அரசியல் செய்தி

தமிழ்நாடு

நூலக கட்டடத்தை மாற்றும் திட்டத்தைகைவிட அரசுக்கு விஜயகாந்த் கோரிக்கை

Added : நவ 03, 2011 | கருத்துகள் (12)
Share
Advertisement
நூலக கட்டடத்தை மாற்றும் திட்டத்தைகைவிட அரசுக்கு விஜயகாந்த் கோரிக்கை

சென்னை:""அண்ணா நூற்றாண்டு நூலகக் கட்டடத்தை குழந்தைகள் நல உயர் சிறப்பு மருத்துவமனையாக மாற்ற வேண்டிய அவசியம் எழவில்லை. அரசு தன் முடிவைக் கைவிட வேண்டும்,'' என, விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.


தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கை:சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள அண்ணா நூற்றாண்டு நூலகக் கட்டடம், குழந்தைகள் நல மருத்துவமனையாக மாற்றப்படும் என அரசு அறிவித்துள்ளது அதிர்ச்சியாக உள்ளது. அவ்வாறு மாற்ற வேண்டிய அவசியம் ஏதும் எழவில்லை. மக்கள் வரிப்பணம், 200 கோடி ரூபாயில், உயர் கல்விக் கட்டடங்கள் நிறைந்துள்ள பகுதியில், நூலகம் அமைந்துள்ளதால், கல்வியாளர்கள் எளிதில் வந்து செல்கின்றனர்.


குழந்தைகள் உயர் சிறப்பு மருத்துவமனை ஒன்றை, அரசு அமைக்க விரும்பினால், ஏற்கனவே உள்ள குழந்தைகள் நல மருத்துவமனையை மேம்படுத்தியிருக்கலாம். புதிதாக அமைக்க உள்ள துணை நகரத்திலோ, பிற பிற மாநகர்களிலோ அமைத்திருக்கலாம். கடந்த கால ஆட்சியில், அந்த கட்டடம் அமைக்கப்பட்டது என்ற காரணத்தால், இந்த ஆட்சி அதை மாற்றுகிறதோ என்ற சந்தேகம் எழுகிறது. மக்கள் பயன்பாட்டைக் கருத்தில் கொண்டு, நூலகக் கட்டடத்தை மாற்றக்கூடாது; அரசு தன் முடிவைக் கைவிட வேண்டும்.இவ்வாறு விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.


Advertisement




வாசகர் கருத்து (12)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Ansar - Abu Dhabi,இந்தியா
05-நவ-201102:42:35 IST Report Abuse
Ansar ஒரு வழியா வாயை திறந்திட்டாரப்பா எதிர்கட்சி தலைவர். இவ்வளவு நாளும் எங்கே இருந்தார்?
Rate this:
Cancel
Ganesh - Tsukuba,ஜப்பான்
04-நவ-201108:00:05 IST Report Abuse
Ganesh அய்யா நீங்க இன்னும் தமிழ் நாட்ல தான் இருக்கீங்களா.. உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள்..
Rate this:
Cancel
PRABHAKARAN - sivakasi,இந்தியா
04-நவ-201107:30:31 IST Report Abuse
PRABHAKARAN captain oru nalla thalaivar தே.மு.தி.க. adutha aatchiya pidikkum
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X