அடுத்த பயணம் கிளம்பியாச்சு., ஜனாதிபதி - சுவிஸ் மற்றும் ஆஸ்திரியாவுக்கு

Updated : செப் 30, 2011 | Added : செப் 30, 2011 | கருத்துகள் (25)
Share
Advertisement
President Patil leaves for Switzerland, Austria, அடுத்த பயணம் கிளம்பியாச்சு., ஜனாதிபதி

புதுடில்லி: இந்திய ஜனாதிபதி பிரதீபா பாட்டீல் சுவிட்சர்லாந்து, ஆஸ்திரியா உள்ளிட்ட நாடுகளுக்கு சுற்றுப்பயணமாக இன்று புறப்பட்டு சென்றார். தென்கொரிய பயணத்திற்கு பின்னர் அடுத்தக்கட்ட பயணத்தை துவங்கியிருக்கிறார் இவர் .


சுவிட்சர்லாந்து, ஆஸ்திரியாவில் 8 நாள் சுற்றுப்பயணம் செய்கிறார். அந் நாட்டு பாங்குகளில் இந்தியர்கள் பதுக்கி வைத்துள்ள கறுப்பு பணம் குறித்த தகவல்களை அளிக்க கோருவது உள்பட இருதரப்பு பேச்சு வார்த்தை நடத்த உள்ளார்.


முன்னதாக பிரதமர் மன்மோகன்சிங், சபாநாயகர் மீராகுமார், வெளியுறவு துறை அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா ஆகியோர் ஜனாதிபதியை சந்தித்து பேசினர். ஜனாதிபதியுடன் பார்லி., விவகாரத்துறை அமைச்சர் ராஜீவ்சுக்லா, மற்றும் எம்.பி..க்கள் , 45-க்கும் மேற்பட்ட வர்த்தக பிரதிநிதிகள் செல்கின்றனர்.


4ம் தேதி வரை சுவிட்சர்லாந்திலும், பின்னர்4ம் தேதி இரவு முதல் 7ம் தேதி வரை ஆஸ்திரியாவிலும் இருப்பார். தற்போது நாட்டில் கறுப்பு பணம் விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ளதால் ஜனாதிபதியின் சுவிஸ் பயணம் முக்கியத்துவம் பெறுகிறது. இருநாடுகள் இடையில் இந்தியர்களின் பணபரிமாற்றம் மற்றும் டெபாசிட் விவரங்கள் அறிவது தொடர்பில் முக்கிய ஒப்பந்தம் கையெழுத்தாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Advertisement
வாசகர் கருத்து (25)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Ramanarayanan R.P. - Hyderabad,இந்தியா
01-அக்-201119:41:53 IST Report Abuse
Ramanarayanan R.P. It is our bad Karma we have such a waste President spending poor Indias money on foregin travels.Horrible waste.
Rate this:
Cancel
Solomon Bobby - Vellore,இந்தியா
01-அக்-201114:05:38 IST Report Abuse
Solomon Bobby ஷி இஸ் (காங்கிரஸ்) ப்ரெசிடென்ட். ....kalam is our president ever for யூத்.
Rate this:
Cancel
சுலைமான் - தோஹா ,கத்தார்
01-அக்-201109:55:47 IST Report Abuse
சுலைமான் கடைசி காலத்தில் காசி ராமேஸ்வரம் என்று போவார்கள். ஆனால் இந்த அரசியல்வியாதிகள் ஆஸ்திரியா ஸ்விஸ் என்று கிளம்பிவிடுகிறார்களே? நாம் என்ன செய்ய இயலும்? பார்த்து பெருமூச்சு விடத்தான் முடியும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X