பொது செய்தி

தமிழ்நாடு

ஐயப்ப பக்தர்கள் கேரள பயணம் ரத்து: எல்லையில் பயங்கர பதட்டம்!

Added : டிச 07, 2011 | கருத்துகள் (105)
Advertisement

சென்னை: முல்லை பெரியாறு அணை பிரச்னை காரணமாக, கேரளா, இடுக்கி மாவட்டத்தில், ஐயப்ப பக்தர்கள் தாக்கப்பட்டு வருவதால், அவர்களில் பெரும்பாலானோரின் பயணம் ரத்தாகியுள்ளது. தமிழக - கேரள எல்லையில், வாகனப் போக்குவரத்து முற்றிலும் துண்டிக்கப்பட்டு, பயங்கர பதட்டம் நிலவுகிறது.


முல்லை பெரியாறு பிரச்னை காரணமாக, தமிழக - கேரள எல்லையில் சில நாட்களாக மறியல், கடையடைப்பு சம்பவங்கள் நடக்கின்றன. இதில் ஐயப்ப பக்தர்கள், தொழிலாளர்கள் மற்றும் பாமர மக்கள் தொழில் பாதிப்பால் பாதிக்கப்பட்டுள்ளனர். நீலகிரி மாவட்டம் பந்தலூர் அருகே எலியாஸ் கடை சந்திப்பு பகுதியில் நேற்று காலையில் ஆர்ப்பாட்டம் மற்றும் மறியல் போராட்டம் நடந்தது. மறியலில் ஈடுபட்ட 14 பேரை, போலீசார் கைது செய்தனர். தமிழகத்தில் இருந்து வழக்கமாகச் செல்லும் பயணப்பாதைகள் முழுவதும், பதட்டம் எப்போது தீரும் என்ற கேள்விக்குறி எழுந்திருக்கிறது. சென்னை, திண்டுக்கல், ஓசூர் போன்ற மாவட்டங்களில், கேரள உரிமையாளர்களின் நகைக் கடைகள், நிதி நிறுவனங்கள் மீது, மக்கள் ஆவேசத்தில் தாக்குதல் நடத்தினர்.


மாற்றுப் பாதை: குமுளிவழியாக, கேரளாவிற்கு சாலைப் போக்குவரத்து முற்றிலும் நிறுத்தப்பட்டு உள்ளது. தாக்குதல் பீதியில் அய்யப்ப பக்தர்கள், பொள்ளாச்சி - பாலக்காடு, பொள்ளாச்சி - மீனாட்சிபுரம், பொள்ளாச்சி - நடுப்புனி வழியாகவும், கோவை - வாழையாறு, ராஜபாளையம், கன்னியாகுமரி, செங்கோட்டை, தென்காசி - அச்சன் கோவில் வழியாகவும் செல்லத் துவங்கியுள்ளனர். ஆனால், இது தடைபடுமா அல்லது தொடருமா என்பது இப்போது தெரியாது என, பலரும் கருத்துதெரிவித்தனர். பெரும்பாலானோர், மாற்றுப் பாதை குறித்த விவரம் தெரியாமல், திண்டாடி நிற்கின்றனர். ஆந்திரா, கர்நாடக பக்தர்கள், மேற்கொண்டு பயணத்தை தொடர முடியாமல், டிக்கெட்டை கையில் வைத்துக் கொண்டு மிரண்டு போயுள்ளனர். கார்த்திகை தீபநாளன்று அதிகம் பக்தர்கள் ஐயப்பனை தரிசிப்பது நிச்சயம் தடைபட்டதால், மிகவும் அதிருப்தியுடன் உள்ளனர்.

பயணம் தற்காலிக ரத்து: தமிழகத்திலிருந்து கிளம்ப இருந்தவர்கள், தங்கள் பயணத்தை தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளனர். டிசம்பர் 27ம் தேதி வரை, மண்டல பூஜைக்காக, சபரிமலை நடை திறந்திருக்கும் என்பதாலும், டிசம்பர் 30ம் தேதி மீண்டும் மகர ஜோதிக்காக நடை திறக்கப்படும் என்பதாலும், பிரச்னை தீரும் வரை காத்திருந்து, பின், பயணத்தை மேற்கொள்ள முடிவு செய்துள்ளனர். ஆனால், முன்கூட்டியே பஸ், ரயில் டிக்கெட் வாங்கியுள்ளவர்கள், டிக்கெட்டை ரத்து செய்யவும் முடியாமல், புதிதாக டிக்கெட் கிடைக்காவிட்டால் என்ன செய்வது என்று தெரியாமல் குழப்பத்தில் உள்ளனர்.

