ராஜினாமா கிடையாது : ஒமர் அப்துல்லா

Added : அக் 06, 2011
Advertisement

புதுடில்லி: காஷ்மீரில், தேசிய மாநாட்டுக் கட்சித் தொண்டர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக, தனது பதவியை ராஜினாமா செய்யும் பேச்சுக்கே இடமில்லை என்று அம்மாநில முதல்வர் ஒமர் அப்துல்லா தெரிவித்துள்ளார்.
காஷ்மீர் மாநிலத்தில், தேசிய மாநாட்டுக் கட்சியைச் சேர்ந்த சயித் முகமது யூசுப், 61, போலீஸ் காவலில் உயிரிழந்தார். இது அம்மாநிலத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக, முதல்வர் ஒமர் அப்துல்லா தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்று எதிர்க்கட்சியினர் வலியுறுத்தி வருகின்றனர். இந்நிலையில், செய்தியாளர்களிடம் ஒமர் அப்துல்லா கூறுகையில், இந்த விவகாரத்தில் நான் தவறு ஏதும் செய்யவில்லை. எனவே, பதவியை ராஜினாமா செய்யும் பேச்சுக்கே இடமில்லை, நீதி விசாரணையில் உண்மைகள் விரைவில் வெளிவரும், என தெரிவித்தார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X