சம்பவம் செய்தி

தமிழ்நாடு

மறை மாவட்ட ஆயர் உட்பட 6 பாதிரியார்கள் மீது வழக்கு

Added : நவ 15, 2011 | கருத்துகள் (3)
Advertisement

கூடங்குளம் அணு உலைக்கு எதிராக, போலீஸ் மற்றும் தமிழக அரசின் அனுமதியின்றி போராட்டம் நடத்துவதாக, பாதிரியார்கள் மற்றும் ஒருங்கிணைப்பாளர் மீது, 15 பிரிவுகளில் வழக்குகள் பதியப்பட்டுள்ளன. கூடங்குளம் அணு உலை எதிர்ப்பு போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வருவது குறித்த, மத்திய, மாநிலக் குழுவின் முதல் கட்ட பேச்சுவார்த்தை கடந்த வாரம் முடிந்தது. போராட்டக் குழுவின், 50 கேள்விகளுக்கு, மத்திய குழுவினர் விரைவில் பதிலளிக்க உள்ளனர்.

இடமாற்றம் எடுபடாது... : இந்நிலையில், சட்டவிரோத போராட்டம் நடத்துவதாக, அணு உலை எதிர்ப்பாளர்கள் மீது, கூடங்குளம் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். "தினமலர்' நாளிதழில் முதலில் வெளியான, வழக்கு பதிவு விவர செய்தியை அறிந்த பலர், போராட்டத்திலிருந்து விலகியுள்ளனர். பொதுமக்களில் பலர், சர்ச் வளாக பந்தலுக்கு வருவதையும் குறைத்துக் கொண்டனர்.

வழக்கு அதிகரிப்பு... : போராட்டக்காரர்கள் மீதான வழக்குகளின் எண்ணிக்கை, நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. நேற்று வரை, 76 வழக்குகள் பதியப்பட்டுள்ளன. போராட்ட ஒருங்கிணைப்பாளர் உதயகுமார் மற்றும் பாதிரியார்களின் பெயர்கள், இதில் இடம்பெற்றுள்ளன.

இதுகுறித்து, திருநெல்வேலி மாவட்ட போலீஸ் அதிகாரி கூறியதாவது: பொதுச் சொத்துக்கு சேதம் விளைவித்தல், சட்டத்துக்கு புறம்பாக செயல்படுதல், மத்திய, மாநில அரசுத் துறைக்கு சேதம் ஏற்படுத்துதல், மத்திய, மாநில அரசு அதிகாரிகளை பணி செய்ய விடாமல் தடுத்தல், மத்திய அரசின் வாகனங்களுக்கு தடை ஏற்படுத்துதல், போலீஸ் டி.ஐ.ஜி., மற்றும் போலீஸ் எஸ்.பி.,யை பணி செய்ய விடாமல் வழிமறித்தல், மதபோதனை செய்யும் இடத்தில் மக்களை பீதிக்குள்ளாக்கும் தகவல்களை பரப்புதல் உள்ளிட்ட, பல்வேறு பிரிவுகளில் வழக்குகள் பதியப்பட்டுள்ளன. இவ்வாறு அவர் கூறினார்.

6 பாதிரியார்கள்: மேலும் அவர் கூறியதாவது: கூடங்குளம் சர்ச்சுக்கு வருபவர்களுக்கு, எலும்புக்கூடு மற்றும் நோய்வாய்ப்பட்டவர்கள் போன்ற கோரமான வீடியோ படங்களை காட்டி, அவர்களை போராட்டத்திற்கு தூண்டியது தொடர்பாக, பாதிரியார் பதேயூஸ்ராஜன் மீது, 10 பிரிவுகளில் வழக்கு பதியப்பட்டுள்ளது.

சகாயராஜ் என்பவர் மீது, போராட்டத்திற்கு அனுமதி மறுக்கப்பட்ட நிலையில், அனுமதியில்லாத போராட்டத்தில் பங்கேற்றதாக, போலீசார் வழக்கு பதிந்துள்ளனர்.

தூத்துக்குடி மறை மாவட்ட ஆயர் இவான் அம்ப்ரோஸ் மீது, போராட்டத்தில் பங்கேற்று பேசியதற்காக, வழக்கு பதியப்பட்டுள்ளது. பாதிரியார்கள் ஜெயக்குமார், சுசிலன், மைபா ஜேசுராஜன் மற்றும் ரட்சகநாதன் ஆகியோரது பெயர்களும் வழக்குகளில் உள்ளன. போராட்டம் முடிவுக்கு வரும்போது, இவர்கள் மீதான வழக்குகளில், சட்டரீதியான நடவடிக்கை துவங்கும். இவ்வாறு, போலீஸ் அதிகாரி தெரிவித்தார்.

- நமது சிறப்பு நிருபர் -


Advertisement


வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Chandran - Tamil Nadu,இந்தியா
15-நவ-201106:02:28 IST Report Abuse
Chandran அப்படியே இந்த கைது லிஸ்டுல வைகோ, சீமான், நெடுமாறனையும் சேர்த்துக்கொள்ளவும்.
Rate this:
Share this comment
Cancel
Antalin - changi,சிங்கப்பூர்
15-நவ-201105:41:06 IST Report Abuse
Antalin தினமலர் இது நல்லது இல்ல. உங்கள் கருத்துக்கு அதரவாக எழுதுவது தவறு. உண்மையை yeluthungal.
Rate this:
Share this comment

Microsoft OLE DB Provider for SQL Server error '80040e31'

Query timeout expired

/xtralog_load_full_taboolabc.asp, line 393