இந்தியா

கிரிக்கெட் வீரர் ஜோகிந்தர் கார் விபத்தில் படுகாயம்

Added : நவ 25, 2011
Share
Advertisement
கிரிக்கெட் வீரர் ஜோகிந்தர் கார் விபத்தில் படுகாயம்

புதுடில்லி: இந்திய கிரிக்கெட் வீரர் ஜோகிந்தர் சர்மா, கார் விபத்தில் படுகாயமடைந்தார். அரியானாவை சேர்ந்தவர் ஜோகிந்தர் சர்மா. கடந்த 2007ல் நடந்த "டுவென்டி-20' உலக கோப்பை தொடரில் இந்திய அணி சாம்பியன் பட்டம் வெல்ல முக்கிய காரணமாக இருந்தார். இத்தொடரின் பைனலில், கடைசி ஓவரை வீசிய இவர், பாகிஸ்தானின் மிஸ்பா-உல்-ஹக் விக்கெட்டை கைப்பற்றி, வெற்றிக்கு வித்திட்டார். ஐ.பி.எல்., தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இடம் பெற்றார். தற்போது ரஞ்சி கோப்பை தொடரில் விளையாடி வரும் இவர், நேற்று தனது காரில் தென் மேற்கு டில்லியில் உள்ள துவார்கா அருகே சென்று கொண்டிருந்தார். எதிரே சென்ற கார் "ஸ்பீடு பிரேக்கர்' அருகே திடீரென நிறுத்தப்பட்டுள்ளது. இதன் மீது ஜோகிந்தர் கார் மோதியுள்ளது. இதில் காரை ஓட்டிய ஜோகிந்தரின் தலைப்பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. உடனடியாக ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்ட இவர், அவசர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டார். இவருக்கு "ஆப்பரேஷன்' நடந்துள்ளது. இவரது நிலைமை சற்று கவலைக்கிடமாக இருப்பதாக டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.


Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X