பயங்கரவாதி போல் நடத்துவதா?: பட் மனைவி புகார்

Added : அக் 06, 2011 | கருத்துகள் (1)
Share
Advertisement

ஆமதாபாத்: குஜராத்தில், சஸ்பெண்ட் செய்யப்பட்ட ஐ.பி.எஸ்., அதிகாரி சஞ்சீவ் பட்டினை பயங்கரவாதி போல் போலீசார் நடத்துகின்றனர் எனஅவரது மனைவி குற்றம்சாட்டி மத்திய உள்துறை அமைச்சருக்கு மீண்டும் கடிதம் எழுதியுள்ளார். குஜராத்தில், 2002ல் கோத்ரா ரயில் எரிப்பு சம்பவத்தைத் தொடர்ந்து, முதல்வர் நரேந்திர மோடி, போலீஸ் அதிகாரிகளின் கூட்டத்தை கூட்டி, "கலவரத்தை அடக்க வேண்டாம். இந்துக்கள் தங்கள் எதிர்ப்பை தெரிவிக்கட்டும்' எனக் கூறியதாக, ஐ.பி.எஸ்., அதிகாரி சஞ்சீவ் பட் தெரிவித்திருந்தார்.

கூட்டத்தில் தான் கலந்து கொண்டதற்கு, கான்ஸ்டபிள் கே.டி.பந்த் சாட்சி என, சஞ்சீவ் பட் தெரிவித்திருந்தார். ஆனால், முதல்வர் கூட்டத்தில் கலந்து கொண்டதாக கூறும் படி சஞ்சீவ் பட் என்னை மிரட்டி எழுதி வாங்கினார் என, கே.டி.பந்த் சமீபத்தில் தெரிவித்தார். இதையடுத்து, சஞ்சீவ் பட் கடந்த வாரம் கைது செய்யப்பட்டார். சஞ்சீவ் பட் தற்போது சபர்மதி சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இவரது ஜாமின் மனு மீதான தீர்ப்பு, வரும் 7ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் சஞ்சீவ் பட்டின் மனைவி ஸ்வேதாபட், மத்திய உள்துறை அமைச்சகத்திற்கு எழுதிய இரண்டாவது கடிதத்தில், தனது கணவரை போலீசார் பயங்கரவாதி நடத்துகின்றனர். ஒரு ஐ.பி.எஸ். அதிகாரி என பாராமல் மிக மோசமாக நடத்துகின்றனர். அவரது உயிருக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது.எல்லா தரப்பிலும் அவருக்கு ஜாமின் கிடைக்க முடியாதபடி சதிதிட்டம் தீட்டி நிரந்தரமாக சிறையில் அடைக்க முயற்சி செய்கின்றனர். இவ்வாறு அந்த கடித்தத்தில் கூறியுள்ளார்.

Advertisement




வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Abdhul Rauf - Doha,கத்தார்
06-அக்-201112:49:54 IST Report Abuse
Abdhul Rauf மேடம், போலீஸ் அதிகாரி அரசியல்வாதிகளின் கைப்பாவைகலாகச் செயல்பட்டு அரசியல் செய்யக்கூடாது! அவர் கடமை மக்கள் பணி ஆற்றுவதே!
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X