கையை சிதைத்து தலிபான் பாணி தண்டனை

Updated : ஜூலை 08, 2010 | Added : ஜூலை 06, 2010 | கருத்துகள் (86)
Advertisement
  Controversial, question, paper,hand, cut off,கை,சிதைத்து, தலிபான்,தண்டனை

கொச்சி : கேரளாவில் கல்லூரி பேராசிரியருக்கு தலிபான் பாணி தண்டனை தந்தவர்கள் தொடர்பாக ஒருவரை விசாரித்து, அவர் வீட்டில் சோதனை நடத்திய போலீசாரை மிரட்டிய சம்பவம் நடந்தது. மேலும், இம்மாதிரி சட்டத்தை கையில் எடுத்துக் கொண்டு செயல்பட்டதை அகில இந்திய அளவில் இஸ்லாமிய அமைப்புகள் கண்டனம் செய்திருக்கின்றன.


கேரள மாநிலம் தொடுபுழா அடுத்த ஆனிக்காடு ஹாஸ்டல் சந்திப்பு அருகே வசிப்பவர் டி.ஜெ.ஜோசப். இவர், தொடுபுழா நியூமேன் கல்லூரியில் மலையாள மொழித் துறை பேராசிரியராக பணியாற்றி வருகிறார்.இவர், குறிப்பிட்ட மதத்தவர் புண்படும்படியான கேள்வித்தாள் தயாரித்தார் என்பது புகார். ஆனால் இது விவகாரம் ஆனதும் ஜோசபை சஸ்பெண்ட் செய்து கல்லூரி நிர்வாகம் நடவடிக்கை எடுத்தது.


ஜோசப் செயலில் ஆத்திரமடைந்த கும்பல், பழிவாங்க காத்திருந்தது. கடந்த 4ம் தேதி அதிகாலை 5 மணிக்கு பேராசிரியரும், அவரது தாய் ஏலிக்குட்டியும், சகோதரி கன்னியாஸ்திரியுமான மேரி ஸ்டெல்லா ஆகியோரும் சர்ச்சில் பிரார்த்தனைக்கு காரில் சென்றனர்.அங்கிருந்து திரும்பி வரும் வழியில் அவரது வீட்டுக்கு அருகே மாருதி வேனில் வந்த ஒரு கும்பல் வழிமறித்தது. பின், டிரைவர் இருக்கையில் இருந்த பேராசிரியரை கீழே இறக்கி அவரது வலது கையின் முன்பகுதியை பயங்கரமாக கோடரி போன்ற கருவியால் சிதைத்து தப்பினர்.அதை பார்த்து அலறிய அவரது தாயையும், சகோதரியையும் அக்கும்பல் கீழே தள்ளி மிரட்டியது. பின், அவர்கள் வந்த வேனிலேயே ஏறி தப்பிச் சென்றது.


16 மணி நேர சிகிச்சை: கொச்சியில் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பேராசிரியருக்கு அங்கு 16 மணி நேரம் தீவிர அறுவை சிகிச்சை நடந்தது. சிகிச்சையில் மைக்ரோ வாஸ்குலர் அறுவை சிகிச்சை பிரிவு தலைவர் டாக்டர் ஆர்.ஜெயக்குமார், முதன்மை பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை டாக்டர்கள் ஆசா சிரியாக், செந்தில்குமார் ஆகியோர் அடங்கிய குழு பங்கேற்றது.அறுவை சிகிச்சை 4ம் தேதி காலை 10 மணிக்கு துவங்கி மறுநாள் அதிகாலை 3.30 மணிக்கு முடிந்தது. சிகிச்சை 16 மணி நேரம் நீடித்தது. அவரது கையில் வெட்டப்பட்ட பகுதியில் சேதமடைந்த சதைக்கு பதிலாக அவரது தொடை பகுதியில் இருந்து சதை எடுக்கப்பட்டு பொருத்தப்பட்டது. ஜோசப் நிலைமை சீராக இருப்பதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.


இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து, ஜோசப் கையை சிதைத்தாக ஜாபர் மற்றும் அஷ்ராபை கைது செய்து வழக்கு பதிவு செய்தனர்அதையடுத்து, போலீசார் சில வீடுகளில் சோதனை நடத்தினர். அந்த வீடுகளில் ஜோசப்பை தாக்கியதாக போலீசாரால் சந்தேகிக்கப்படும் நபரான ஒரு மதவாத இயக்கத்தின் ஆதரவாளரான ரஷீத் (30) என்பவரது வீடும் ஒன்று. சம்பவத்தன்று, ஜோசப்பை தாக்குவதற்காக, குற்றவாளிகள் வந்த வேனை வாங்கிக் கொடுத்தவராகக் கருதப்படும் கே.கே.அலி என்பவரின் நண்பர் தான் ரஷீத்.இதனால் ரஷீத், இச்சம்பவம் குறித்து விசாரித்து வரும் புலனாய்வுக் குழுவிலுள்ள சர்க்கிள் இன்ஸ்பெக்டர் பேமஸ் வர்கீஸ் என்பவரை மிரட்டியதாக, போலீசார் தெரிவித்துள்ளனர். ரஷீத் மீது, மிரட்டல் குற்றம் உள்ளிட்ட இரண்டு பிரிவுகளின் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. தவிரவும் கைது செய்யப்பட்டவர்கள் உட்பட பலருடைய மொபைல் போனில் வந்த தகவல்கள் குறித்தும் விசாரிக்கப்படுவதாக கூறப்பட்டது.


கண்டனம்: இதற்கிடையில், அகில இந்திய அளவில் பல்வேறு முஸ்லிம் அமைப்புகளின் பிரதிநிதிகள் ஒன்று சேர்ந்து வெளியிட்டுள்ள அறிக்கையில், இச்சம்பவம் குறித்து கண்டனம் தெரிவித்துள்ளனர்.


அறிக்கை விவரமாவது:சம்பந்தப்பட்ட பேராசிரியர் விஷயத்தில் சட்டம் தன் கடமையைச் செய்ய முடியும் என்று நாங்கள் நம்புகிறோம். அவர் மீது நடத்தப்பட்ட தாக்குதல், இஸ்லாம் மதத்தின் அடிப்படை தத்துவமான மன்னிப்பு வழங்கும் மாண்பிற்கு எதிரானது.தகுதியான அதிகாரிகள் இருக்கும் போது ஒருவர் சட்டத்தைக் கையில் எடுப்பதை இஸ்லாம் கடுமையாக எதிர்க்கிறது. அவருக்கு ரத்தம் வழங்கிய ஜமாத் -இ- இஸ்லாமி இந்த் அமைப்பின் இளைஞர் பிரிவையும் பிற தொண்டர்களையும் பாராட்டுகிறோம்.இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளனர்.


"மடையன் என்று சொல்லவில்லை' :திருவனந்தபுரம்:"கல்லூரி ஆசிரியர் தயாரித்த கேள்வி தான் மடத்தனமானது என்று சொன்னேனே தவிர, ஆசிரியரை மடையன் என்று சொல்லவில்லை' என, கேரள கல்வி அமைச்சர் எம்.ஏ.பேபி தெரிவித்தார்.நேற்று காலை சட்டசபையில் எதிர்க்கட்சி எம்.எல்.ஏ., கே.எம்.மானி பேசுகையில், "ஆசிரியரை மடையன் என்று அமைச்சர் பேபி பேசியது முற்றிலும் தவறானது. "இது எரிகிற தீயில் எண்ணெய் ஊற்றியது போல பயன்படுமே தவிர வேறு எதற்கும் பயன்படாது' என்றார்.அதற்கு பதிலளித்து பேசிய அமைச்சர் பேபி, "நான் அவ்வாறு பேசவில்லை. ஆசிரியரை மடையன் என்று பேசவே இல்லை. அவர் தயாரித்த கேள்வி மடத்தனமானது என்று மட்டும் தான் பேசினேன்' என்று மறுத்துள்ளார்.


Advertisement




வாசகர் கருத்து (86)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
இந்தியன் - chennai,இந்தியா
09-ஜூலை-201009:50:56 IST Report Abuse
இந்தியன் இது தாலிபான் பாணி என்றால் குஜராத்தில் நடந்தது என்ன வென்று சொல்வது தினமலர்... ?????
Rate this:
Share this comment
Cancel
ஜெகன் - abudhabi,இந்தியா
07-ஜூலை-201023:38:30 IST Report Abuse
ஜெகன் மதம் மாறும் ஹிந்துக்களுக்கு நல்ல பாடம். இதை இந்த நாடு புரிந்து கொள்ளட்டும். மேலும் கடவுள் யாரென்று புரிந்தவன் என்ன வென்று தெரிந்தவன் மனிதனிக்கே முக்கியத்துவம் கொடுப்பான். இதை கடவுள் புரிந்து கொள்ளட்டும்
Rate this:
Share this comment
Cancel
christopher - sanaa,ஏமன்
07-ஜூலை-201023:08:02 IST Report Abuse
christopher In this world no moderate people or terrorist people...moderates are providing finance to other group. If they are realy condeming this act let them provide finance to him & his family according to SHERIAL law. they wont ! fed up about their talk & protecting God. God created Adam & Eve , one man & one wife... at that time world population is 2. Now we have million & God told to have 4 or 5 wives.... redicules & those people dont like to provide their won child or sister as a fifth wife. Shame on them !
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X