விரிவுரையாளர் கையை வெட்டிய கொடூரம் தலிபான் நடவடிக்கைக்கு கேரளா கண்டனம்

Added : ஜூலை 06, 2010 | கருத்துகள் (7)
Advertisement

திருவனந்தபுரம் : கல்லூரி விரிவுரையாளர் ஒருவரின் கை சிதைக்கப்பட்ட கொடூரச் செயல் குறித்து கண்டனம் தெரிவித்த கேரள உள்துறை அமைச்சர் கொடியேறி பாலகிருஷ்ணன், "இதுபோன்ற "தலிபான்' நடவடிக்கைகளை அரசு பொறுத்துக் கொள்ளாது. மீறிச் செயல்படுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்' என்று எச்சரித்துள்ளார்.

கேரளாவில் ஒரு குறிப்பிட்ட மதத்தவரின் மனம் புண்படும்படியாக கேள்வித் தாளைத் தயாரித்ததாக, மூவாட்டுப்புழாவில் உள்ள தனியார் கல்லூரி விரிவுரையாளர் டி.ஜே.ஜோசப் என்பவரின் வலது கை, அடையாளம் தெரியாத கும்பல் ஒன்றால் சமீபத்தில் சிதைக்கப்பட்டது.

இதுபற்றி, கேரள சட்டசபையில் உள்துறை அமைச்சர் கொடியேறி பாலகிருஷ்ணன் நேற்று கூறியதாவது: இப்பிரச்னையில் விரிவுரையாளருக்குப் பாதுகாப்பு அளித்த போலீசார் தரப்பில் ஏதாவது குறைபாடுகள் இருந்ததா என்பது குறித்து விசாரிக்கப்படும். சர்ச்சைக்குரிய வகையில் நடந்து கொண்ட விரிவுரையாளர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். அவர் மீது வழக்கும் தொடரப்பட்டுள்ளது. ஆனால், அவரது கையை சிதைப்பது போன்ற, "தலிபான்' நடவடிக்கைகளில் ஈடுபடும் மதவாத அமைப்புகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். அவரது கை சிதைக்கப்பட்ட கொடூரச் செயல், அனைத்து அரசியல் கட்சிகளாலும் கண்டிக்கப்பட வேண்டும். இவ்வாறு பாலகிருஷ்ணன் தெரிவித்தார்.

எதிர்க்கட்சித் தலைவர் உம்மன் சாண்டி கூறுகையில், "இச்செயல் ஒவ்வொருவராலும் வன்மையாகக் கண்டிக்கத்தக்கது' என்று தெரிவித்தார். மாநிலத்தில் நிலவி வரும் மத நல்லிணக்கத்தை சீர்குலைக்கும் வகையில் பெருகி வரும் நடவடிக்கைகளின் பின்னால் உள்ள சதித் திட்டங்கள் குறித்து, மாநில அரசு தீவிரமாகக் கண்காணித்து வருகிறது. இதனிடையே, விரிவுரையாளரைத் தாக்கியதாக இருவர் கைது செய்யப்பட்டதாக போலீசார் நேற்று மாலையில் தெரிவித்தனர். ஒருவர் ஜாபர் மற்றவர் அஷ்ரப் என்றும் தெரிவித்தனர்.


Advertisement


வாசகர் கருத்து (7)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Indian - Jeddah,சவுதி அரேபியா
06-ஜூலை-201021:00:22 IST Report Abuse
Indian பாலகிருஷ்ணா, வாய மூடு இல்லைன்ன உனக்கு பதவியும் இருக்காது, வாயும் இருக்காது, ஜாக்கிரதை
Rate this:
Share this comment
Cancel
ச ஜான் ரமேஷ் - Tuticorin,இந்தியா
06-ஜூலை-201014:08:20 IST Report Abuse
ச ஜான் ரமேஷ் ஒரு கன்னத்தில் அறைந்தால் மறு கன்னத்தை காட்டசொன்ன ஜீசஸ் பார்த்துகொள்வார் .அவர் ஜீவனுள்ள தேவன் .பழிவாங்குதல் அவர்குரியது .
Rate this:
Share this comment
Cancel
குமரன் - Kanyakumari,இந்தியா
06-ஜூலை-201012:01:30 IST Report Abuse
குமரன் இதிலிருந்து கேரளம் சிறுக சிறுக தீவிரவாத தலிபான் கொள்கைகளை நோக்கி போகிறது எனபது தெரிகிறது. கூடிய விரைவில் பாரதம் முழுவதும் பரவாமல் தடுக்க இந்த மதச்சார்பின்மை கேரளா அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். எடுக்குமா?
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X