தலைநகர் டில்லி-டேராடூன் இடையே அதிவேக வந்தே பாரத் ரயில் சேவை தொடங்கப்பட்டது. இன்று காலை 11 மணியளவில் பிரதமர் மோடி டில்லியில் இருந்து வீடியோ கான்பரன்சிங் வாயிலாக ரயில் சேவையை பச்சை கொடியசைத்து துவக்கி வைத்தார். டிவிட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் இந்த நிகழ்ச்சி வைரலாகி வருகிறது.
![]()
|
செமி ஹைஸ்பீட் ரயில் ரகத்தைச் சேர்ந்த வந்தே பாரத் 83 மணிக்கு கி.மீ., வேகத்தில் செல்லக்கூடியது. அதிகபட்சமாக மணிக்கு 130 கி.மீ., வேகத்தில் செல்லும் திறன்கொண்ட இந்த ரயில், ஆயிரம் பயணிகளுக்குமேல் சுமந்து செல்லக்கூடியது. ஜப்பான் ஹை ஸ்பீடு புல்லட் ரயில்கள் மணிக்கு சுமார் 300 கி.மீ., வேகத்தில் செல்லக்கூடியவை.
வருங்காலத்தில் இந்தியாவின் முக்கிய நகரங்களை இணைக்க புல்லட் ரயில் திட்டம் கொண்டுவர பாஜ., அரசு திட்டமிட்டு வருகிறது. இதற்கு முன்னோடியாக வந்தே பாரத் ரயில்கள் அமையும் எனக் கூறப்படுகிறது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement