குஜராத் மாநில ஐ.பி.எஸ்., அதிகாரி சஞ்சீவ் பட் கைது

Added : அக் 01, 2011 | கருத்துகள் (1)
Share
Advertisement
குஜராத் மாநில ஐ.பி.எஸ்., அதிகாரி சஞ்சீவ் பட் கைது

புதுடில்லி : சஸ்பெண்ட் செய்யப்பட்ட குஜராத் ஐ.பி.எஸ்., அதிகாரி சஞ்சீவ் பட் நேற்று கைது செய்யப்பட்டார். குஜராத் மாநில கேடர் ஐ.பி.எஸ்., அதிகாரி சஞ்சீவ் பட் மீது, பணியில் அனுமதியில்லாமல் விடுமுறை எடுத்தது, அரசு வாகனத்தை தவறாக பயன்படுத்தியது, துறை ரீதியான குழு முன் ஆஜராகாதது உள்ளிட்ட புகார்கள் கூறப்பட்டன. இதையடுத்து, சஞ்சீவ் பட்டின் நடவடிக்கைகள் ஐ.பி.எஸ்., அதிகாரிக்கு பொருத்தமற்ற வகையில் இருப்பதாகக் கூறி, அவரை கடந்த ஆகஸ்ட் 8ம் தேதி, நரேந்திர மோடி அரசு சஸ்பெண்ட் செய்தது.


இந்நிலையில், தன் மீது எப்.ஐ.ஆர்., பதிவு செய்த கான்ஸ்டபிளை மிரட்டியது தொடர்பான வழக்கில், போலீசார் நேற்று சஞ்சீவ் பட்டை கைது செய்தனர். குஜராத்தில், 2002ம் ஆண்டில் நடந்த கலவரத்தின் போது, வன்முறையில் ஈடுபடுபவர்கள் குறித்து கவலைப்பட வேண்டாம் என்று நரேந்திர மோடி, போலீஸ் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டதாக சஞ்சீவ் பட் குற்றம் சாட்டியிருந்தார். இதைத் தொடர்ந்தே, அவர் மீது தொடர் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன.


Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Santhaana krishna pappachaami chinnakulanthai - City Chennai,இந்தியா
01-அக்-201111:36:23 IST Report Abuse
Santhaana krishna pappachaami chinnakulanthai ..., அரசு வாகனத்தை தவறாக பயன்படுத்தியது, ...உண்மையை சொன்னதற்கு கிடைத்த மாபெரும் பரிசு ...டிரைவர் சொன்னாராம் ..கைதாம்..இங்கு எல்லா IAS IPS மற்றும் பல அரசு வாகனங்கள் கறிகாய் வாங்கவும் பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்பவும் ...தினசரி நடக்கும் சமாசாரம் ..நெஞ்சில் கை வைத்து சொல்லுங்கள் ..உங்கள் சொந்த வண்டியை என்றாவது எடுத்ததுண்டா ..முதலமைச்சரின் கவனத்திற்கு போனதுண்டா ..
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X