சம்பவம் செய்தி

தமிழ்நாடு

பழநி யானைப்பாதையில் திடீர் நிலச்சரிவு - படிப்பாதையில் பக்தர்கள் திரும்பினர்

Updated : அக் 16, 2011 | Added : அக் 16, 2011 | கருத்துகள் (1)
Share
Advertisement
பழநி: பழநி மலைக்கோயிலுக்கு செல்லும் யானைப்பாதையில் திடீர் நிலச்சரிவு ஏற்பட்டதால் திரும்பி வரும் பக்தர்கள் படிப்பாதை மற்றும் வின்ச் மூலம் கீழே வந்த வண்ணம் உள்ளனர். அறுபடை வீடுகளில் ஒன்றான பழநி முருகன் கோயில் பகுதிகளில் கடந்த 4 நாட்களாக மழை பெய்து வந்தது. இந்நிலையில் நேற்று இரவு பெய்த கனமழையில் தொடர் மழைக்கு யானைப்பாதையில் வள்ளிச்சுணை அருகில் நிலச்சரிவு ஏற்பட்டது.
பழநி யானைப்பாதையில் திடீர் நிலச்சரிவு - படிப்பாதையில் பக்தர்கள் திரும்பினர்

பழநி: பழநி மலைக்கோயிலுக்கு செல்லும் யானைப்பாதையில் திடீர் நிலச்சரிவு ஏற்பட்டதால் திரும்பி வரும் பக்தர்கள் படிப்பாதை மற்றும் வின்ச் மூலம் கீழே வந்த வண்ணம் உள்ளனர். அறுபடை வீடுகளில் ஒன்றான பழநி முருகன் கோயில் பகுதிகளில் கடந்த 4 நாட்களாக மழை பெய்து வந்தது. இந்நிலையில் நேற்று இரவு பெய்த கனமழையில் தொடர் மழைக்கு யானைப்பாதையில் வள்ளிச்சுணை அருகில் நிலச்சரிவு ஏற்பட்டது. ஆனால் இரவு நேரம் என்பதால் பக்தர்கள் யாருக்கும் சேதம் இல்லை. இதனால் இந்த வழியில் பக்தர்கள் செல்ல முடியாத நிலை உருவானது. மேலும் யாரும் செல்ல வேண்டாம் என்றும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

நேற்று கார்த்திகை விரதம் என்பதால் பக்தர்கள் அதிகம்பேர் வந்திருந்தனர். மலைக்கு சென்ற பக்தர்கள் படிப்பாதை மற்றும் வின்ச், ரோப்கார் மூலம் பக்தர்கள் திரும்பி வருகின்றனர். நிலச்சரிவு காரணமாக பாதிக்கப்பட்ட பகுதிகளை சீர் செய்ய 2 நாட்கள் ஆகும் என வனத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். பழநியில் இது வரை நிலச்சரிவு ஏற்பட்டது கிடையாது என்பது குறிப்பிடத்தக்கது.


அன்னூரில் 50 ஆயிரம் வாழைகள் சேதம்: கோவை மாவட்டம் அன்னூர் தெற்கு பகுதியில் கடந்த 3 நாட்களாக பலத்த காற்றுடன் கூடிய மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக சென்னம்பட்டி, கவுன்டநாயக்கன் புதூர், சாத்தன்பாளையம் பகுதியில் வாழைகள் பெரும் சேதமுற்றுள்ளன. சுமார் 5 ஆயிரம் ஏக்கர் நிலத்தல் 50 ஆயிரம் வாழைமரங்கள் முறிந்தன. இதன் சேதம் ரூ. 1 கோடி இருக்கும். சில பகுதிகளில் மின் துண்டிப்பும் ஏற்பட்டுள்ளது. இதனால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நஷட்ஈடு வழங்க வேண்டும் என்றும் அரசுக்கு கோரப்பட்டுள்ளது.


Advertisement




வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
noordeen - riyadh ,சவுதி அரேபியா
16-அக்-201114:18:55 IST Report Abuse
noordeen ஏழை விவசாயிகள் கடன் வாங்கித்தான் வாழை பயிரிட்டிருப்பார்கள், முதல்வர் பார்த்து அவர்களுக்கு ஏதாவது உதவி செய்தால் நன்றாக இருக்கும்...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X