர். பத்மநாப சுவாமி கோவிலில் நடத்தப்பட்ட தேவபிரசன்னத்தில், கோவிலில் நடத்தப்படவேண்டிய பல்வேறு பரிகார பூஜைகள் குறித்து தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து நேற்று முன்தினம் மாலை 4.15 மணிக்கு, கோவிலில் கிழக்கு கோபுர வாசல் முதல், தெற்கு கோபுர வாசல் வரையிலும், வடக்கு கோபுர வாசல் வரையிலும் பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தனர். அப்போது துவங்கிய விஷ்ணு சகஸ்ரநாம கூட்டு ஜபம் ஒரு மணிநேரத்திற்கும் கூடுதலாக நடந்தது. டாக்டர் எம்.சாம்பசிவன் மந்திரங்களை சொல்லச் சொல்ல, பக்தர்கள் அதை திருப்பிச் சொல்லி சகஸ்ரநாம ஜபம் நடந்தது. நிகழ்ச்சியில், ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்களும், அய்யப்ப பக்தர்களும், திருவிதாங்கூர் மன்னர் குடும்பத்தினரும் பங்கேற்றனர்.


Advertisement
வாசகர் கருத்து (6)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Mohd. Rias - Kuala Lumur,மலேஷியா
24-செப்-201108:07:11 IST Report Abuse
Mohd. Rias வெள்ளைகாரர்கள் கொள்ளை அடிக்காமல் இருக்க மறைத்து வைக்கப்பட்ட இந்த பொக்கிசங்கள், இனிமேல் கண்டிப்பாக அரசியல்வாதிகளால் கட்சி பேதம் இன்றி கொள்ளை அடிக்கப்படும்.
Rate this:
Cancel
SOLAN - Chennai,இந்தியா
23-செப்-201109:35:26 IST Report Abuse
SOLAN ஒரு தொலைக்காட்சி செய்தியில் கம்யூனிஸ்டு தலைவர் இந்த கோயில் நகைகள் ஏழைகளுக்கு கொடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார். ஆனால் மக்கள் வரிப்பணத்தை ஒரு குறிப்பிட்ட மதத்தை சேர்ந்தவர்களுக்கு மட்டும் அவர்கள் அரேபிய மதக் கடமையை செய்ய கொடுக்கப்படும் பணத்தை பற்றி வாயே திறக்க மாட்டார்கள். இந்தியாவில் உள்ள அனைத்து கோயில் வளங்களும் அரசாங்கம் தான் வைத்து உள்ளது. திருப்பதி என்றாலும் சரி பழனி என்றாலும் சரி. ஆனால் இந்த கோயிலில் வரும் வருமானம் எல்லாம் எங்கே போகிறது. ஒவ்வொரு கோயிலிலும் முன்னாள் ஒரு டிக்கெட் கௌண்டர் போட்டு ஹிந்துக்கள் தங்கள் இறைவனை வணங்க வரி வசூலிக்கிறார்கள். இதை போலவே மசூதியிலோ அல்லது சர்சிலோ செய்ய அரசாங்கத்தினால் முடியுமா? பத்மனாப சுவாமி கோயிலுக்கு சொந்தமாக திருவணந்தபுரம் 15000 கோடிக்கும் அதிகமான நிலம் கம்யூனிஸ்டுகள் மற்றும் காங்கிரஸ் கட்டுபாட்டில் உள்ளது. ஏன் அந்த பணத்தையோ அல்லது நிலத்தை ஏழை ஹிந்துக்களுக்கு கொடுக்கலாமே? இவ்வளவு ஏன் அதில் 20 சதவீததிற்கும் அதிகமான நிலம் சிறுபானமை என்று சொல்லப்படும் பெரும்பான்மையாக உள்ளவர்களிடம் தான் உள்ளது, அதை எல்லாம் எடுத்து ஏழைகளுக்கு கொடுக்கலாமே? ஏன் செய்யவில்லை. இவர் அனைத்தும் மத சார்பு அற்ற கட்சி என்று சொல்லும் கம்யூனிஸ்டுகள் மற்றும் காங்கிரஸ் கட்சியின் கட்டுபாட்டில் அல்லவா உள்ளது. அந்த 15000 கோடிக்கு அதிகமான் நிலத்தை ஏழை ஹிந்துக்களுக்கு கொடுத்த அவர்கள் வாழ்க்கையை முன்னேறலாமே? செய்வார்களா? நிலத்தை அபகரித்த கூட்டம் தற்பொழுது நகைக்கும் நாக்கை தொங்க போட்டு வந்து விட்டது. இருந்த கோயில் நகைகள் எல்லாம் மேற்கத்திய மதம் சார்ந்த ஆங்கிலேயர்களும், அரேபிய மதம் சார்ந்த முகலாயர்களும் எடுத்து கொண்டாகிவிட்டது. மிச்சம் மீதியையும் எடுத்து கொள்ள வேண்டும் என்று நினைக்கிறார்கள் போலும். இதற்கு காலம் கண்டிப்பாக பதில் சொல்லும்....
Rate this:
Cancel
krishna - delhi,இந்தியா
23-செப்-201108:19:08 IST Report Abuse
krishna வெள்ளைக்காரன் கொள்ளையடிக்காமல் இருப்பதற்காக பாதுகாப்பாக வைக்கைபட்டிருந்த இந்த பொக்கிஷங்கள் தேசிய சொத்து என அறிவிக்கப்பட்டு இதனை இத்தனை காலம் கட்டி காத்து வந்த மன்னர் குடும்ப பரம்பரையினர் கோவிலின் நிரந்தர அறங்காவலர்களாக நியமிக்கப்பட வேண்டும்..
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X