மகளுக்கு பதவி கேட்டேனா? பவார் திட்டவட்ட மறுப்பு

Updated : ஜூலை 10, 2010 | Added : ஜூலை 08, 2010 | கருத்துகள் (7)
Share
Advertisement
மகள்,பதவி,பவார்,மறுப்பு,ministerial berth,Pawar

மும்பை : "என் மகள் சுப்ரியாவுக்கு மத்திய அமைச்சர் பதவி கேட்டதாக வெளியான தகவல் உண்மை அல்ல' என, மத்திய விவசாய அமைச்சர் சரத் பவார் கூறியுள்ளார்.


மத்திய விவசாய அமைச்சரும், தேசியவாத காங்கிரஸ் தலைவருமான சரத் பவார், செய்தியாளர்களிடம் கூறியதாவது: மாநில அரசியலில் மீண்டும் கவனம் செலுத்த நான் முடிவு செய்துள்ளேன். மகாராஷ்டிராவில் உள்ள சில பகுதிகளுக்கு நான் சுற்றுப் பயணம் செய்து பல காலமாகி விட்டது. மாநிலம் முழுவதும் சுற்றுப் பயணம் செய்து தொண்டர்களை சந்திக்கவுள்ளேன். தற்போது வகிக்கும் அமைச்சர் பதவியால், தொண்டர்களை சந்திக்க முடியவில்லை. இதனால் அமைச்சரவை பொறுப்பால் எனக்கு ஏற்பட்டுள்ள சுமைகளை குறைக்கும்படி பிரதமர் மன்மோகன் சிங்கிடம் கேட்டுள்ளேன். இதற்கு பதிலாக, என் மகள் சுப்ரியா சுலே, சாகன் புஜ்பால் ஆகியோருக்கு அமைச்சர் பதவி கேட்டதாக செய்திகள் வெளியாகி வருகின்றன. மேலும், பிரபுல் படேலை கேபினெட் அமைச்சராக்கும்படி, பிரதமரை நான் வற்புறுத்தியதாகவும் தகவல்கள் வெளியாகின்றன. இவை யூகத்தின் அடிப்படையிலானவை. இந்த செய்திகளில் 1 சதவீதம் கூட உண்மை இல்லை. தற்போது எங்கள் கட்சிக்குள்ள லோக்சபா எம்.பி.,க்களின் எண்ணிக்கையை வைத்துக் கொண்டு, மத்திய அமைச்சரவையில் கூடுதல் இடங்களை கேட்க முடியாது. இவ்வாறு சரத் பவார் கூறினார்.


Advertisement




வாசகர் கருத்து (7)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
பாலா - bangalore,இந்தியா
09-ஜூலை-201014:25:06 IST Report Abuse
பாலா நீயா ஒரு தண்டம்.. இதுல உன் வாரிசுக்கு வேற..
Rate this:
Cancel
ராமராசு - Karur,இந்தியா
09-ஜூலை-201012:09:02 IST Report Abuse
ராமராசு வாரிசுகளுக்கு பதவி என்பதே இப்போதைய மக்களாட்சி தத்துவம் என்றாகிவிட்டது. அஸ்ஸாமில் சங்கமா மகளுக்கு, ஜம்மு காஷ்மீரில் பாருக் அப்துல்லா மகனுக்கு, கேரளாவில் கருணாகரன் தனது மகன் மகளுக்கு, கர்நாடகாவில் தேவ கவுடா தனது மகனுக்கு, பிகாரில் லல்லு தனது மனைவிக்கு, தமிழ் நாட்டில் உள்ள கட்சிகள் பற்றி நாம் அனைவருக்கும் தெரிந்ததே. அவ்வளவு ஏன், அனைத்து மனித சமுதாய நலனுக்காக தனது சொத்துக்கள் அனைத்தையும் கொடுத்ததோடு , சமுதாய தொண்டையே இறுதி மூச்சு வரை கடைப்பிடுத்து, சமுதாய புரட்சி படைத்த தந்தை பெரியாரின் "திராவிடர் கழகத்திலும்" வாரிசு என்பதாகிவிட்ட நிலையில், இவர் மகளுக்காக கேட்டால் தப்பே இல்லை.. மேடை போட்டா இவற்றை கேட்க முடியும். என்னவோ தெரியவில்லை, கட்சிக்காக ஆரம்பம் முதல் மிகக் கடுமையாக உழைத்தாலும், கட்சி தலைவர்களின் வாரிசுகளுக்கு மட்டுமே அடுத்த நிலை தரப்படுகிறது. அரசியல் சதுரங்கம் மக்களுக்கும் தெரியும். ஆனால் ஒன்றும் செய்ய முடியாது.
Rate this:
Cancel
சுந்தர் - Sydney,ஆஸ்திரேலியா
09-ஜூலை-201009:34:06 IST Report Abuse
சுந்தர் நீங்க கோடி லஞ்சம் கேக்குறிங்க,அதை கூடத்தான் இல்லேன்னுதான் சொல்றிங்க!!!
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X