பொது செய்தி

தமிழ்நாடு

ஒருசில மணி நேரத்துக்குள் அரிவாள் மண்வெட்டி தயாரிப்பு: மக்கள் வியப்பு

Added : டிச 01, 2011 | கருத்துகள் (3)
Share
Advertisement
நாமக்கல்:வேலகவுண்டம்பட்டி வாரச்சந்தை வளாகத்தில், ராஜஸ்தானை சேர்ந்தோர் பல்வேறு வகையான இரும்புப் பொருட்களை, சிலமணி நேரத்தில் தயார் செய்து கொடுப்பது, அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. நாமக்கல் மாவட்டத்தில், விவசாயம் பிரதான தொழிலாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதனால், விவசாயம் சார்ந்த பொருட்கள் கணிசமான அளவில் விற்பனை செய்யப்படுகிறது. குறிப்பாக, அரிவாள்,
ஒருசில மணி நேரத்துக்குள் அரிவாள் மண்வெட்டி தயாரிப்பு: மக்கள் வியப்பு

நாமக்கல்:வேலகவுண்டம்பட்டி வாரச்சந்தை வளாகத்தில், ராஜஸ்தானை சேர்ந்தோர் பல்வேறு வகையான இரும்புப் பொருட்களை, சிலமணி நேரத்தில் தயார் செய்து கொடுப்பது, அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.


நாமக்கல் மாவட்டத்தில், விவசாயம் பிரதான தொழிலாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதனால், விவசாயம் சார்ந்த பொருட்கள் கணிசமான அளவில் விற்பனை செய்யப்படுகிறது. குறிப்பாக, அரிவாள், களைக்கொத்து, மண்வெட்டி உள்ளிட்டவை விற்பனை செய்யப்படுகிறது.அப்பொருட்கள், மோகனூர் மணப்பள்ளி மற்றும் வெளி மாவட்டங்களில் இருந்து வாங்கி வரப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது. அரிவாள் உள்ளிட்ட பொருட்கள் தயார் செய்ய சராசரியாக ஒரு வாரம் வரை பிடிக்கும்.ஆனால், நாமக்கல் அருகே வேலகவுண்டம்பட்டியில், செவ்வாய்க்கிழமை தோறும் கூடும் வாரச்சந்தை வளாகத்தில், அரிவாள் உள்ளிட்டவற்றை, ராஜஸ்தானை சேர்ந்த நபர்கள் சிலமணி நேரத்துக்குள் தயார் செய்து கொடுப்பது அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.அவற்றைக் கண்டு ஆச்சரியத்துக்குள்ளாகும் மக்கள், சிறிய, பெரிய இரும்புகளை அவர்களிடம் வழங்குகின்றனர். அவற்றை அரிவாள், குத்துக்கோள், மண்வெட்டி உள்ளிட்டவைகளாக தயார் செய்து, 100 ரூபாய் முதல், 200 ரூபாய் வரை விலை வைத்து விற்பனை செய்து வருகின்றனர்.


Advertisement




வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
J.K - COIMBATORE,இந்தியா
01-டிச-201121:46:38 IST Report Abuse
J.K சுமந்தவன் கூலி வாங்குகிறான் நம்ம ஆளுகளையும் அதேமாதிரி செய்யசொல்லுங்க, இதே மாதிரி நியூஸ் வரலேன்னா பார்ப்போம்
Rate this:
Cancel
Anand - Paris,பிரான்ஸ்
01-டிச-201112:04:20 IST Report Abuse
Anand அங்க இருக்கறவன் வந்து வேலை செய்து சாதனை செய்யறான். இங்க இருக்கறவன், சினிமா காரன் பின்னாடி போவதும், டாஸ்மாக் கடையில் குடியிருப்பதும் போன்ற நல்ல சேவைகளை செய்து வருகிறான். அப்புறம் எப்படி தமிழகம் முதல் மாநிலம் ஆகும்?
Rate this:
Cancel
CUMBUM P.T.MURUGAN - TRICHY,இந்தியா
01-டிச-201107:38:27 IST Report Abuse
CUMBUM P.T.MURUGAN பாரதியார் பாடிய 'ஆயுதம் செய்வோம், நல்ல காகிதம் செய்வோம்' என்ற கவிதை கண் முன் நிற்கிறது.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X