மேலும் ஒரு தொங்குபால விபத்து: 50 பேர் பலி; பலரை தேடும் பணி தீவிரம்

Updated : அக் 30, 2011 | Added : அக் 30, 2011 | கருத்துகள் (2)
Advertisement
மேலும் ஒரு தொங்குபால விபத்து: 50 பேர் பலி

இட்டாநகர்: அருணாசல பிரதேசத்தில் ஒரு தொங்கு கயிறு பாலம் அறுந்து விழுந்ததில் 50 பேர் கொல்லப்பட்டனர், பலர் ஆற்றில் மூழ்கியதால் அவர்களது உடல்களை தேடும் பணி மீட்பு படையினரால் துரிதப்படுத்தப்பட்டுள்ளது.

இட்டாநகர் மேற்கு பகுதியில் உள்ள காமங் மாவட்டத்தில் ஆற்றுப்பகுதியின் மேல் ஒரு பழமையான கயிறு பாலம் உள்ளது. இந்த வழியாக 60 முதல் 70 பேர் வரை மொத்தமாக சென்றுகொண்டிருந்தனர். இதில் குறிப்பாக பலரும் இளம் வயதினர் மற்றும் மாணவ, மாணவிகள் அடங்குவர். பாரம் தாங்காத இந்த பாலம் அறுந்து விழுந்தது. இதில் அனைவரும் மொத்தமாக ஆற்றுக்குள் விழுந்தனர். ஆற்றில் வெள்ள நீர் பெருக்கெடுத்து ஓடியதால் பலரும் தண்ணீரில் இழுத்து செல்லப்பட்டனர். அருகில் இருந்த மலைவாழ் மக்கள் சிலரை காப்பாற்ற முயற்சித்தனர். இதில் 30 பேர் பிணமாக மீட்கப்பட்டனர். பலரது உடல்கள் தேடும் பணி நடந்து வருகிறது.


இம்மாவட்ட எஸ்.பி., கிமே அயா விபத்து குறித்து கூறுகையில்; 70 மீட்டர் நீளமும், 40 அடி அகலமும் கொண்ட இந்த பாலம் செப்பா நகரை இணைக்கிறது. ஒரே நேரத்தில் பலர் சென்றதால் பாலம் அறுந்து விழுந்திருக்கிறது. பலரது உடல்கள் தேடும் பணி தொடர்ந்து நடந்து வருகிறது. 30 க்கும் மேற்பட்டோர் மாயமாகி விட்டனர். சம்பவம் குறித்து விசாரணை நடத்தப்படுகிறது. உள்ளூர் மக்கள் உதவியுடன் மத்திய போலீஸ் படையினர் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.


கடந்த 23 ம் தேதி டார்ஜீலிங் பகுதியில் மரப்பாலம் அறுந்து விழுந்ததில் 34 பேர் பலியாயினர். இம்மாதத்தில் இன்றுடன் 2 பாலம் விழுந்து பலரது உயிரை காவு வாங்கியிருக்கிறது.

Advertisement




வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Pannadai Pandian - wuxi,சீனா
30-அக்-201111:28:08 IST Report Abuse
Pannadai Pandian இப்பகுதி கிழக்கு மாவட்டத்தில் உள்ளது. இங்கு வாழ்பவர்கள் நிஷி இன மக்கள்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X