பொது செய்தி

இந்தியா

சபரிமலை பக்தர்களுக்கு அடுத்த சிக்கல் : வனப்பாதையில் நடந்து செல்ல கட்டுப்பாடு

Added : டிச 08, 2011 | கருத்துகள் (6)
Share
Advertisement
சபரிமலை பக்தர்களுக்கு அடுத்த சிக்கல் : வனப்பாதையில் நடந்து செல்ல கட்டுப்பாடு

வண்டிப்பெரியாறு : "சபரிமலைக்கு காட்டு வழியே நடந்து செல்லும் பக்தர்கள், இனிமேல், காலை 6 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை மட்டுமே அனுமதிக்கப்படுவர்' என, கேரள மாநில போலீஸ் டி.ஜி.பி.,ஜேக்கப் புன்னூஸ் தெரிவித்தார்.

முல்லைப் பெரியாறு அணைக்கட்டு பிரச்னையை பெரிதாக்கி, இரு மாநிலத்திலும் பதட்டத்தை ஏற்படுத்தியது கேரள அரசு. பிரச்னை காரணமாக, தேனி மாவட்டத்தில், தமிழக-கேரள எல்லைப் பகுதியில், சில தினங்களாக பதட்டம் நீடிக்கிறது.

தேனி மாவட்டத்தைச் சேர்ந்த தொழிலாளர்கள், இடுக்கி பகுதியில் வேலைக்குச் செல்ல முடியாத நிலையும், அய்யப்ப பக்தர்கள் சபரிமலைக்குச் செல்ல முடியாத நிலையும் ஏற்பட்டுள்ளது. இரு மாநிலங்களிலும் ஏற்பட்ட பதட்டம் காரணமாக, சபரிமலைக்குச் செல்லும் பக்தர்களின் எண்ணிக்கை குறையத் தொடங்கியது.

புதிய கட்டுப்பாடு: நேற்று முன்தினம், பக்தர்கள் ஓய்வெடுக்கும் சத்திரம் பகுதியில், கேரள மாநில போலீஸ் டி.ஜி.பி., ஜேக்கப் புன்னூஸ் பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின், அவர் கூறுகையில், "சபரிமலைக்குச் செல்லும் காட்டு வழியில், யானைகள் அடிக்கடி புகுந்து, பக்தர்களுக்கும், வியாபாரிகளுக்கும் சேதங்களை ஏற்படுத்தி விடுகின்றன.

இதனால், பக்தர்களிடமும், வியாபாரிகளிடமும் அச்சம் ஏற்பட்டுள்ளது. இதை தவிர்க்க, காட்டுப் பாதையில் இனிமேல், காலை 6 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை மட்டுமே பக்தர்கள் நடந்து செல்ல அனுமதிக்கப்படுவர். காட்டுப் பாதையில் போதுமான வெளிச்சம் இல்லை. இரவில் வன விலங்குகள் பக்தர்களை தாக்கக்கூடும் என்பதால், இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது' என்றார்.

தடை நடவடிக்கை, தமிழகத்தில் இருந்து சபரிமலைக்கு, பெரிய பாதை வழியாக நடந்து செல்ல எண்ணும் பக்தர்களுக்கு, அடுத்த சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.


Advertisement


வாசகர் கருத்து (6)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Pattabhiraman Lakshminarasimhan - chennai,இந்தியா
09-டிச-201115:42:12 IST Report Abuse
Pattabhiraman Lakshminarasimhan நம் மாநிலத்தில் உள்ள ஐயப்பன் கோயில்களுக்கு இருமுடி கட்டி செல்லுங்கள் தமிழர்களே கேரளத்துக்கு வருவாயை நிறுத்துங்கள்
Rate this:
Cancel
biju Thumparapulli - kERMAN,ஈரான்
09-டிச-201112:41:30 IST Report Abuse
biju Thumparapulli ஸ்ரீ ரங்கா அதே போல karala ல தமிழ் மக்கள் 30 லட்சம் பேர் வசிகிறார்கள் மக்கள் பயன்படுத்தும் நீரை குறுக்கு புத்தியா சொல்லாதிர்கள் ... நன்றி பயமா இருக்கு ~~~~~
Rate this:
Cancel
Sathish Kumar - Tiruchirapalli (Trichy),இந்தியா
09-டிச-201110:21:28 IST Report Abuse
Sathish Kumar கேரளாவிலும் தமிழகத்திலும் சில இடங்களில் மக்கள் மீது தாக்குதல் நடந்துள்ளது. இத்தகைய செயல்களைப் புரிந்தோரை மாநில அரசுகள் கடுமையாக தண்டிக்க வேண்டும். முல்லைப் பெரியாறு அணைப் பிரச்சனையைப் பூதாகாரமாக்கி, மக்களிடையே பிளவையும், சபரிமலை பயணத்தைச் சீர்குலைக்கவும் சமூக விரோத சக்திகள் சதி செய்கிறார்கள் என்று இந்து முன்னணி கருதுகிறது. இதற்குச் சந்தர்ப்பவாத அரசியல் கட்சிகள் துணை போகின்றன. இது சம்பந்தமாக தமிழக முதல்வர் அறிக்கையை இந்து முன்னணி வரவேற்கிறது, பாராட்டுகிறது. கர்நாடகாவில் திருவள்ளுவர் சிலை வைப்பதில் இதுபோன்ற பதட்டத்தை ஏற்படுத்திய சமூக விரோதிகள் நடத்திய அராஜகத்தை நாம் மறந்திருக்க முடியாது. முல்லைப் பெரியாறு பிரச்சனையைப் பெரிதாக்க முனைந்தது கேரள கிறிஸ்தவ காங்கிரஸ் எனும் மாணிக் காங்கிரஸ் என்பது தெரிய வருகிறது. இரு மாநிலத்தவர்களுக்குள்ளும் சண்டையை, விரோதத்தை உருவாக்கத் திட்டமிட்ட சதி நடக்கிறது. ஒரு சில ஆண்டுகளுக்கு முன்னர் ஐயப்பன் கோயிலில் ஒரு பெண் நுழைந்ததாகவும், அதனால் ஆலயம் கலங்கப்பட்டதாகவும் பரபரப்பை ஏற்படுத்தினர். இது குறித்த வழக்கு நீதிமன்றத்தில் உள்ளது, சென்ற ஆண்டு பொதுமக்கள் நடந்துவரும் பாதையில் வாகனத்தை இயக்க அனுமதித்ததின் விளைவாக ஏற்பட்ட விபத்தில் கூட்ட நெரிசலில், நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்த வழக்கில், தேவையில்லாமல் மகர ஜோதி இயற்கையா? செயற்கையா என நீதிமன்றம் தலையிட்டது. இதனையெல்லாம் புறந்தள்ளி ஐயப்பன் மீது அசைக்கமுடியாத நம்பிக்கை கொண்ட பக்தர்கள், உலகம் முழுவதிலும் இருந்து இனம், மொழி, நாடு இவற்றைக் கடந்து, கோடிக்கணக்கானவர்கள் இந்தப் பக்திப் பயணத்தை மேற்கொள்கிறார்கள். இதனைத் தடுக்கவே முல்லைப் பெரியாறு அணைப் பிரச்சனையைக் கையில் எடுத்துள்ளார்கள். மக்களிடையே பீதியை ஏற்படுத்தும் கூட்டத்தினர் சில நூறு பேர்கள் தான். இவர்களுக்கு மக்களின் ஆதரவோ, மதிப்போ கொஞ்சமும் கிடையாது. இரு மாநிலத்திலும் கோடிக்கணக்கான மக்கள் அமைதியாக, பொறுமையாக இருக்கிறார்கள். இந்தச் சிறு நரிக் கூட்டத்திற்கு அரசியல் கட்சிகள் ஆதரவு அளிக்கக்கூடாது. தமிழக, கேரள அரசுகள் இந்த கூட்டத்தை இரும்புக் கரம் கொண்டு அடக்க வேண்டும். ஐயப்ப பக்தர்கள் வழிபாடு நடத்த உச்சபட்ச பாதுகாப்பு ஏற்பாடுகளை மத்திய, மாநில அரசுகள் செய்து தரவேண்டும். மக்களைப் பிளவுபடுத்தும் சமூக விரோத சக்திகளைக் கண்காணித்துக் கைது செய்ய உரிய நடவடிக்கைகளை இரு மாநிலக் காவல்துறையும் எடுக்க வேண்டும். லட்சக்கணக்கான பக்தர்கள் தங்கள் பக்திப் பயணத்தின் பாதியில் இருப்பதால் அவர்களுக்கு உணவு, தங்குமிட பாதுகாப்பை அரசுகள் செய்து தரவேண்டும். பயணத்தை மேற்கொள்வது தடுக்கப்பட்டால் மகரஜோதி சமயத்தில் பல கோடி பக்தர்கள் வர நேரிடும். இதனையும் அரசுகள் கருத்தில் கொள்ள வேண்டும். இதனால் பக்தர்கள் தங்கு தடையின்றி சென்று வர, தேவைப்பட்டால் துணை ராணுவப்படையை மத்திய அரசு பாதுகாப்பிற்கு அனுப்பி வைக்கவேண்டும். நடுநிலையான ஊடகங்கள் பாரதத்தின் ஒற்றுமை, ