தமிழ்நாடு

300 ஆண்டு அரச மரம் முறிந்தது அன்னூரில் போக்குவரத்து பாதிப்பு

Added : டிச 01, 2011
Advertisement

அன்னூர் : அன்னூர் அருகே மழையால் மரம் முறிந்து விழுந்து அவிநாசி ரோட்டில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. அன்னூர் அவிநாசி மெயின்ரோட்டில் ஊத்துப்பாளையம் பஸ் ஸ்டாப்பில் மாரியம்மன் கோவில் உள்ளது. கோவில் வளாகத்தில் 300 ஆண்டுகள் பழமையான அரச மரம் இருந்தது. நேற்று அதிகாலை, அன்னூர் பகுதியில் கன மழை பெய்தது. பலத்த காற்றும் வீசியது. இம்மழையில் நேற்று காலை அரச மரம் முறிந்து அவிநாசி ரோட்டில் விழுந்தது. பெரிய மரம் என்பதால் அவிநாசி ரோடு முழுவதும் அடைபட்டுவிட்டது. இதனால் அவிநாசி - மேட்டுப்பாளையம் வழித்தடத்தில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. நெடுஞ்சாலை உதவி பொறியாளர் அறிவழகன் தலைமையில் சாலை பணியாளர்கள், பொக்லைன் இயந்திரத்தால் முறிந்த மரத்தை அப்புறப்படுத்தினர். மரத்தின் ஒரு பகுதி பொக்லைன் இயந்திரத்தால் அகற்ற முடியாததால், ரம்பத்தால் அறுத்து அப்புறப்படுத்தப்பட்டது. இதனால், அந்த பாதையில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.



Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X