அமெரிக்க செனட்டில் சீன கரன்சிக்கு எதிரான மசோதா நிறைவேற்றம்

Added : அக் 12, 2011 | கருத்துகள் (12)
Share
Advertisement
அமெரிக்க செனட்டில் சீன கரன்சிக்கு எதிரான மசோதா நிறைவேற்றம்

வாஷிங்டன்: சீன கரன்சியின் மதிப்பை வலுக்கட்டாயமாக உயர்த்த வழிசெய்யும் மசோதா, நேற்று அமெரிக்க செனட் சபையில் நிறைவேறியது. பிரதிநிதிகள் சபையில், மசோதாவை நிறைவேற்றவிடாமல் தடுக்கும் நடவடிக்கைகளில் இறங்கியுள்ள சீனா, இம்மசோதாவால், இரு நாடுகளுக்கும் இடையில் வர்த்தகப் போர் உருவாகும் என எச்சரித்துள்ளது.


அமெரிக்கா குற்றச்சாட்டு: சீனா தனது "யுவான்' கரன்சியை, டாலருக்கு எதிரான மதிப்பில் தொடர்ந்து குறைத்தே வைத்துள்ளது. இதனால், சீன ஏற்றுமதியாளர்களுக்கு அளவற்ற லாபம் கிடைப்பதாகவும், அமெரிக்காவில் ஏற்கனவே நிலவி வரும் வேலையில்லா திண்டாட்டத்தை மேலும் அதிகரிக்கும் முயற்சி இது எனவும், அமெரிக்கா தொடர்ந்து குற்றம் சாட்டி வருகிறது.


சீனா மறுப்பு: ஆனால், அமெரிக்க வேலையில்லா திண்டாட்டத்திற்கு தனது கரன்சி மதிப்பு காரணமல்ல எனவும், 2005 முதல் இதுவரை, யுவானின் மதிப்பை 30 சதவீதம் அதிகரித்துள்ளதாகவும் சீனா மறுப்பு தெரிவித்து வருகிறது.


மசோதா நிறைவேற்றம்: இந்நிலையில், டாலருக்கு எதிராக வெளிநாட்டு கரன்சிகளின் மதிப்பைக் குறைப்பதற்காக, தங்களின் ஏற்றுமதிப் பொருட்களுக்கு மானியம் வழங்கும் நாடுகளின் ஏற்றுமதிப் பொருட்கள் மீது, அமெரிக்கா வரி விதிக்க வழி செய்யும் மசோதா, நேற்று செனட் சபையில் நிறைவேறியது.


பிரதிநிதிகள் சபையில்: ஆனால், இம்மசோதா, எதிர்க்கட்சியான குடியரசுக் கட்சியினரின் பிடியில் உள்ள பிரதிநிதிகள் சபையில் நிறைவேறுமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. எதிர்க்கட்சித் தலைவர் ஜான் பாய்னர்,"இம்மசோதாவை நான் ஓட்டுக்கு விடப்போவதில்லை. இதனால், உலகின் முதல் மற்றும் மூன்றாம் பொருளாதார நாடுகளிடையிலான உறவுகள் பாதிக்கப்படும்' என்றார்.


எதிர்ப்பும் ஆதரவும்: இம்மசோதாவை எதிர்க்கும் நிபுணர்கள், சீனப் பொருட்களின் மீதான வரி அதிகரிப்பால், வியட்நாம், மலேசியா போன்றவை தான் பயனடையும்; அமெரிக்கா அல்ல என்றும், அப்படியே சீனப் பொருட்களின் விலை அதிகரித்தால், அமெரிக்க குடும்பங்களையும் தொழில்களையும் தான் பாதிக்கும் என்றும் கூறுகின்றனர். ஆதரவாளர்கள், இதன் மூலம் அமெரிக்காவில் வேலை வாய்ப்பு அதிகரிக்கும்; அமெரிக்க ஏற்றுமதி அதிகரிக்கும் என்கின்றனர். அதிபர் ஒபாமா இந்த மசோதாவுக்கு ஆதரவு தெரிவிக்க மறுத்து விட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.


சீனா மிரட்டல்: மசோதாவுக்குக் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ள சீனா, இதுபோன்ற நடவடிக்கைகள், இரு நாடுகளுக்கிடையில் வர்த்தகப் போரைத் தான் உருவாக்கும் என மிரட்டியுள்ளது.


Advertisement


வாசகர் கருத்து (12)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
T.G.Prasanna - Chennai,இந்தியா
13-அக்-201111:47:28 IST Report Abuse
T.G.Prasanna This may benefit India, if India makes clever moves. But, I am too convinced that our present ruling party won;t make such moves.
Rate this:

Microsoft OLE DB Provider for SQL Server error '80040e31'

Query timeout expired

/xtralog_load_full_taboolabc.asp, line 394