உடுப்பி:தி.மு.க., ராஜ்யசபா எம்.பி.,கனிமொழியின் தாயாரும், முன்னாள் முதல்வர் கருணாநிதியின் துணைவி யாரு மான ராஜாத்தி, கர்நாடக மாநிலம் உடுப்பி கிருஷ்ணன் கோவிலில், நேற்று முன்தினம் வழிபாடு நடத்தினார். பிரசித்தி பெற்ற கிருஷ்ணன் கோவில் அமைந்துள்ள உடுப்பி நகருக்கு வந்த ராஜாத்தி, கிருஷ்ணன் கோவிலுக்குச் சென்று சாமி தரிசனம் செய்தார்.சுவாமியை வழிபட்ட அவர்,சிறிது நேரம் பிரார்த்தனை செய்ததாக,சிரூர் மடத்தின் திவான் பி.லாதவ்ய ஆச்சாரியா, நிருபர்களிடம் தெரிவித்தார்.கோவிலில், லட்சுமி வராஹ தீர்த்த சுவாமி, சிரூர் மடத் தின் பர்யாய சுவாமி ஆகியோர், மந்திரங்கள் ஓதி, அட்சதை தூவி, ராஜாத்தியை ஆசீர்வதித்தனர்.கோவிலில் வழங்கப் பட்ட பிரசாதத்தையும் அவர் சாப்பிட்டார்.உடுப்பி மாவட்டம் கொல்லூரில் அமைந்துள்ள தாய் மூகாம்பிகை கோவி லுக்கும் ராஜாத்தி சென்று சாமி தரிசனம் செய்ததாக தெரியவந்துள்ளது.அவர், திகார் சிறையில் உள்ள தன் மகள் கனி மொழிக் காக, கர்நாடக மாநில கோவில்களுக்கு சென்று சிறப்பு பூஜைகள் செய்து பிரார்த்தித்து கொண்டதாகத் தெரிகிறது.