காஷ்மீரில் தொடர்ந்து ஊரடங்கு : சகஜநிலை திரும்ப சில நாள் ஆகும்

Added : ஜூலை 09, 2010 | கருத்துகள் (8)
Share
Advertisement
காஷ்மீரில் தொடர்ந்து ஊரடங்கு : சகஜநிலை திரும்ப சில நாள் ஆகும்

ஸ்ரீநகர் : காஷ்மீர் மாநிலத்தில் ஊரடங்கு உத்தரவு தொடர்ந்து நீடிப்பதால், அங்கு மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. காஷ்மீர் மாநிலத்தில், கடந்த சில நாட்கள் நடைபெற்ற மோசமான சூழ்நிலைகள் மற்றும் அதனால் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 14 பேர் இறந்தனர். இதையடுத்து, தொடர் கலவரத்தை தடுக்க, மத்திய அரசும் மாநில அரசும் எடுத்த முடிவின் அடிப்படையில் அங்கு ராணுவத்தினர் பெருமளவில் குவிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் அங்கு தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். மத்திய உள்துறைச் செயலர் ஜி.கே.பிள்ளை, காஷ்மீரில் நிலவும் சட்டம் ஒழுங்கு பிரச்னையை ஆய்வு செய்வதற்காக நேற்று முன்தினம் காஷ்மீர் சென்றார். அவர், அம்மாநில முதல்வர் ஒமர் அப்துல்லா மற்றும் காவல் துறை உயர் அதிகாரிகளை சந்தித்து, அங்கு நிலவும் சட்டம் ஒழுங்கு நிலை குறித்து விரிவான ஆலோசனை நடத்தினார். மேலும், அங்கு மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்தும் ஆய்வு நடத்தினார். இதுகுறித்து அவர், மத்திய அரசிடம் விரிவான அறிக்கை தாக்கல் செய்ய உள்ளார்.


இதனிடையே, காஷ்மீர் மாநிலத்தில் தொடர்ந்து ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளதால், மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. தெருக்கள் வெறிச்சோடி கிடக்கின்றன; ராணுவத்தினர் மற்றும் போலீசாரைத் தவிர தெருக்களில் வேறு நடமாட்டமே இல்லை. அங்கிருந்து வெளிவரும் பெரும்பாலான பத்திரிகைகள் தடைபட்டுள்ளன. காஷ்மீரில் பதட்டம் நிறைந்த பகுதிகளில், ராணுவத்தினர் நேற்றும் கொடி அணிவகுப்பு நடத்தினர். இந்த அணிவகுப்பு பான்தா சவுக் துவங்கி, ராவல்பூரா சவுக் வரை பழைய விமான நிலைய சாலையில் 10 கி.மீ., தூரம் நடைபெற்றது. ராணுவத்தினருடன் பாதுகாப்புப் படை போலீசாரும், மாநில போலீசாரும் இணைந்து தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.


இதுகுறித்து, மத்திய உள்துறை அமைச்சர் சிதம்பரம் கூறியதாவது: காஷ்மீரில், தற்போது நிலைமை கட்டுக்குள் உள்ளது. பதட்டம் நிறைந்த பகுதிகளில், ராணுவத்தினர் பெருமளவில் குவிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் அங்கு தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். எனினும், மீண்டும் கலவரம் வெடிக்கும் பட்சத்தில், தாக்குதல் நடத்த அவர்களுக்கு உத்தரவிடப்படவில்லை. பதட்டம் நிறைந்த பகுதிகளில் ஊரடங்கு உத்தரவு தொடர்ந்து நீடிக்கும். இரண்டு நாட்களில் படிப்படியாக திரும்பப் பெறப்படும்.


Advertisement


வாசகர் கருத்து (8)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
கே.ஷமீம் - dammam,சவுதி அரேபியா
09-ஜூலை-201016:04:53 IST Report Abuse
கே.ஷமீம் சட்டம் ஒழுங்கை காரணம் காட்டி மக்களை சுட்டு கொல்லுங்க. உங்களை கேட்க யாரு இருக்கா. தீவிர வாதி ஒழிப்பு நடவடிக்கை என்று சொல்லி கொள்ளலாம். இதற்கு பாரதிய ஜனதாவும் துணை நிற்கும்
Rate this:
Cancel
RV - Chennai,இந்தியா
09-ஜூலை-201011:15:32 IST Report Abuse
RV இராணுவத்திடமும், போலிசிடமும், மக்கள் என்ன எதிர்பார்கிறீர்கள்? கல் வீசினால் ஓடவேண்டும், குண்டுவைத்தால் ஓடவேண்டும், இதற்கா நம் வரி பணம் அவர்களுக்கு செலவிடுகிறோம். அவர்களே இந்த பழாய் போன லஞ்ச அரசியல்வாதிகளிடம் மாட்டிகொண்டு இருக்கிறார்கள். நமக்கு ஒரு தேவை வரும் பொது போலீஸ் திருடனை பிடிக்க வேண்டும் தண்டிக்கவேண்டும். நீங்கள் ஒன்றாய் சேர்ந்து அட்டுழியம் செய்யும் போது அவர்கள் உங்களிடம் புறமுதுகை காட்டி ஓடவேண்டும். எல்லா தவறுகளுக்கும் ஆட்சியாளர்கள் தான் பொறுப்பு. அவர்களை சரிசெய்ய ஒன்று சேர்வோம்.
Rate this:
Cancel
இந்தியன் - chennai,இந்தியா
09-ஜூலை-201008:48:40 IST Report Abuse
இந்தியன் காஸ்மீர் அமைதி பூங்காவாக மாற இறைவனிடத்தில் பிரார்த்தனை செய்வோம்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X