விமான டிக்கெட் பாணியில் ரயில் டிக்கெட் விற்க பரிசீலனை: தினேஷ் திரிவேதி

Updated : அக் 21, 2011 | Added : அக் 19, 2011 | கருத்துகள் (10)
Share
Advertisement
புதுடில்லி:தேவை அதிகமானால் கட்டணம் அதிகமாகும் என்ற வகையில் ரயில் டிக்கெட் பெற்றுக் கொள்ளும் திட்டத்தை அமல்படுத்த ரயில்வே துறை பரிசீலித்து வருகிறது என, அந்தத் துறையின் அமைச்சர் தினேஷ் திரிவேதி கூறினார்.ஜி.பி.எஸ்., அடிப்படையிலான சிம்ரன் தொழில்நுட்பத்துடன் கூடிய, "ரியல் டைம் டிரெய்ன் இன்பர்மேஷன் சிஸ்டம்' என்ற திட்டத்தை ரயில்வே துறை விரைவில் அறிமுகப்படுத்த உள்ளது

புதுடில்லி:தேவை அதிகமானால் கட்டணம் அதிகமாகும் என்ற வகையில் ரயில் டிக்கெட் பெற்றுக் கொள்ளும் திட்டத்தை அமல்படுத்த ரயில்வே துறை பரிசீலித்து வருகிறது என, அந்தத் துறையின் அமைச்சர் தினேஷ் திரிவேதி கூறினார்.

ஜி.பி.எஸ்., அடிப்படையிலான சிம்ரன் தொழில்நுட்பத்துடன் கூடிய, "ரியல் டைம் டிரெய்ன் இன்பர்மேஷன் சிஸ்டம்' என்ற திட்டத்தை ரயில்வே துறை விரைவில் அறிமுகப்படுத்த உள்ளது என, மத்திய ரயில்வே அமைச்சர் தினேஷ் திரிவேதி நேற்று டில்லியில் நிருபர்களிடம் கூறினார். ஆரம்பத்தில் இந்த முறை மூலம், ராஜ்தானி மற்றும் சதாப்தி ரயில்கள் பற்றிய விவரங்களையும், அவை எங்கே, எவ்வளவு வேகத்தில், எவ்வளவு தாமதமாக, எந்த நிலையத்தை நோக்கி வந்து கொண்டிருக்கின்றன, எத்தனை பெட்டிகள் உள்ளன என்பது உட்பல பல விவரங்களை http://www.simran.in என்ற இணையதளத்தை கிளிக் செய்வதன் மூலம் அறிந்து கொள்ளலாம். இந்த முன்னோடித் திட்டம் விரைவில் துவக்கப்படும் என்றும் திரிவேதி கூறினார்.இந்த முறையில் 09415139139 என்ற மொபைல் எண்ணுக்கு ரயிலின் எண்ணை குறிப்பிட்டு, பயணிகள் எஸ்.எம்.எஸ்., அனுப்பினால், உடன் அந்த ரயில் பற்றிய தகவல்கள் வரும். சில ரயில்களில் இந்த முறை அறிமுகப்படுத்தப்பட்டு, செயல்பாட்டில் உள்ளது. படிப்படியாக விஸ்தரிக்கப்படும் என்றும் தெரிவித்தார்.

பொருளாதார ஆசிரியர்கள் மாநாட்டில் பேசிய திரிவேதி கூறியதாவது:தேவை அதிகமாகும் போது, கூடுதல் விலை கொடுத்து ரயில் டிக்கெட் வாங்கிக் கொள்ளும் முறையை அமல்படுத்தவும் ரயில்வே துறை பரிசீலித்து வருகிறது. விமான நிறுவனங்கள் இதுபோன்ற கட்டண முறையை ஏற்கனவே பின்பற்றி வருகின்றன. ரயில்வே சரக்கு போக்குவரத்தில், சற்று வித்தியாசமாக இந்த கட்டண முறை ஏற்கனவே அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. "டைனமிக் பேர் சிஸ்டம்' என்ற அந்த முறை அமலானால், தேவை அதிகரிக்கும் போது, ரயில் டிக்கெட் கட்டணமும் அதிகமாக இருக்கும். ரயில்வேயின் நிதி நிலைமையை மேம்படுத்த இது போன்ற திட்டங்கள் பரிசீலிக்கப்பட்டு வருகின்றன.குறைந்தபட்ச டிக்கெட் கட்டணம் ஒரு ரூபாயாக உள்ளது. அதே நேரத்தில், பிளாட்பாரம் டிக்கெட் மூன்று ரூபாயாக உள்ளது. இதையும் முறைப்படுத்த தீர்மானித்துள்ளோம். பிளாட்பாரம் டிக்கெட் 10 ரூபாயாக உயர்த்தப்பட வேண்டும் என, நான் நினைக்கிறேன்.ரயிலில் பயணம் செய்வதை விட, பஸ்களில் பயணம் செய்வது ஏழு மடங்கு செலவு அதிகமாக உள்ளது. இருந்தாலும், சாலை மார்க்கமாகவும் ஏழை மக்கள் பயணம் செய்கின்றனர்; அதற்கான கட்டணத்தையும் செலுத்துகின்றனர். அதனால், ரயில் கட்டணத்தை உயர்த்தும் போது, அதையும் செலுத்த அவர்கள் தயாராக இருப்பர்.ரயில்வேக்கு பயணிகள் மூலம் வரும் வருவாயில் 91 சதவீதம், முன்பதிவு செய்யப்படாத டிக்கெட் கட்டணம் மூலம் வருகிறது. அதனால், இந்தக் கட்டணத்தை உயர்த்தினால், ஏழைகளில் ஏழைகளாக உள்ளவர்கள் பாதிக்கப்படுவர். எனவே, அவர்களை பாதிக்காத வகையில் கட்டணத்தை உயர்த்த தீர்மானித்துள்ளோம்.இவ்வாறு தினேஷ் திரிவேதி கூறினார்.

Advertisement
வாசகர் கருத்து (10)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
loganathan - attur,இந்தியா
24-அக்-201106:38:41 IST Report Abuse
loganathan நடுத்தர வர்க்க பிரதிநிதிகள் இல்லாமல் மேல் தட்டு மக்கள் சொகுசு அறையில் அமர்ந்து இது போன்று முடிவுகள் எடுப்பது எவளவு அபத்தம் பாருங்கள்....
Rate this:
Cancel
RAMALINGAM MANI - Chennai,இந்தியா
23-அக்-201111:04:42 IST Report Abuse
RAMALINGAM MANI குறைந்தபட்ச ரயில் கட்டணத்தை ருபாய் ஐந்து என்று நிர்ணயம் செய்யலாம் , பிளாட்பாரம் டிக்கெட் ருபாய் மூன்று போதும் , மந்திரி சொல்வது போல் செய்யவேண்டுமென்றால் அதி நவீன ரயில் அறிமுகப்படித்தி விமானத்தை விட அதிக கட்டணத்தை விதிக்கலாமே?
Rate this:
Cancel
Timothy chelliah - Vellore ,இந்தியா
21-அக்-201109:11:08 IST Report Abuse
Timothy chelliah Its seems like a good idea. Lets see how it works in future. Because as per the news 91 % profit comes from the unreserved tickets taken by the average family people. Rest of the reserved tickets being controlled by agents and sold by them. I have heard from my co-passengers that for a 441 Rs ticket they paid 500 Rs bribe to the agent. In-stead of giving money to the agents we can give to Indian railways.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X