2 ஜி ஊழல்;ராஜா- கனிமீது நம்பிக்கைமோசடி குற்றச்சாட்டு - ஆயுள் தண்டனை வரை போகும்

Updated : அக் 23, 2011 | Added : அக் 22, 2011 | கருத்துகள் (105)
Advertisement
Court to frame charges in 2G scam today,2 ஜி ஊழல்; இன்று குற்றப்பத்திரிகை வரைவு  - சிறப்பு கோர்ட் நீதிபதி உத்தரவு பிறப்பி��

புதுடில்லி: காற்று வழியில் ( 2-ஜி ஸ்பெக்ட்ரம் அலை வரிசை ) பல லட்சம்கோடி ரூபாயை விழுங்கிய ஊழல் வழக்கில் பாட்டியாலா சிறப்பு கோர்ட் குற்றப்பத்திரிகை வரைவு தொடர்பாக இன்று உத்தரவு பிறப்பித்தது. டில்லியில் முகாமிட்டுள்ள தி.மு.க,. தலைவர் கருணாநிதி காலையில் சோனியாவை சந்தித்தார். 2ஜி வழக்கு நடக்கும் கோர்ட்டில் கனியின் தாயார் ராஜாத்தி காத்திருந்தார்.

ராஜா மற்றும் கனிமொழி , சந்தோலியா, சித்தார்த் பெகுரா, ரிலையன்ஸ் தொலைத் தொடர்புப் பிரிவு அதிகாரிகள் கவுதம் ஜோஷி, ஹரி நாயர், சுரேந்திரா பிபாரா ஆகியோ் மீது செக்சன் 409 நம்பிக்கை மோசடி மற்றும் ஊழல், கிரிமினல் சதி உள்ளிட்ட குற்றச்சாட்டுகள் ஏற்றுகொள்ளப்பட்டு வரையப்பட்டதாக நீதிபதி அறிவித்தார். குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் போதிய ஆதாரங்கள் இருப்பதாக நீதிபதி ஏற்றுக்கொண்டார்.

700 பக்க குற்றப்பத்திரிக்கை : குற்றச்சாட்டு வரைவு செய்யப்படுவதாக நீதிபதி குற்றவாளிகளிடம் தெரிவித்தார். ஆனால் நாங்கள் எதுவும் படிக்கவில்லை என்று தெரிவித்தனர். உடனே கோர்ட்டில் இருந்து படிக்கவும் என்று நேரம் ஒதுக்கினார். இது 700 பக்கங்களை கொண்டதாக இருக்கிறது.

இதனை தொடர்ந்து இனி வரும் காலங்களில் நடக்கும் விசாரணையின் போக்கில் தீர்ப்பு வழங்கப்படும். 409 செக்சன் படி குற்றம் நிரூபிக்கப்பட்டால் குறைந்தது 7 ஆண்டுகள் முதல் ஆயுள் தண்டனை வரை வழங்க முடியும். மேலும் இந்த செக்சன் குற்றவாளிகள் ஜாமினில் வருவது மிக கடினம் . இதனால் தான் நமபிக்கை மோசடி குற்றச்சாட்டுக்கு குற்றவாளிகள் வக்கீல்கள் தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். குற்றச்சாட்டு வரையப்பட்ட பின்னர் ஜாமின் வழங்கலாம் என சுப்ரீம் கோர்ட் தெரிவித்த கருத்தின்படி ஜாமினுக்கு குற்றவாளிகள் முயற்சி செய்யலாம். இத‌ே நேரத்தில் பெண் என்பதால் கனி‌மொழிக்கு மட்டும் ஜாமின் கிடைக்க வாய்ப்பு இருப்பதாக வக்கீல்கள் கூறுகின்றனர்.

சு.சாமி பெரும் மகிழ்ச்சி : 2 ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கில் மக்கள் ஒத்துழைப்பு மூலம் வேகமான நடவடிக்கை எடுக்கப்பட்டதற்கு பெரும் மகிழ்ச்சி அடைவதாக ஜனதாகட்சி தலைவர் சுப்பிரமணியசாமி தெரிவித்துள்ளார். இந்த நாள் 2 ஜி வழக்கில் ஒரு முக்கியமான நாள் என்றார்.

