அரசியல் செய்தி

தமிழ்நாடு

அறநிலைய துறை கோயிலில் மோசடி : எச்.ராஜா குற்றச்சாட்டு

Added : ஜூலை 08, 2010 | கருத்துகள் (16)
Advertisement
hindu religious and charitable dept., temple forgery,h. raja,அறநிலைய துறை கோயிலில் மோசடி,எச்.ராஜா

காரைக்குடி : ""காரைக்குடி முத்துமாரியம்மன் கோயிலில் 10 லட்ச ரூபாய் பணம் மோசடி செய்யப்பட்டது குறித்து விசாரணை நடத்த வேண்டும்,'' என, பா.ஜ., தேசிய செயற்குழு உறுப்பினர் எச்.ராஜா கூறினார். அவர் கூறியதாவது: கோயில் அறங்காவலர் குழு தலைவராக, 2009 பிப் 23 முதல் 2010 பிப்., 22 ம் தேதி வரை, சுந்தரம் எம்.எல்.ஏ., நியமிக்கப்பட்டார். பிப்., 22 ம் தேதி அவருடைய பதவி காலாவதியானது. மே 15 ம் தேதி முதல், இரண்டு ஆண்டுகள் அவருக்கு பதவி நீட்டிக்கப்பட்டது. ஆனால், இரண்டு அறங்காவலர் குழு உறுப்பினர்கள் மது அருந்தி கோயிலுக்கு வருவதால், அவர் இதுவரை பதவியேற்கவில்லை. மே 15 ம் தேதிக்குள் நான்கு வங்கி "செக்' மூலம், கோயில் கணக்கில் இருந்து, 10 லட்ச ரூபாய் எடுக்கப்பட்டது. "செக்' ல் கையெழுத்து போடும் அதிகாரம் அறங்காவலர் குழு தலைவருக்கு மட்டுமே உள்ளது. அறங்காவலர் குழு தலைவர் பதவி காலியான நிலையில், வங்கி கணக்கில் பணம் எடுக்க அதிகாரிகள் அனுமதித்தது தவறு; 10 லட்ச ரூபாயை கோயிலில் ஒப்படைக்க வேண்டும். தனி நபர் ஒழுக்கம் இல்லாத நபர்களை அறங்காவலர் குழுவில் நியமிக்க கூடாது. அறநிலைய துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி, நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லாத பட்சத்தில், பா.ஜ., போராடும் என்றார்.


Advertisement
வாசகர் கருத்து (16)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
mkpsvs - KaraikudiIndia,இந்தியா
09-ஜூலை-201020:59:13 IST Report Abuse
mkpsvs ராஜா, நீ எப்படி பட்ட ஆளுன்னு காரைக்குடி மக்களுக்கு நல்லா தெரியும். தேவை இல்லாம சவுண்ட் கொடுக்காத... உண்மையில் ஒரு தவறு நடந்து இருந்தாலும் நீ ரொம்ப நல்லவன் மாதிரி நடிக்காதே... வீதிக்கு வந்து போராடுற மாதிரி ஆக்டிங் கொடுக்காதே! Karaikudi people know your original Face!!!
Rate this:
Share this comment
Cancel
C.R.GOPALKRISHNAN - Chennai,இந்தியா
09-ஜூலை-201018:00:41 IST Report Abuse
C.R.GOPALKRISHNAN கலை செல்வனுக்கு மது அருந்திவிட்டு கோவிலுக்குள் செல்வது சாதாரணமான விஷயம் .. மதுஅருந்தும் பழக்கம் உள்ள குடும்ப தலைவர்களால் சீர் அழியும் குடும்பங்கள் எத்தனை .. கருணாநிதி செய்யும் மிக பெரிய தவறு இது .. இந்த பாவங்கள் அதனையும் அவர் குடும்பத்தை நிச்சயம் பாதிக்கும் .. இதில் இருந்து அவர் தப்ப முடியாது
Rate this:
Share this comment
Cancel
Manikandan - chennai,இந்தியா
09-ஜூலை-201012:07:29 IST Report Abuse
Manikandan I welcome Mr.H.Raja's gentle move.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X