தாஜ்மகாலை காப்பது எங்கள் கடமை: சுப்ரீம் கோர்ட்

Added : நவ 16, 2011 | |
Advertisement
புதுடில்லி: தாஜ்மகால் உங்கள் மாநிலத்தில் இருந்தாலும், அதை பாதுகாப்பது எங்கள் கடமை என உத்திரபிரதேச மாநில அரசுக்கு சுப்ரீம் கோர்ட் கடுமை காட்டியுள்ளது. யமுனை நதியின் மாசுபாடு காரணமாக தாஜ்மகாலின் அடிப்பகுதியில் அமைந்துள்ள கடினமான மரக்கட்டுமானம் சேதமடைந்து வருவதாக நாளிதழ்களில் செய்திகள் வெளியாகின. இதை அடிப்படையாகக் கொண்டு, இதை வழக்காக எடுத்துக்கொண்ட சுப்ரீம்

புதுடில்லி: தாஜ்மகால் உங்கள் மாநிலத்தில் இருந்தாலும், அதை பாதுகாப்பது எங்கள் கடமை என உத்திரபிரதேச மாநில அரசுக்கு சுப்ரீம் கோர்ட் கடுமை காட்டியுள்ளது. யமுனை நதியின் மாசுபாடு காரணமாக தாஜ்மகாலின் அடிப்பகுதியில் அமைந்துள்ள கடினமான மரக்கட்டுமானம் சேதமடைந்து வருவதாக நாளிதழ்களில் செய்திகள் வெளியாகின. இதை அடிப்படையாகக் கொண்டு, இதை வழக்காக எடுத்துக்கொண்ட சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் டி.கே. ஜெயின் மற்றும் அனில் தவே ஆகியோர் கொண்ட பெஞ்ச், இதுகுறித்து விளக்கமளிக்குமாறு உ.பி., அரசுக்கு உத்தரவிட்டது. நீர் பற்றாக்குறை காரணமாக கட்டுமானத்தின் அடிப்பாகம் சேதமடைந்து வருவதாகவும், அதற்கு உ.பி., அரசு எந்தவிதமான நடவடிக்கை எடுத்துள்ளது என்றும் கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு உ.பி., அரசு அளித்த பதிலில் அதிருப்தி அடைந்த நீதிபதிகள், தாஜ்மகால் உங்கள் மாநிலத்தில் இருந்தாலும், அதை பாதுகாப்பது எங்கள் கடமை என்று தெரிவித்ததோடு, இதுகுறித்து அறிக்கை அளிக்குமாறு தொல்பொருள் ஆராய்ச்சி மையத்திற்கு உத்தரவிட்டனர்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X