மத்திய அரசுக்கு பெரும் தர்மச்சங்கடத்தை ஏற்படுத்திய ஸ்பெக்ட்ரம் விவகாரம் தொடர்பாக மத்திய அமைச்சர்கள் ராஜா, தயாநிதி ஆகியோர் பதவியை இழந்தனர். பிரதமர் முதல் நிதி அமைச்சகம் வரை ஒரு ஆட்டம் கண்டது.இந்த ஊழல் வழக்கில் மாஜி அமைச்சர் ராஜா, தி.மு.க., தலைவர் கருணாநிதியின் மகளான கனிமொழி எம்.பி., மற்றும் கலைஞர் தொலைக்காட்சி நிர்வாக இயக்குனர் சரத்குமார் ராஜாவின் உதவியாளர் சந்தோலியா, தொலைத் தொடர்பு துறை முன்னாள் செயலாளர் சித்தார்த் பெகுரா, ஸ்வான் டெலிகாம் உரிமையாளர் ஷாகித் பல்வா, இயக்குனர் வினோத் கோயங்கா. யுனிடெக் நிர்வாக இயக்குனர் சஞ்சய் சந்திரா, ரிலையன்ஸ் தொலைத் தொடர்பு பிரிவு அதிகாரிகள் கவுதம் ஜோஷி, ஹரி நாயர், சுரேந்திரா பிபாரா , திரைப்ப‌ட தயாரிப்பாளர் கரீம் மொராணி, உள்பட 17 பேர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. தற்போது பல மாதங்களாக திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். மேற்கூறிய 17 பேரும் இன்று காலையில் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டனர். இவர்கள் மீது ஊழல் மற்றும் தடுப்பு , ஏமாற்றியது, உயர்பொறுப்பை தவறாக பயன்படுத்தியது, மற்றும் நம்பிக்கை துரோகம் உள்ளிட்ட குற்ற பிரிவுகளின் வழக்கு பதிவு செய்யப்பட்டு குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த குற்றப்பத்திரிகை தொடர்பாக வரைவு செய்யும் அடுத்தக்கட்டத்திற்கு இன்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான விவாதம் கடந்த 4 மாதங்களாக நடந்து வந்தது. இதில் எந்த குற்றச்சாட்டுகளை ஏற்பது என்பது குறித்து இன்று நீதிபதி ஓ.பி.,சைனி உத்தரவு பிறப்பித்தார். இதனை தொடர்ந்து குற்றவாளிகள் மற்றும் சி.பி.ஐ., தரப்பில் விவாதங்கள் துவங்கும்.


டில்லியில் கருணாநிதி: இதற்கிடையில் தி.மு.க.,தலைவர் கருணாநிதி நேற்று டில்லி புறப்பட்டு சென்றார். இவர் சிறையில் இருக்கும் கனிமொழியை பேசினார். திகார் சிறையில் கனிமொழியை கருணாநிதி சந்தித்து பேசுவது இது மூன்றாவது முறையாகும்.


இந்த சந்திப்பு குறித்து பேட்டியளித்த சிறைத்துறை அதிகாரி,இந்த சந்திப்பு சுமார் அரை மணி நேரம் நீடித்தது. கனிமொழியை சந்தித்த பின்னர் கருணாநிதி சிறையிலிருந்து மாலை 5.30 மணிக்கு மேல் கிளம்பி சென்றார். கனிமொழியை சந்திக்க 3 பேருக்கு அனுமதி கேட்கப்பட்டிருந்தது. ஆனால் கனிமொழியை, கருணாநிதி மற்றும் ராஜாத்தி மட்டுமே சந்தித்து பேசினர். இந்த சந்திப்பு சிறை வளாகத்தில் நடந்தது என்றும் கூறினார்.


