சம்பவம் செய்தி

தமிழ்நாடு

தமிழக சட்டசபைக்கு முன்கூட்டி தேர்தல் இல்லை: நவீன் சாவ்லா

Updated : ஜூலை 06, 2010 | Added : ஜூலை 06, 2010
Advertisement

சென்னை: "தமிழக சட்டசபைக்கு முன்கூட்டியே தேர்தல் இல்லை' என, இந்திய தலைமை தேர்தல் கமிஷனர் நவீன் சாவ்லா தெரிவித்தார். இந்திய தலைமை தேர்தல் கமிஷனர் நவீன் சாவ்லா, நேற்று சென்னை வந்தார். விமான நிலையத்தில் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:  பீகார், ஒரிசாவில் சட்டசபைத் தேர்தல் ஆயத்தப் பணிகள் நடைபெற்று வருகின்றன. தமிழகத்தில் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள சட்டசபை பொதுதேர்தல் குறித்து, நாளை (இன்று ) மாவட்ட தேர்தல் அதிகாரிகள் மற்றும் போலீஸ் உயரதிகாரிகளுடன் விவாதிக்க உள்ளோம். இது தேர்தல் கமிஷனின் வழக்கமான செயல்பாடு தான். இதனால் தமிழக சட்டசபைக்கு முன்கூட்டியே தேர்தல் வருமென சொல்லமுடியாது.  தற்போது நடைமுறையில் உள்ள, "எலக்ட்ரானிக்' ஓட்டுப்பதிவு முறையில் முறைகேடு நடக்க வாய்ப்புள்ளதாக தேர்தல் கமிஷன் கருதவில்லை. தேர்தல் கமிஷன் குறித்து தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த் விமர்சித்தது பற்றி ஆராய்ந்து வருகிறோம்.
இவ்வாறு நவீன் சாவ்லா கூறினார்.


Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X