பொய் சொல்கிறார் ஓமர்: தலிப் உசேன்

Updated : அக் 07, 2011 | Added : அக் 07, 2011
Advertisement

ஸ்ரீநகர்: தேசிய மாநாட்டுக்கட்சி தொண்டர் ஒருவர் போலீஸ் காவலில் இறந்த சம்பவத்தில் புதிய திருப்பமாக, தன் தந்தை மரணம் குறித்து முதல்வர் ஓமர் பொய் சொல்வதாக, இறந்தவரின் மகன் தெரிவித்துள்ளார். தேசிய மாநாட்டு கட்சித்தொண்டர் சையது யூசுப். அனந்த்நாக் மாவட்டத்தைச் சேர்ந்த இவர், சட்டமேலவை உறுப்பினர் பதவி வாங்கித்தருவதாக கூறி, இரண்டு பேரிடம் ரூ. 1 கோடியே 18 லட்சம் பெற்றுள்ளார். இந்நிலையில், கடந்த மாதம் 29ம் தேதி போலீஸ் காவலில் யூசுப் மர்மமான முறையில் இறந்தார். இச்சம்பவம் காஷ்மீர் சட்டசபையில் கடும் அமளியை ஏற்படுத்தியது. இதுகுறித்து கருத்து தெரிவித்த ஓமர் அப்துல்லா, கட்சித்தொண்டர் மரணத்திற்கு தான் பொறுப்பாக முடியாது என்று தெரிவித்திருந்தார். இந்நிலையில், யூசுப் மகன் தலிப் உசேன் கூறுகையில், தனது தந்தையை போலீஸ் காவலில் வைத்து அடித்து உதைத்ததாகவும், ஓமருக்கு தெரிந்தே இது நடந்துள்ளதாகவும், இதுகுறித்து அவர் பொய் சொல்வதாகவும் தெரிவித்தார்.

Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X