அதிபர் சர்தாரியை கொல்ல சதி: பயங்கரவாதி கைது

Added : ஜூலை 07, 2010 | கருத்துகள் (1)
Share
Advertisement

இஸ்லாமாபாத் : பாகிஸ்தான் அதிபர் சர்தாரி மற்றும் பஞ்சாப் மாகாண கவர்னர், முதல்வரை கொல்ல சதி திட்டம் தீட்டிய பயங்கரவாதியை போலீசார் கைது செய்துள்ளனர். பாகிஸ்தானின் லாகூர் நகரில் வழிபாட்டு தலத்தில் கடந்த வாரம் நடந்த தற்கொலைப் படை தாக்குதலில் 45 பேர் கொல்லப்பட்டனர். இதையடுத்து, போலீசார் தீவிர தேடுதலில் ஈடுபட்டு, ஆறு பேரை கைது செய்தனர். இவர்களில் ஒருவன் பாகிஸ்தான் அதிபர் சர்தாரியையும், பஞ்சாப் மாகாண முதல்வர் ஷாபாஸ் ஷெரீப்பையும், அம்மாநில கவர்னர் சல்மான் தசீரையும் கொல்ல திட்டமிட்டிருந்தது தெரிந்தது. இந்த தலைவர்கள் வரும் போது அவர்களின் வாகனத்தை வெடி வைத்து தகர்க்கவும் இவன் சதி திட்டம் தீட்டியிருந்தான். இதற்குரிய ஆவணங்களை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.


Advertisement




வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
டேவிட் - AbuDhabi,இந்தியா
08-ஜூலை-201000:58:07 IST Report Abuse
டேவிட் Pakistan need such incidents.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X