21ம் நூற்றாண்டை நமதாக்க ஒன்றுபடுவோம்: சீன பிரதமர்

Updated : நவ 18, 2011 | Added : நவ 18, 2011 | கருத்துகள் (1)
Share
Advertisement

பாலி: இந்தியாவும், சீனாவும் ஒன்றிணைந்து, இருநாடுகளின் வளர்ச்சியை உறுதி செய்து, 21ம் நூற்றாண்டை ஆசியாவினுடையதாக்க உழைக்க வேண்டும் என சீன பிரதமர் வென் ஜியாபோவ் தெரிவித்துள்ளார்.ஆசியான் மாநாட்டில் கலந்து கொள்வதற்காக இந்தோனேஷியா சென்றுள்ள பிரதமர் மன்மோகன் சிங், அங்கு பாலித்தீவுகளில், சீனப்பிரதமர் வென் ஜியாபாவோவை சந்தித்து பேசினார். அப்போது பேசிய வென் ஜியாபோவ், இரு நாடுகளும் கூட்டுறவை மேம்படுத்த போதுமான விஷயங்கள் உள்ளதாக தெரிவித்தார். மேலும், இருநாடுகளும் தங்களது வளர்ச்சியை உறுதி செய்து, 21ம் நூற்றாண்டை நமதாக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.


பிரதமர் மன்மோகன் சிங் பேசுகையில், சீனாவுடன் சிறந்த உறவுகளை ஏற்படுத்திக்கொள்ள இந்தியா ஆர்வம் காட்டுவதாக தெரிவித்தார். மேலும், அண்டை நாடுகளான இந்தியாவும் சீனாவும் விரைவான பொருளாதார வளர்ச்சி அடையும் நாடுகளாக உள்ளன. இருதரப்பு மற்றும் உலக அளவில் இருநாடுகளும் இணைந்து செயலாற்ற வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.


Advertisement




வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Muthukumar Iyyappan - erode,இந்தியா
18-நவ-201111:25:20 IST Report Abuse
Muthukumar Iyyappan காங்கிரஸ் இருக்கும் வரை இந்த முயற்சி சாத்தியபடாது
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X