பஸ்களில் கூட்டம் குறைந்தது: ""முல்லை பெரியாறு பிரச்னை காரணமாக, கோவையிலிருந்து கேரளாவுக்குச் செல்லும் பஸ்களில், தற்போது பயணிகளின் கூட்டம் குறைந்துள்ளது,'' என தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் (கோவை) தெரிவித்து உள்ளது.

அரசு போக்குவரத்துக் கழக உயரதிகாரி ஒருவர் கூறியதாவது: கோவையில் இருந்து கேரளாவில் பாலக்காடு, திருச்சூர் உள்ளிட்ட நகரங்களுக்கு பஸ்கள் இயக்கப்படுகின்றன. அதில், பாலக்காடுக்கு மட்டுமே அதிக பஸ்கள் இயக்கப்படுகின்றன. அரசு போக்குவரத்துக் கழகம் சார்பில் 13 பஸ்களும், கேரள போக்குவரத்துத் துறை சார்பில் 13 பஸ்களும் கோவை - பாலக்காடு இடையில் இயக்கப்படுகின்றன. 10 டவுன் பஸ்கள், எல்லைப்பகுதியான வாளையார் வரை சென்று வருகின்றன. கோவை - பாலக்காடு வழித்தடத்தில் இதுவரை எந்த பிரச்னையும் பஸ் போக்குவரத்தில் ஏற்படவில்லை. ஆனால், பயணிகளின் எண்ணிக்கை மட்டும் வெகுவாகக் குறைந்துள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.


Advertisement
வாசகர் கருத்து (105)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Siva Raman - Chennai,இந்தியா
08-டிச-201123:11:48 IST Report Abuse
Siva Raman தமிழர்கள் யோசிக்க வேண்டிய விஷயம். பணத்துக்காக நாம கேரளாக்கு அடிமை ஆகிவிட கூடாது. தினமும் 50 லாரி வண்டி நிறைய பசு மாடு எரும மாடு அடிமாட்டுக்கு கடத்த படுத்து. இத தடுக்க என் யோசிகுறங்க. தமிழன் தான் காசு காண்டி இந்த கேவலமான வேலை பாக்குறான்.அரிசி தினமும் ரேஷன் கடைல இருந்து கடத்துறாங்க கரண்ட் நம்ம அரசாங்கமே கம்பிளி விரிச்சு வங்கிகொங்க சொல்றாங்க. தங்க நகை கடன் தங்க கடை சென்னை ல இருக்குற டீ கடை எல்லாமே மலையாளி தான். கேரளாக்கு நாம எதுமே ஒத்துழைப்பு கொடுக்க கூடாது.எல்லா தமிழனும் அவனா உணரனும். நாம இல்லன அவன் ரப்பர் தேயேளை தான் சபடனும். நம்ம அரிசி சாப்டுட்டு அவனுங்க தண்ணி கொடுக்க மடான்கலம். கேரள குட்டி பாகிஸ்தான். சீமான் எங்க சார் போனீங்க. அம்மா ஓட விட்டு அடிபங்க பயமா.
Rate this:
Share this comment
Cancel
Karthik - Chennai,இந்தியா
08-டிச-201123:03:52 IST Report Abuse
Karthik இந்த பிரச்சனையின் மூல காரணம் மத்தியில் ஆளும் அரசு தான்.நாம் இங்கே கூடங்குளம் அணுமின் நிலைய பீதியில் இருக்கிறோமோ,ஒரு போலியான பயத்தை மலையாளிகளுக்கு உண்டாக்குகிறார்கள் அங்குள்ள ஆளும் காங்கிரஸ் கட்சி மூலமாக.தமிழ்நாட்டில் இருந்து மற்றும் தமிழ்நாடு வழியாக கேரளா மாநிலத்துக்கு செல்லும் உணவுப் பொருள்கள், மருத்துவப் பொருள்கள் அனைத்தையும் காலவரையற்ற தடை செய்யவேண்டும். இல்லாவிடில் அவ்வளவு சுலபமாக தீர்வு கிடைக்காது.அல்லது தமிழ்நாடு தனி குடியாட்சி பெறவேண்டும்.
Rate this:
Share this comment
Cancel
palanichamy t - chennai,இந்தியா
08-டிச-201122:34:28 IST Report Abuse
palanichamy t rivers should be nationlised . like raiway department the central govt can maintain the dam. similarly the Hindu religious endowment board of all states to be taken over by centaral government . else the bifurcation of states should be based on rivers / not on the basis of language.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X