சம்பவம் செய்தி

தமிழ்நாடு

துரோகம் இழைத்த மனைவியை கண்டம் துண்டமாக வெட்டி கொலை செய்தேன்: கணவன் வாக்குமூலம்

Added : நவ 06, 2011 | கருத்துகள் (3)
Advertisement

நந்தம்பாக்கம்: மனைவியின் உடலை, கண்டம் துண்டமாக வெட்டி, கிணற்றில் வீசிய கொடூரக் கணவனை, போலீசுõர் கைது செய்தனர். அவன் கொடுத்த தகவலின்படி, பாறாங்கற்களைக் கட்டி வீசிய தலை, கிணற்றிலிருந்து கண்டெடுக்கப்பட்டது. திருச்செந்தூர் அடுத்த, பிச்சவிளையைச் சேர்ந்தவர் சேதுராமன்,40. இவர், சிறுவயதில், குடும்பத் தகராறில் சென்னைக்கு ஓடி வந்து, மளிகைக் கடை மற்றும் தள்ளுவண்டிக் கடைகளில் வியாபாரம் செய்தார்.
நண்பர்களுடன், திண்டிவனத்தில் விபசுõர விடுதிக்கு, சேதுராமன் சென்ற போது, அங்கு, கடலூரைச் சேர்ந்த ஜெயா,16, என்ற பெண்ணுடன் ஜாலியாக இருந்தார். ஜெயாவின் அழகில் மயங்கி, அவரை சென்னைக்கு அழைத்து வந்த சேதுராமன், பெற்றோரின் எதிர்ப்பை மீறி, திருமணம் செய்து கொண்டார்.


சென்னை, கிண்டி மடுவங்கரையில், ஜெயாவும், சேதுராமனும் வாடகை வீட்டில் வசித்தனர். அச்சகம், கம்ப்யூட்டர் மையத்தை நடத்திய சேதுராமனுக்கு, பெரிய அளவில் நஷ்டம் ஏற்பட்டதால், கொளத்தூரில் தியேட்டரை லீசுக்கு எடுத்து, சினிமா படங்களைத் திரையிட்டார். மணப்பாக்கம் பெரிய காலனியில் இடம் வாங்கி, வீடு கட்டி குடும்பத்தோடு சேதுராமன் குடியேறினார். சினிமா தொழிலை விட்டுவிட்டு, மணல் வியாபாரத்தை, சேதுராமன் செய்து வந்தார். இந்நிலையில், சேதுராமன் விருப்பத்துடன், ஜெயா, கோயம்பேடு மார்க்கெட்டில் பூக்களை வாங்கி, வியாபாரம் செய்து வந்தார். அப்போது, ஜெயாவுக்கும், கோயம்பேடு வியாபாரி ஜான் பீட்டருக்கும் தொடர்பு ஏற்பட்டது. இதையறிந்த சேதுராமன், பழைய நிலையைச் சுட்டிக்காட்டி, ஜெயாவை கண்டித்தார். ஆயினும், ஜான் பீட்டருடனான தொடர்பை, ஜெயா விடவில்லை. தன் 13, 12 வயது பெண் குழந்தைகளின் எதிர்காலம் கருதி, ஜெயாவின் சொந்த ஊரான கடலூருக்கு, குழந்தைகளுடன் ஜெயாவை சேதுராமன் அனுப்பி வைத்தார்.


ஓராண்டுக்குப் பின், "இனிமேல் எங்கும் போகமாட்டேன்' எனக் கூறி, சென்னையில் சேதுராமனுடன் சேர்ந்து, ஜெயா குடும்பம் நடத்தி வந்தார். சிறிது நாட்களுக்குப் பின், அடிக்கடி ஜெயா வெளியே சென்று வந்தார். இதனால், ஜெயா மீது சேதுராமனுக்கு மீண்டும் சுந்தேகம் ஏற்பட்டது. ஒரு நாள், காஞ்சிபுரத்தில், ஜான் பீட்டருடன் ஜெயா இருந்ததை, நேரில் பார்த்த சேதுராமான், அவரை அடித்து வீட்டிற்கு அழைத்து வந்தார்.


