சவுதி இளவரசர் காலமானார்

Added : அக் 22, 2011 | கருத்துகள் (1)
Share
Advertisement
சவுதி இளவரசர் காலமானார்

துபாய் : சவுதி அரேபிய பாதுகாப்பு மற்றும் விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சரும் இளவரசருமான சுல்தான் பின் அப்துல் அஜீஸ், 86, அமெரிக்காவில் காலமானார். சவுதி இளவரசர் அஜீஸ், அமெரிக்காவில் கடந்த ஜூன் மாதம் முதல் சிகிச்சை பெற்று வந்தார். அவருக்குப் புற்றுநோய் இருக்கலாம் எனக் கூறப்பட்டது. இந்நிலையில், சிகிச்சை பலனளிக்காமல் இவர் காலமானார். இவர், மன்னர் அப்துல்லாவின் சகோதரர். அஜீஸ், அடுத்த மன்னராகும் வாய்ப்பில் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இவரது உடல், சவுதி அரேபியாவுக்குக் கொண்டு வரப்பட்டு, 25ம் தேதி தலைநகர் ரியாத்தில் இறுதிச் சடங்குகள் நடக்கும். இவரது சகோதரரும், சவுதி உள்துறை அமைச்சருமான இளவரசர் நயீப் பின் அப்துல் அஜீஸ், 78, மன்னர் அப்துல்லாவுக்குப் பின், மன்னராகும் வாய்ப்பைப் பெற்றுள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
mohd ali - kotakinabalu ,மலேஷியா
23-அக்-201111:14:53 IST Report Abuse
mohd ali வில்வித்தையில் இந்தியாவிற்கு வெண்கலம் ஆறுதலான விஷயம்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X