பொது செய்தி

தமிழ்நாடு

முஸ்லிம்களுக்கு 10 சதவீத இட ஒதுக்கீடு:தவ்ஹுத் ஜமாத் அமைப்பு வலியுறுத்தல்

Added : ஜூலை 05, 2010 | கருத்துகள் (3)
Advertisement

சென்னை : ""கல்வி,வேலைவாய்ப்பில் முஸ்லிம்களுக்கு 10 சதவீத இடஒதுக்கீட்டை அமல்படுத்த மத்திய, மாநில அரசுகளை வலியுறுத்த வேண்டும்,'' என தமிழ்நாடு தவ்ஹுத் ஜமாத் அமைப்பின் நிறுவனர் ஜெய்னூல் ஆபிதீன் பேசினார்.தமிழ்நாடு தவ்ஹுத் ஜமாத் சார்பில், முஸ்லிம்களுக்கு 10 சதவீத இடஒதுக்கீட்டை வலியுறுத்தி பேரணி மற்றும் மாநாடு சென்னை தீவுத்திடலில் நேற்று நடந்தது.மாநாட்டின் முதல்நிகழ்வாக, முஸ்லிம்கள் ஏராளமானோர் பங்கேற்ற பேரணி, சென்னை புதிய தலைமைச் செயலகம் அருகே துவங்கி, தீவுத்திடலில் முடிந்தது.தீவுத்திடலில் நடந்த மாநாட்டில் தமிழ்நாடு தவ்ஹுத் ஜமாத்தின் நிறுவனர் ஜெய்னூல் ஆபிதீன் பேசியதாவது:

நாட்டு விடுதலைக்காக முஸ்லிம்கள் பாடுபட்டுள்ளதை குஷ்வந்த்சிங் போன்ற சிந்தனையாளர்கள் வெளி உலகிற்கு தெளிவாக எடுத்துரைத்துள்ளனர். ஆங்கிலேயர் ஆட்சியில் முஸ்லிம்களுக்கு இடஒதுக்கீடு வழங்கப்பட்டது. அவர்களை நாட்டைவிட்டு வெளியேற்ற வேண்டும் என்பதற்காக அதை முஸ்லிம் மதகுருமார்கள் புறக்கணித்தனர்.காந்தியின் ஒத்துழையாமை இயக்கத்திற்காக ஆங்கிலேயர் வழங்கிய வேலை வாய்ப்பையும் முஸ்லிம்கள் மறுத்தனர். தாங்கள் வகித்துவந்த உயர் பதவிகள் மற்றும் ஆங்கிலேயர் கொடுத்த சர்., ராவ்பகதூர் போன்ற பட்டங்களையும் புறக்கணித்தனர்.கடந்த 2004ம் ஆண்டு பார்லிமென்ட் தேர்தலின்போது, முஸ்லிம்களுக்கு இடஒதுக்கீடு அளிக்கப்படும் என, காங்கிரஸ் தேர்தல் வாக்குறுதி அளித்தது. கடந்த ஆண்டு, ரங்கநாத் மிஸ்ரா கமிட்டி, நாட்டில் உள்ள 13 சதவீத முஸ்லிம்களுக்கு, கல்வி,வேலைவாய்ப்பு உள்ளிட்டவற்றில் 10 சதவீத இட ஒதுக்கீடு அளிக்க வேண்டும் என பரிந்துரைத்தது.இப்பரிந்துரையை உடனடியாக சட்டமாக்க வேண்டும். இதுதொடர்பாக, தமிழக முதல்வர் கருணாநிதி, தன்னுடைய செல்வாக்கை பயன்படுத்தி மத்திய அரசை வலியுறுத்த வேண்டும்.இவ்வாறு ஜெய்னூல் அபிதீன் பேசினார்.இம்மாநாட்டில், தமிழ்நாடு தவ்ஹுத் ஜமாத் மாநில தலைவர் பக்கீர் முகமது அல்சாதி, பொதுச் செயலர் அப்துல் அமீது, நிர்வாகிகள், ஏராளமான முஸ்லிம்கள் பங்கேற்றனர்.


Advertisement


வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
சாம் - Kuwait,இந்தியா
05-ஜூலை-201017:43:46 IST Report Abuse
சாம் வளைகுடா நாடுகளில் முஸ்லிம்கள் கடும் வெப்பத்தில் ரோடு வேலைகள் முதல் கட்டட வேலைகள் வரை செய்து கஷ்டம் படுகிறார்கள். அவர்களின் வருக்கால சந்ததிகள் கல்வி அறிவு பெற்று நமது நாட்டில் நல்ல வேலை செய்ய கல்வி மற்றும் வேலை வாய்ப்பில் இட ஒதுக்கீடு கொடுக்க வேண்டும். நமது நாடு சுகந்திரம் அடைந்ததில் இருந்து காங்கிரஸ் அரசு முஸ்லிகளுக்கு ஒன்றும் செய்ய வில்லை. அப்படி இருந்தும் முஸ்லிம் மக்கள் காங்கிரஸ்க்கு ஒட்டு அளித்து வருகிறார்கள் என்பதை நினைவில் கொண்டு முஸ்லிம் மக்கள் கல்வி அறிவு பெற மதிய அரசு இட ஒத்துக்கிடு கொடுக்க வேண்டும் - சாம்
Rate this:
Share this comment
Cancel
வடக்குபட்டி ராமசாமி - யாதும்ஊரே,இந்தியா
05-ஜூலை-201016:06:50 IST Report Abuse
வடக்குபட்டி ராமசாமி அய்யா பெருமார்களே, போதுமய்யா நீங்களுமா? ஏழைபட்டவனுக்கு (அவன் இந்துவோ, முஸ்லிமோ, கிறித்துவனோ) இட ஒதுக்கீடுன்னா அதுல ஒரு பொதுநலம் இருக்கு. இப்படி ஜாதி, மத அடிப்படையில ஒதுக்கீடு கேட்டா நாடு எப்படி உருப்படும்?? அது ஏன் ராமதாச குறை சொல்ற ஒருத்தரையும் இங்க காணோம்??
Rate this:
Share this comment
Cancel
Zia - chennai,இந்தியா
05-ஜூலை-201015:48:39 IST Report Abuse
Zia Intha manadu mikapperiya vetriyadaya udaviya Ellam vall iraivanukke Ella Pugalzhum
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X