அல்-குவைதா முக்கிய தலைவர் விமான தாக்குதலில் பலி

Added : அக் 01, 2011
Advertisement
அல்-குவைதா முக்கிய தலைவர் விமான தாக்குதலில் பலி

சனா : அல்-குவைதாவின் முக்கியத் தலைவர் அன்வர் அல் அவ்லாகி, ஏமனில் நடந்த ஆளில்லா விமானத் தாக்குதலில் பலியானதாக அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஏமன் அரசும் இதை உறுதிப்படுத்தியுள்ளது. அரபு தீபகற்பத்தில் செயல்படும் அல்-குவைதாவின் முக்கியத் தலைவர் அன்வர் அல் அவ்லாகி. இவரை அமெரிக்கா, பயங்கரவாதி என பிரகடனப்படுத்தியுள்ளது. அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா, இவரை சுட்டுக் கொல்லும்படி தனிப்பட்ட முறையில் உத்தரவிட்டுள்ளார்.


அரபு தீபகற்பத்தில் செயல்படும் அல்-குவைதாவின் மைய இடமாக, ஏமனின் கிழக்குப் பகுதி உள்ளது. இங்கு தான் அவ்லாகி இருந்துள்ளார். ஆனால், 2007 முதல் இவரை அமெரிக்கா தேடி வருகிறது. இந்நிலையில், ஏமனின் கிழக்குப் பகுதியில் உள்ள மரிப் மாகாணத்தில் அமெரிக்காவின் ஆளில்லா விமானங்கள் நடத்திய தாக்குதலில், அவ்லாகி கொல்லப்பட்டார். இத்தகவலை அமெரிக்க அதிகாரிகள் நேற்று தெரிவித்தனர். இதை ஏமன் அரசும் உறுதிப்படுத்தியுள்ளது.


Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X