பெங்களூரு கோர்ட்டில் மீண்டும் ஆஜராக வேண்டும்: ஜெ.,க்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவு

Updated : நவ 06, 2011 | Added : நவ 04, 2011 | கருத்துகள் (65)
Share
Advertisement

புதுடில்லி:பெங்களூரு சிறப்பு கோர்ட்டில், மீண்டும் ஆஜராவதிலிருந்து விலக்கு அளிக்கக் கோரி, முதல்வர் ஜெயலலிதா தாக்கல் செய்த மனுவை, சுப்ரீம் கோர்ட் தள்ளுபடி செய்து விட்டது. அப்படி விலக்கு அளிப்பது தவறான முன்னுதாரணத்தை ஏற்படுத்தி விடும் என, நீதிபதிகள் தெரிவித்து விட்டனர். முதல்வர் ஜெயலலிதாவுக்கு எதிரான சொத்துக் குவிப்பு வழக்கு, பெங்களூரு சிறப்பு கோர்ட்டில் நடந்து வருகிறது. இந்த வழக்கில், கடந்த மாதம் 20 மற்றும் 21ம் தேதிகளில், ஜெயலலிதா ஆஜரானார்.அப்போது, ஜெயலலிதாவிடம், 567 கேள்விகள் கேட்கப்பட்டன. இன்னமும், கேள்விகள் கேட்க வேண்டியுள்ளதால், வரும் 8ம் தேதி, சிறப்பு கோர்ட்டில் மீண்டும் ஆஜராக வேண்டும் என, சிறப்பு கோர்ட் நீதிபதி உத்தரவிட்டார்.இந்த உத்தரவை எதிர்த்து, சுப்ரீம் கோர்ட்டில் ஜெயலலிதா மனு தாக்கல் செய்தார்.

அதில், "பெங்களூரு சிறப்பு கோர்ட்டில், ஏற்கனவே இரு முறை ஆஜராகியுள்ளதால், மீண்டும் ஆஜராக வேண்டும் என, கட்டாயப்படுத்த முடியாது.எனவே, சிறப்பு கோர்ட்டில், ஆஜராவதிலிருந்து தனக்கு விலக்கு அளிக்க வேண்டும்' என கோரியிருந்தார். இந்த மனு, நேற்று முன்தினம், சுப்ரீம் கோர்ட்டின் மூன்று நீதிபதிகள் கொண்ட பெஞ்ச் முன், விசாரணைக்கு வந்தது.

அப்போது, பெஞ்சில் இடம் பெற்றிருந்த நீதிபதிகளில் ஒருவரான தாக்கூர், "வழக்கின் பெஞ்ச் நீதிபதி பொறுப்பில் இருந்து விலகிக் கொள்கிறேன்' என, தெரிவித்தார்.

ஆனால், அதற்கான காரணம் எதுவும் குறிப்பிடப்படவில்லை. இதையடுத்து, ஜெயலலிதா மனு மீதான விசாரணை, நேற்றைக்கு ஒத்திவைக்கப்பட்டது. அதேநேரத்தில், தாக்கூருக்கு பதிலாக, அந்த பெஞ்சில், நீதிபதி தீபக் மிஸ்ரா இடம் பெறுவார் என அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், ஜெயலலிதாவின் மனு, நேற்று நீதிபதிகள் தல்வீர் பண்டாரி, தீபக் மிஸ்ரா ஆகியோர் அடங்கிய பெஞ்ச் முன், விசாரணைக்கு வந்தது.

அப்போது, ஜெயலலிதா தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், "பெங்களூரு சிறப்பு கோர்ட்டில் ஜெயலலிதா மீண்டும் நேரில் ஆஜராக வேண்டிய அவசியம் இல்லை. அவர், தன் வாக்குமூலத்தை எழுத்து மூலமாக சமர்ப்பிக்கலாம்'' என்றார்.

இந்த வாதத்தை ஏற்க மறுத்த நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு விவரம் வருமாறு: பெங்களூரு சிறப்பு கோர்ட்டில், நேரில் ஆஜராவதிலிருந்து ஜெயலலிதாவுக்கு விலக்கு அளிக்க முடியாது. அப்படி விலக்கு அளித்தால், அது தவறான முன்னுதாரணத்தை ஏற்படுத்தி விடும்.அத்துடன், அவருக்கு தனிச் சலுகை காட்டியதாகவும், அர்த்தமாகி விடும். தவறான முன்னுதாரணத்தை ஏற்படுத்த நாங்கள் விரும்பவில்லை. அதேநேரத்தில், ஜெயலலிதாவின் வாக்குமூலத்தைப் பதிவு செய்வதை, ஓரிரு நாட்களில் பெங்களூரு சிறப்பு கோர்ட் முடிக்கலாம்.முடிந்தால், ஜெயலலிதா ஆஜராக வேண்டிய தேதியை, நவம்பர் 8லிருந்து வேறு தேதிக்கு மாற்றலாம். புதிதாக ஒரு தேதியை நிர்ணயித்து, அந்த தேதியில் ஆஜராகும்படி, ஜெயலலிதாவுக்கு உத்தரவிடலாம்.இவ்வாறு, நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

Advertisement




வாசகர் கருத்து (65)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Arulkumar - Doho,கத்தார்
06-நவ-201100:53:50 IST Report Abuse
Arulkumar தப்புகளுக்கா வாதாடும் வக்கில்கள் இருக்கும் வரை தவறுகள் தொடர்து கொண்டுதான் இருக்கும் . நமது பாரதத்தின் சட்டங்களை மறு பரிசீலனை செய்ய வேண்டும்,அப்போதுதான் தவறுகள் குறையும் .அது வரை ஜெயா, கருணாநிதி போன்றவர்கள் தப்பு செய்து கொண்டுதான் இருப்பார்கள். ஜெயா இன்னும் மாறவில்லை அவரின் மதுபான சாலை இன்னும் தொடர்ந்து கொண்டு தான் இருக்கிறது.அவர்களுக supportka செயல் படும் உண்மை யின் உரைகள் இருக்கும் வரை இவர்களை போனவர்கள் திருந்த மாட்டார்கள் . தமிழகத்தில் முதலில் மகனுக்காக 100 கோடிகளை செலவு செய்தது மறந்து போன தமிழர் ஆகி நாம் .
Rate this:
Cancel
g t mani - Manama,பஹ்ரைன்
05-நவ-201121:15:14 IST Report Abuse
g t mani உப்பை தின்னவன் தண்ணி குடித்தே ஆகனும்.
Rate this:
Cancel
jagadeesh - chennai,இந்தியா
05-நவ-201121:11:45 IST Report Abuse
jagadeesh ஏதோ இருக்கிறது.ஜெயலலிதா முதல்வராக இருக்கும் நாட்கள் எண்ணபடுகின்றனவா?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X