பொது செய்தி

தமிழ்நாடு

அரசு பஸ் மோதி காளை மாடு பலி: உடன் திரிந்த மாடு பாசப்போராட்டம்

Added : நவ 29, 2011 | கருத்துகள் (21)
Advertisement
அரசு பஸ் மோதி காளை மாடு பலி: உடன் திரிந்த மாடு பாசப்போராட்டம்

கிருஷ்ணகிரி:கிருஷ்ணகிரியில் அரசு பஸ் மோதி காளை மாடு இறந்தது. உடன் திரிந்த மாடு, இறந்த மாட்டை தலையால் முட்டி எழுப்பியதை பார்த்தவர்களின் நெஞ்சம் நெகிழ்ந்தது.

கிருஷ்ணகிரி ஆவின் மேம்பாலம் அருகே, சென்னை தேசிய நெடுஞ்சாலையில் நேற்று மாலை 5 மணிக்கு, இரண்டு காளை மாடுகள் ரோட்டில் முட்டி மோதி விளையாடித்திரிந்தன.அப்போது, பெங்களூருவில் இருந்து விழுப்புரம் நோக்கி வந்த அரசு பஸ் சாலையில் ஓடி திரிந்த மாடுகளில், ஒரு காளை மாடு மீது மோதியது. இதில், தலையில் பலத்த காயமடைந்த மாடு, சாலையில் விழுந்து ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடியது. உடன் இருந்த மாடு பெரும் சத்தத்துடன் சாலையில் விழுந்த மாட்டை தலையில் முட்டி எழுப்பியது. தொடர்ந்து, விபத்தில் காயமடைந்த மாட்டை மற்றொரு மாடு சுற்றி சுற்றி வந்து தலையால் முட்டி எழுப்பியது.மனிதர்கள் விபத்தில் சிக்கி உயிருக்கு போராடிக் கொண்டிருந்தாலும், அந்த வழியே செல்வோர் பார்த்தும் பார்க்காமல் போகும் இந்தக் காலத்தில், கால்நடைகள் மனிதாபிமானத்துடன் உடன் வந்த மாடு இறந்ததை அறியாமல் முட்டி எழுப்பியதை பார்த்தவர்கள் நெஞ்சம் நெகிழந்தனர்.

விபத்தில் சிக்கிய மாடு இறந்ததால், உடன் வந்த காளை மாடு பெரும் சத்தம் போட்டு அந்த பகுதியில் வேடிக்கை பார்க்க குவிந்த பொதுமக்களை துரத்தியது. இதனால், அந்த பகுதியில் நின்று வேடிக்கை பார்த்த பொதுமக்கள், நாலாபுறமும் சிதறி ஓடினர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதித்தது.பொதுமக்கள் ஒன்று சேர்ந்து அந்த இடத்தில் இருந்து, காளை மாட்டை விரட்டி அடித்தனர். ஆனால், மாடு சிறிது தூரம் ஓடி சென்று அந்த பகுதியையே சுற்றி சுற்றி வந்தது. சாலையில் இறந்த காளை மாட்டை பொதுமக்கள் அகற்றினர்.

Advertisement




வாசகர் கருத்து (21)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
shanmugam - chennai,இந்தியா
01-டிச-201113:22:52 IST Report Abuse
shanmugam தேவை கடுமையான சட்டம்
Rate this:
Share this comment
Cancel
tamil varunan - chennai,இந்தியா
30-நவ-201112:06:48 IST Report Abuse
tamil varunan இந்த காட்சியை கண்டவுடன் என் கண்கள் குளமாயின. மனிதர்களிடம் இல்லாத இரக்கத்தன்மை மாடு போன்ற விலங்கிடம் உள்ளது போற்றத்தக்கது. இனிமேலாவது வாகன ஓட்டிகள் விலங்குகள் போல இரக்கத்தன்மையுடன் நடந்து கொள்ளவேண்டும்....
Rate this:
Share this comment
Cancel
H I R A N Y A N - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்
29-நவ-201122:47:33 IST Report Abuse
H I R A N Y A N கண்ணு கலங்குவதும் நெஞ்சு குலுங்குவதும் எல்லாம் சரி. செத்து போன மாட்டை சொந்தக்காரன் வந்து ஏதாவது பீப் ஸ்டாலில் கம்மி விலையில் விற்று விடுவார். நாமும் ஒரு குவாட்டர் அடித்துவிட்டு beef fry சாப்பிட்டுவிட்டு போய் விடுவோம். இது போன்ற விபத்துகள் நடக்காமல் இருக்க வழி யாராவது சொல்வார்களா? கால் நடைகளை ரோட்டில் அலைய விடுவது சரியா? இதை முதலில் தடுக்க வேண்டும். Cattle pound வசதி நம் ஊரில் எங்காவது உண்டா? கால் நடைகளை வளர்க்க / மேய்க்க இடம் இல்லாதவர்கள் அவற்றை வாங்க கூடாது.
Rate this:
Share this comment
Sathish - Coimbatore,இந்தியா
30-நவ-201101:14:34 IST Report Abuse
Sathishமாடு மட்டும் அல்ல, கோழி, ஆடு, நண்டு இவை அனைத்தும் உயிரினங்களே!! விபத்துக்குள்ளாகி இறந்து போவதும், மனிதனின் உணவுக்காக கொல்லப்படுவதும் ஏறக்குறைய ஒன்று தான். இங்கே இவ்வளவு வேதனை படும் அன்பு உள்ளங்கள் அனைவரும் இனி மாமிச உணவை தவிர்த்து, இவ்வாயில்லா உயிர்களை உங்கள் உணவிற்காக வதைக்கபடுவதை தடுக்க உதவுங்கள். இச்செய்தியை வெளியிட்ட தினமலருக்கு நன்றி....
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X