புத்தாண்டுக்குள் தெலுங்கானா கனவை நனவாக்குங்கள் : ஆந்திராவில் அத்வானி வலியுறுத்தல்

Added : அக் 19, 2011
Share
Advertisement
புத்தாண்டுக்குள் தெலுங்கானா கனவை நனவாக்குங்கள் : ஆந்திராவில் அத்வானி வலியுறுத்தல்

நிஜாமாபாத்: ""பிரதமர் மன்மோகன் சிங்கும், காங்கிரஸ் தலைவர் சோனியாவும் உறுதியான முடிவெடுத்து, புத்தாண்டுக்குள் தனித் தெலுங்கானா கனவை நனவாக்க வேண்டும்,'' என, பாரதிய ஜனதா மூத்த தலைவர் அத்வானி வேண்டுகோள் விடுத்தார்.

ரத யாத்திரை மேற்கொண்டுள்ள அத்வானி நேற்று, ஆந்திர மாநிலம் நிஜாமாபாத்தில் நிருபர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது: லோக்சபா தேர்தலின் போது, தனித் தெலுங்கானா உருவாக்கப்படும் என, காங்கிரஸ் கட்சி உறுதியளித்துவிட்டு, ஆட்சிக்கு வந்ததும் பின்வாங்கி விட்டது. ஆந்திராவில் காங்கிரஸ் ஆட்சியில் உள்ளதால், தெலுங்கானாவை கண்டு கொள்ளாமல் மத்திய அரசு உள்ளது. தனித் தெலுங்கானா அமைய வேண்டும் என்ற இப்பகுதி மக்களின் கனவை, புத்தாண்டுக்குள் நனவாக்க வேண்டும். இதற்கு, பிரதமர் மன்மோகன் சிங்கும், காங்கிரஸ் தலைவர் சோனியாவும் உறுதியான முடிவு எடுத்து, பிறக்கும் 2012ம் ஆண்டு ஜனவரி 1ம் தேதிக்குள் தனித் தெலுங்கானா உருவாக வழி வகை காண வேண்டும். இது தொடர்பான மசோதாவை, வரவிருக்கும் பார்லிமென்டின் குளிர்காலக் கூட்டத்தொடரில் கொண்டு வர வேண்டும். தனித் தெலுங்கானா மாநிலம் அமைப்பதற்கான தீர்மானத்தை ஆந்திர சட்டசபையில் நிறைவேற்ற வேண்டிய அவசியம் இல்லை. குளிர்காலக் கூட்டத்தொடருக்குள்ளேயே தனித் தெலுங்கானா அமைப்பதற்கான மசோதாவை பார்லிமென்ட் நிறைவேற்ற முடியும். கடந்த தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியின் போது, அரசியல் அமைப்பு சட்டம் விதி 3ன் கீழ், புதிய மாநிலங்கள் உருவாக்க, மத்தியில் ஆளும் அரசுக்கு அதிகாரம் உள்ளது என கூறப்பட்டுள்ளது. எனவே பிரதமரும், சோனியாவும் நினைத்தால், தெலுங்கானா பிரச்னைக்கு தீர்வு கிடைக்கும். தனித் தெலுங்கானாவுக்காக, அரசும், மத்திய உள்துறை அமைச்சகமும் 15 நாட்களில் முடிவெடுத்து தீர்வு காண முடியும். இவ்வாறு அத்வானி பேசினார்.

அனந்தகுமார், பா.ஜ., மூத்த தலைவர் : வரவிருக்கும் பார்லிமென்ட் கூட்டத்தொடரில் புயலை கிளப்ப, பாரதிய ஜனதா தயாராக இருக்கிறது. இதுவரை கிளப்பப்பட்டுள்ள ஊழல் குற்றச்சாட்டுகளுக்கு பதிலளிக்க முடியாமல், மத்திய அரசு விழி பிதுங்கி நிற்கிறது. ஊழலுக்கு எதிரான அத்வானியின் யாத்திரையைப் பார்த்து, காங்கிரஸ் மவுனம் காக்கிறது. தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியின் போது, எவ்வித ஊழல் இல்லை. எனவே, எவ்வித குற்றச்சாட்டையும் அவர்களால் சொல்ல முடியவில்லை. அத்வானி யாத்திரை, பார்லிமென்ட் குளிர்காலக் கூட்டத்தொடரை மனதில் வைத்தே திட்டமிடப்பட்டது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X