மற்றொரு சிறை அதிகாரி ஒருவர் கூறுகையில், கனிமொழி, தனது பெற்றோரை பார்த்த போது அழுகவில்லை. தனது உறவினர்களை சந்தித்த போது கனிமொழி அழுதார் என பத்திரிகைகளில் வெளியான செய்திகளை பார்த்து அவர் கவலையடைந்தார். சிறையில் அவரை ஏராளமானோர் சந்தித்து பேசுகின்றனர். கனிமொழியை அவரது கணவர் அரவிந்தன் அடிக்கடி சந்தித்து பேசுகிறார் என கூறினார்.

பிரதமருடன் கருணாநிதி சந்திப்பு: டில்லி சென்றுள்ள தி.மு.க., தலைவர் கருணாநிதி, காலை காங்கிரஸ் கட்சி தலைவர் சோனியாவை சந்தித்து பேசினார். பின்னர் திகார் சிறையில் கனிமொழியை சந்தித்து பேசினார். இதன் பின்னர் அவர் பிரதமர் மன்மோகன் சிங்கை அவரது இல்லத்தில் சந்தித்து பேசினார்.

தயாநிதி மீதான விசாரணையில் தொய்வு : மாஜி அமைச்சர் தயாநிதி மற்றும் கலாநிதி ஆகியோர் மீது சி.பி.ஐ.,எப்.ஐ.ஆர்., பதிவு செய்ததோடு சம்பிரதாய ரெய்டு நடத்தப்பட்டது. ஆனால் இவர்களை விசாரணைக்கு அழைப்பது மற்றும் மேல் நடவடிக்கை தொடர்பாக சி.பி.ஐ.,முழுச்சுணக்கமாக இருந்து வருவதாக எதிர்கட்சியினர் குற்றம்சாட்டியுள்ளனர்.

Advertisement
வாசகர் கருத்து (105)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Ramamoorthy Panchapakesan - Chennai,இந்தியா
23-அக்-201113:21:59 IST Report Abuse
Ramamoorthy Panchapakesan செல்மூலம் பணம்பன்னியவர்கள் செல்லிலேயே ரொம்ப காலம் இருக்க வேண்டியிருக்குமோ என்னவோ!
Rate this:
Share this comment
Cancel
B SIVASUBRAMANIYAN S B - chennai,இந்தியா
23-அக்-201109:44:56 IST Report Abuse
B SIVASUBRAMANIYAN S B டூஜி ஊழல் குடும்பம் பல ஆண்டுகளுக்கு முன்னரே சிறைக்கு போக வேண்டிய குடும்பம். இனி தப்பிக்க முடியாது. நிரந்தர திகார் தான்.
Rate this:
Share this comment
villupuram jeevithan - villupuram,இந்தியா
23-அக்-201112:23:42 IST Report Abuse
villupuram jeevithanஇவ்வளவு நம்பிக்கை இருக்கக் கூடாது....
Rate this:
Share this comment
Cancel
Ramasami Venkatesan - Chennai - now in Brisbane - Aus,இந்தியா
23-அக்-201108:58:18 IST Report Abuse
Ramasami Venkatesan மந்திரிகள், எம்பிக்கள்,எம் எல் ஏக்கள், என்று பலரும் தான் செய்யும் பதவி பிரமாணத்தின் அர்த்தம் தெரிந்துதான் பிரமாணம் செய்கிறார்களா என்றே புரியவில்லை. பிரமானத்துக்கும் செயல்பாட்டுக்கும் சம்பந்தமே இல்லாமல் இருக்கிறது. பிரமாணம் என்ற ஒன்று தேவையா இந்நாட்டில். கோர்ட்களிலேயே சாட்சிகூண்டில் நான் சொல்லுவதெல்லாம் உண்மை என்று கீதையின் மேல் சத்தியம் செய்துவிட்டு பொய்கள் எவ்வளவு கொட்டுகிறது. முன்பெல்லாம் மனசாட்சிக்கு பயந்தார்கள் இப்போது அப்படி என்றால் என்ன என்று கேட்கிறார்கள். இவை எல்லாம் மறைய எவ்வளவு ஜன்மங்கள் ஆகுமோ.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X