பொது செய்தி

இந்தியா

சச்சின் ஏமாற்றம் - அஸ்வின் சத கணக்கு துவக்கம்

Updated : நவ 25, 2011 | Added : நவ 25, 2011 | கருத்துகள் (35)
Share
Advertisement
சச்சின் ஏமாற்றம் - அஸ்வின் சத கணக்கு துவக்கம்

மும்பை : மும்பை டெஸ்டில், சச்சின் 100வது சதம் அடித்து சாதனை புரிவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அனைவரையும் ஏமாற்றிய சச்சின், யாரும் எதிர்பார்க்காத நிலையில், அறிமுகமான 3வது டெஸ்டிலேயே சதமடித்து அசத்தியுள்ளார் தமிழக வீரர் அஸ்வின்.

வெஸ்ட் இண்டீசிற்கு எதிரான 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்தியா தற்‌போது விளையாடி வருகிறது. டி்ல்லியில் நடைபெற்ற டெஸ்டில் தமிழக வீரர் அஸ்வின் அறிமுகமானார். இந்த போட்டியில், அஸ்வின் 9 விக்கெட்கள் கைப்பற்றியதனம மூலம் 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரில் 1-0 கணக்கில் முன்னிலை பெற்றது.

நவம்பர் 13ம் தேதி, அஸ்வினுக்கு சென்னையில் திருமணம் நடைபெற்றது. மணமான மறுநாள்,கோல்கட்டாவில் 2வது டெஸ்ட் துவங்கியது. இந்த போட்டியில், இந்திய வீரர்கள் சிறப்பாக விளையாடி, அந்த போட்டியில் ஒரு இன்னிங்ஸ் மற்றும் 15 ரன்கள் வித்தியாசத்தி்ல் வெற்றி பெற்று 2-0 கணக்கில் முன்னிலை பெற்றது.

இந்நிலையில், 3வது டெஸ்ட் போட்டி மும்பையில் துவங்கி நடைபெற்று வருகிறது. முதலில் பேட்டிங் செய்த வெஸ்ட் இண்டீஸ் அணி 590 ரன்களுக்கு ஆல்அவுட் ஆனது. இந்திய தரப்பில், அஸ்வின் 5 விக்கெட்கள் வீழ்த்தினார்.

இங்கிலாந்து தொடர் மற்றும் முதல் 2 போட்டிகளில் சத சாதனையை தவற விட்ட சச்சின் டெண்டுல்கர் இப்போட்டியில் சத சாதனை நிகழ்த்துவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், 94 ரன்களில் அவர் அவுட் ஆனார்,

அஸ்வின் சதம் : சச்சின் ஏமாற்றிய‌போதிலும், தமிழக வீரர் அஸ்வின் சதமடித்து அசத்தினார். கிரிக்கெட் வரலாற்றில் இது இவரது முதல் சதம் என்பது குறிப்பிடததக்கது.

Advertisement




வாசகர் கருத்து (35)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
vimala - jurong,சிங்கப்பூர்
26-நவ-201109:13:58 IST Report Abuse
vimala வாழ்த்துக்கள் அஸ்வின். நல்லா விளையாடினா மனைவி வந்த நேரம். நல்லா விளையாடலனா அதுவும் மனைவி வந்த நேரம். இப்படி படித்தவர்களே கருத்து கூறினால் திறமைக்கு என்ன மதிப்பு.
Rate this:
Cancel
Ramasami Venkatesan - Chennai - now in Brisbane - Aus,இந்தியா
26-நவ-201104:34:23 IST Report Abuse
Ramasami Venkatesan தன் மனைவிக்கு அஸ்வின் கொடுத்த இந்த கல்யாண பரிசு இதை விட மேலாக என்ன இருக்க முடியும். இருக்கு ஒன்று!!!!
Rate this:
Cancel
Param Irulandi - Toronto,கனடா
26-நவ-201103:29:13 IST Report Abuse
Param Irulandi அஸ்வின் ஆல்-ரவுண்டராக ஜொலித்ததில், அனைவருக்கும் சந்தோசம் .ஒருவரை தவிர #Harbhajan singh
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X