திருவனந்தபுரம்: ஊழல்வாதியான மேயர் ஒருவர் அரசியல் ஆதாயத்துக்காக கட்டும் வலுவற்ற அணை உடைவதால் ஏற்படும் பாதிப்புகளை மையமாக கொண்டு எடுக்கப்பட்டுள்ள டேம் 999 படம், தன் சொத்துக்களை விற்று மக்களின் நலன் காத்த பென்னி குக்கை கேவலப்படுத்தும் விதத்தில் அமைந்துள்ளது.
கேரள மாநிலத்தைச் சேர்ந்தவர் சோஹன் ராய். கடற்படை மாலுமியாக இருந்து பின் திரைப்பட இயக்குநராக மாறிய இவர் இயக்கியுள்ள படம் தான் டேம் 999. ஊழல்வாதியான மேயர் ஒருவர் அரசியல் காரணங்களுக்கான வலுவற்ற அணை ஒன்றை கட்டுகிறார். இந்த அணை ஒன்று உடைவதால் ஏராளமானோர் பலியாகிறார்கள். பழமையான அணைகளால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து இப்படத்தில் விரிவாக தெரிவித்துள்ளதாக கூறுகிறார் சோஹன் ராய்.
இதுகுறித்து சோஹன் ராய் கூறுகையில், கடந்த 1975ம் ஆண்டு சீனாவில் உள்ள பான்கியோ டேம் உடைந்ததால் இரண்டரை லட்சம் பேர் உயிரிழந்ததாகவும், இதே போன்ற ஒரு அபாயம் பெரியாறு அணையிலும் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். மேலும், பெரியாறு அணை உடையும் பட்சத்தில், இதில் சிக்கி இறக்கப்போவது தமிழக மக்களும் தான் என்கிறார் சோஹன். படத்தைப் பார்த்த பின், பெரியாறு அணை விவகாரத்தில் தனது நிலையை தமிழக அரசு மாற்றிக்கொள்ளும் என்றும் நம்பிக்கை(?) தெரிவித்துள்ளார் சோஹன்.
படத்தில் காட்சிப்படி, ஊழல் மேயர் ஒருவர் கட்டிய அணை உடைவதாக படக்காட்சிகளை அமைத்துள்ளார் இயக்குநர் சோஹன் ராய். ஆனால், இங்கிலாந்து நாட்டவராயினும், அணை கட்டுமான பணியின் போது நிதிப்பற்றாக்குறை ஏற்பட்ட போதிலும், தனது சொத்துக்களை விற்று அணையை வலுவாக கட்டியவர் பென்னிகுக். படத்தின் மேயரையும், பென்னிகுக்கையும் ஒப்பிடும் வகையில், படத்தின் இயக்குநர் பேசியிருப்பது பென்னி குக்கை இழிவுபடுத்தும் வகையில் அமைந்துள்ளது. இப்படம் இந்தியாவில் வரும் 25ம் தேதி வெளியாகிறது. தமிழ், இந்தி மற்றும் தெலுங்கு மொழிகளில் இப்படம் வெளியாகவுள்ளது.
வைகோ எதிர்ப்பு: இப்படத்திற்கு ம.தி.மு.க., பொதுச்செயலாளர் வைகோ கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE