பொது செய்தி

தமிழ்நாடு

கூடங்குளம்:அணு உலை ஆதரவாளர்களுக்கு போனில் கொலை மிரட்டல்:கடலில் வெட்டி வீசுவதாக மர்ம ஆசாமி பேச்சு

Added : நவ 29, 2011 | கருத்துகள் (79)
Share
Advertisement
கூடங்குளம் அணுமின் நிலையத்தை திறக்கக் கோரி, வள்ளியூரில் ஆர்ப்பாட்டம் செய்த இந்து முன்னணி துணைத் தலைவருக்கு, அணு உலை எதிர்ப்புக் குழுவை சேர்ந்தோர் என அடையாளப்படுத்திக் கொண்டு, கொலை மிரட்டல் விடுத்ததால், பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இந்து முன்னணி சார்பில், கூடங்குளம் அணுமின் நிலையத்தை உடனடியாக திறக்கக் கோரி, வள்ளியூர் பழைய பஸ் நிலையம் முன், நேற்று ஆர்ப்பாட்டம்
கூடங்குளம்:அணு உலை ஆதரவாளர்களுக்கு போனில் கொலை மிரட்டல்:கடலில் வெட்டி வீசுவதாக மர்ம ஆசாமி பேச்சு

கூடங்குளம் அணுமின் நிலையத்தை திறக்கக் கோரி, வள்ளியூரில் ஆர்ப்பாட்டம் செய்த இந்து முன்னணி துணைத் தலைவருக்கு, அணு உலை எதிர்ப்புக் குழுவை சேர்ந்தோர் என அடையாளப்படுத்திக் கொண்டு, கொலை மிரட்டல் விடுத்ததால், பரபரப்பு ஏற்பட்டுள்ளது.


இந்து முன்னணி சார்பில், கூடங்குளம் அணுமின் நிலையத்தை உடனடியாக திறக்கக் கோரி, வள்ளியூர் பழைய பஸ் நிலையம் முன், நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. மாநிலத் தலைவர் அரசுராஜா, துணைத் தலைவர் வி.பி.ஜெயக்குமார் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். போராட்டத்திற்கு, போலீஸ் அனுமதி தரவில்லை. ஆனாலும், ஆர்ப்பாட்டம் நடந்தது.போராட்டத்தின் நிறைவில், கூடங்குளம் அணு உலை எதிர்ப்புக் குழுவைச் சேர்ந்தோர் மீது, இந்து முன்னணி மாநில துணைத் தலைவர் ஜெயக்குமார், வள்ளியூர் போலீசாரிடம் புகார் ஒன்றை கொடுத்தார்.


"எதிர்ப்பாளர்களால் ஆபத்து':இதுகுறித்து, ஜெயக்குமார் அளித்த பேட்டி:ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்பதற்காக, இன்று (நேற்று) மாலை, பரமன்குறிச்சியில் இருந்து வந்து கொண்டிருந்தேன். கள்ளிகுளம் அருகே வந்தபோது, மாலை 4.06 மணிக்கு, என் அலைபேசிக்கு, 80159 37051 என்ற எண்ணில் இருந்து அழைப்பு வந்தது.கூடங்குளம் அணு உலை எதிர்ப்பு குழுவிலிருந்து பேசுவதாகக் கூறிய அவர், தன் பெயரை தெரிவிக்காமல், மிகவும் அசிங்கமான வார்த்தைகளால் திட்டினார். "அணு உலைக்கு ஆதரவாக போராடினால், கடலில் வெட்டி வீசி விடுவேன்' என, மிரட்டினார்.இதையடுத்து, 5.15 மணிக்கு, 94860 32115 என்ற எண்ணிலிருந்து, மற்றொரு அழைப்பு வந்தது. அதில் பேசியவரும், தன்னை, கூடங்குளம் அணு உலை எதிர்ப்புக் குழுவை சேர்ந்தவர் எனக் கூறி, "நீ கூடங்குளத்திற்கு வந்து விட்டு தான் செல்ல வேண்டும்; இல்லையென்றால்...' என, மிரட்டினார்.எனவே, அணு உலை எதிர்ப்புக் குழுவால், எங்கள் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது. எனக்கும், அமைப்பின் நிர்வாகிகளுக்கும், போலீசார் பாதுகாப்பு தர வேண்டும் என, வள்ளியூர் போலீசில் புகார் கொடுத்துள்ளோம்.இவ்வாறு ஜெயக்குமார் கூறினார்.வள்ளியூர் போலீசார், இதுகுறித்த விசாரணையை துவங்கியுள்ளனர்.


-நமது சிறப்பு நிருபர்-


Advertisement
வாசகர் கருத்து (79)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
muthu - aqaba ,ஜோர்டான்
30-நவ-201116:37:10 IST Report Abuse
muthu வெளி நாட்டில் பொய் வேலை பார்க்கும் எனது தமிழ் இனிய தமிழ் மக்களே, நீங்கள் வெளி நாடு செல்லும் பொது விமானம் வெடித்து விட்டால் என்ன செய்வது என்று எப்போதாவது நினைத்து பார்த்தது உண்டா? அப்படி நினைத்து பார்த்திருந்தால் உங்களால் வெளி நாடு பொய் இருக்க முடிம? இப்படி இந்திய / தமிழ் நாட்டில் அரசு பணத்தில் படித்து ஒரு பைசா வரி இல்லாமல் வீடு நிலம் என்று போட்டி போட்டு வங்கி குவிகின்ர்றேர்களே இதனால் உள்ளூரில் வேலை பார்க்கும் மக்கள் நிலம் வாங்கவோ வீடு வாங்கவோ கஷ்டபடுவது தெர்யும ஓகே அது போகட்டும் அதே போல்தான் அணு உலை வெடித்து விடும் என்று யாரும் நினைக்காமல் டிசைன் தரம் குரிபிட்டாமல் செய்யவில்லை டிசைன் பாக்டர் தேவைக்கு அதிக அளவு எந்த பூகம்பம் சுனாமி வந்தாலும் தாங்கும் அளவுக்கு டிசைன் செய்யப்பட்டுள்ளது . தங்கள் எப்படி ஒரு விமானத்தை நம்பி அந்த விமானியை நம்பி வெள்ளி நாடு பொய் வருகிண்டீர்களோ அந்த நம்பிக்கைபடி ஆண்டவன் மேல் பரத்தை போட்டுவிட்டு இருங்கள் எல்லாம் நன்றக நடக்கும் மின்சாரம் தமிழ் நாட்டிற்கு கிடைக்கட்டும் கொஞ்சம் தமிழ் மக்களின் முநெர்றதிற்கு வழி விட்டு விலகி நில்லுங்கள்.
Rate this:
Cancel
christopher michael - chennai,இந்தியா
30-நவ-201116:12:02 IST Report Abuse
christopher michael தினமலர் ஒரு குழப்பவாதி
Rate this:
Cancel
muthu - aqaba ,ஜோர்டான்
30-நவ-201115:42:23 IST Report Abuse
muthu முல்லை பெரியாறு அணை வலுவிழந்து உள்ளதாகக் கூறி, புதிய அணை கட்ட, கேரள அரசு முடிவு செய்துள்ளது. இப்பிரச்னையில் பிரதமர் தலையிட்டு, தீர்வு காண வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி, பல்வேறு போராட்டங்கள் நடந்து வருகின்றன. நேற்று முன்தினம், ஆளும் கூட்டணி உட்பட அனைத்து கட்சிகள், இடுக்கி மாவட்டத்தில் "பந்த்' நடத்தின. நேற்று இடுக்கி, எர்ணாகுளம், கோட்டயம், ஆலப்புழா ஆகிய நான்கு மாவட்டங்களில் பா.ஜ., சார்பில் "பந்த்' நடந்தது. இந்த "பந்த்'தில் நாயர் பேரவை உட்பட சில அமைப்பைச் சேர்ந்தவர்களும் பங்கேற்றனர். சில இடங்களில் பிரதமர் மன்மோகன் சிங் மற்றும் முதல்வர் ஜெயலலிதாவின் உருவ பொம்மைகள் எரிக்கப்பட்டன. ஏமாறாதே தமிழா ஏமாறாதே
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X