சம்பவம் செய்தி

தமிழ்நாடு

கொடைக்கானல் பள்ளி தாளாளர் பங்களாவில் போலீசார் சோதனை

Added : ஜூலை 08, 2010 | கருத்துகள் (1)
Advertisement

கொடைக்கானல் : பாலியல் தொந்தரவு வழக்கில் சிக்கிய கொடைக்கானல் பள்ளி தாளாளர் பிரைட்டிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். நாளையும் விசாரணை தொடரும் என போலீசார் தெரிவித்தனர். கொடைக்கானல் தனியார் பள்ளி தாளாளர் பிரைட்(70) பங்களாவில் தங்கியிருந்த பூடான் மாணவியிடம் பாலியல் தொந்தரவு செய்ததாக போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். தலைமறைவான தாளாளர் ஸ்ரீவில்லி., கோர்ட்டில் சரண் அடைந்தார்.பள்ளி முதல்வர் ஷிபா பாலும்(36) கைது செய்யப்பட்டுள்ளார். இவரிடம் கொடைக்கானல் போலீசார் ஒரே நாளில் விசாரணையை முடித்து நிலக்கோட்டை ஜெயிலுக்கு அனுப்பினர். நிலக்கோட்டை கோர்ட்டில் பப்ளிக் பள்ளி மாணவிகள் 5 பேர், சமையலர் ரத்தினம் என்ற ராஜரத்தினம் ஆகியோர் மாஜிஸ்திரேட் அனுராதா முன்னிலையில் ரகசிய வாக்குமூலம் கொடுத்தனர். இந்நிலையில் நேற்று கொடைக்கானல் போலீசார் பள்ளி தாளாளர் பிரைட்டை விசாரணைக்காக மதுரை ஜெயிலில் இருந்து கொடைக்கானலுக்கு அழைத்து சென்றனர். இன்று கொடைக்கானல் இன்ஸ்பெக்டர் ஜேம்ஸ் ஜெயராஜ் தலைமையில் போலீசார் ஸ்டேஷன்,பங்களாவில் விசாரணை நடத்தினர். பிரைட் தங்கியிருந்த அறை திறக்கப்பட்டு அவரது முன்னிலையில் சோதனை மேற்கொள்ளப்பட்டது.நாளையும் விசாரணை தொடரும் என போலீசார் தெரிவித்தனர்.


Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
sundaram - qatar,இந்தியா
09-ஜூலை-201001:20:01 IST Report Abuse
sundaram ivarhaliyellam nadu theruvil vittu kalleriya vendum...siba paul nee oru penna ?..thurohi madhathiye ilivu paduthum nee avanai kalyanam pannikkolladi......munda..,,,,,,,,,,,,,,,,,,
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X