இந்நிலையில், தீபாவளிக்கு சில நாட்கள் முன், வெளியூர் போவதாகக் கூறி சேதுராமன் சென்றார். ஒரு மணி நேரம் கழித்து வீடு திரும்பியபோது, 25 வயது வாலிபர் ஒருவருடன், ஜெயா இருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். கோபத்தில், ஜெயாவின் தலையை சுவரில் மோதினார். இதில், படுகாயமடைந்த ஜெயா, மூர்ச்øசுயாகிவிட்டார். உட்கார்ந்த நிலையிலேயே ஜெயா இறந்துகிடந்தார். ஜெயாவின் உடலை கண்டம் துண்டமாக வெட்டி, கழுவி, பிளாஸ்டிக் பையில் போட்டார். தலையை மட்டும், வேறொரு பிளாஸ்டிக் பையில் போட்டு, உடன் பெரிய பாறாங்கற்களை இணைத்து, பொதுக் கிணற்றில் போட்டுவிட்டார். தினமும் கிணற்றில் வீசிய உடல் உறுப்புகள், வெளியே வருகிறதா என, பல நாட்கள் கண்காணித்தார்.


துர்நாற்றம் வீசியதை அறிந்த பொது மக்கள், போலீசுக்கு தகவல் கொடுத்தனர். மழை பெய்ததால், கிணற்றில் மிதந்த உறுப்புகளை, போலீசுõர் கண்டெடுத்தனர். தலை மட்டும் கிடைக்காததால், மாநகராட்சி ஊழியர்கள் கிணற்றில் தீவிரமாகத் தேடினர். கொலை செய்த சேதுராமனின் வீடு பூட்டிக் கிடந்தது. அவனது மொபைல்போன் டவர், கே.கே.நகர் பகுதியில் காட்டியது. இதையடுத்து, சேதுராமனை போலீசுõர் சுற்றி வளைத்து கைது செய்தனர். கைதான சேதுராமன் கொடுத்த தகவலின்படி, கிணற்றில் கற்களைக் கட்டி, தூக்கி வீசிய தலையையும் போலீசுõர் கண்டுபிடித்தனர். "விபசுõர விடுதியில் இருந்த ஜெயாவை மீட்டு, வாழ்க்கை கொடுத்தேன். எனக்கு துரோகம் செய்ததால், கண்டம் துண்டமாக வெட்டி கொலை செய்தேன்' என, சேதுராமன், போலீஸ் வாக்குமூலத்தில் கூறியுள்ளார்.


Advertisement


வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
raju - Madurai,இந்தியா
06-நவ-201114:27:06 IST Report Abuse
raju நந்தி கேட்ட பெண் ஜென்மம் . கொலை செய்ததி ல் தவறு இல்லை
Rate this:
Share this comment
Cancel
Inthiyath thamilan - Jeddah,சவுதி அரேபியா
06-நவ-201111:07:22 IST Report Abuse
Inthiyath thamilan விபச்சாரத்தில் சிக்கிக்கிடந்த ஒருத்திக்கு வாழ்க்கைக் கொடுத்து நல்ல முறையில் வாழ்ந்த கணவன், பலமுறைக் கண்டித்தும் திருந்தாத மனைவியைக் கொள்ளாமல் கொஞ்சுவானா? 12, 13 வயதில் பிள்ளைகளை வைத்துக்கொண்டு திமிரெடுத்து அலைந்தவளைக் கொன்றவன் சரியான 'ஆண்மகன்' அவன் எப்படி கொடூரக் கணவன் ஆவான்? ஆனால் மனைவியின் சீர்கெட்ட நடத்தையால் அவன் வாழ்வும் அவன் பிள்ளைகள் வாழ்வும் கேள்விக்குறியாகவும் கேவலமாகவும் ஆகிவிட்டது...
Rate this:
Share this comment
Cancel
SENTHIL KUMAR - MADURAI,இந்தியா
06-நவ-201110:01:44 IST Report Abuse
SENTHIL KUMAR சாக்கடையை நதியில் இணைக்க முயன்ற வீண் முயற்சி. அழகு என்பது மனமே அன்றி. உடல் அல்ல என்பதற்கு சரியான உதாரணம்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X