கோர்ட் செய்தி

தமிழ்நாடு

வெடிபொருள் வழக்கில் ஏர்வாடி காசிம்க்கு ஜாமீன்

Added : ஜூலை 06, 2010
Advertisement

சென்னை:வெடிபொருள் வழக்கில் கைது செய்யப்பட்ட ஏர்வாடி காசிம்க்கு சென்னை ஐகோர்ட் ஜாமீன் வழங்கியது. அவர் மீதான வழக்கை இரண்டு மாதங்களில் விசாரித்து முடிக்க வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.ஆயுதச் சட்டம் மற்றும் வெடிமருந்து சட்டத்தின் கீழ், கடந்த 98ம் ஆண்டு மே மாதம் ஏர்வாடி காசிம் கைது செய்யப்பட்டார். இவர் மீதான வேறொரு வழக்கில் எட்டு ஆண்டு சிறை தண்டனையும், மற்றொரு வழக்கில் ஆயுள் தண்டனையும் விதிக்கப்பட்டது. இவருக்கு விதிக்கப்பட்ட ஆயுள் தண்டனையை சென்னை ஐகோர்ட் ரத்து செய்தது. எட்டு ஆண்டு சிறை தண்டனையையும் அனுபவித்து விட்டார்.வெடிமருந்து சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட வழக்கில் இவருக்கு ஜாமீன் கிடைக்கவில்லை.


இந்நிலையில் ஜாமீன் கோரி சென்னை ஐகோர்ட்டில் காசிம் மனுத் தாக்கல் செய்தார். மனுவை விசாரித்த நீதிபதி நாகமுத்து பிறப்பித்த உத்தரவு:ஒரு குற்றத்துக்கான தண்டனைக் காலத்தை விட, அதிக நாட்கள் சிறையில் இருந்தால் அந்த நபரை ஜாமீனில் விடுவிக்க வேண்டும் என சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது. இவர் மீதான வழக்கு விசாரணையை ஏன் விரைந்து முடிக்கவில்லை என அரசு தரப்பில் விளக்கம் அளிக்க முடியவில்லை. எனவே, மனுதாரருக்கு ஜாமீன் வழங்கப்படுகிறது.


பூந்தமல்லியில் தங்கியிருக்க வேண்டும். காலையில் கோர்ட்டிலும், மாலையில் போலீஸ் நிலையத்திலும் ஆஜராக வேண்டும். பொதுக் கூட்டங்களில் கலந்து கொண்டு, ஆத்திரமூட்டும் வகையில் பேசக் கூடாது. தங்கியிருக்கும் இடத்தை போலீசாருக்கு தெரிவிக்க வேண்டும். இந்த வழக்கை, இரண்டு மாதங்களில் பூந்தமல்லி சிறப்பு கோர்ட் விசாரித்து முடிக்க வேண்டும்.இவ்வாறு நீதிபதி நாகமுத்து உத்தரவிட்டுள்ளார்.


Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X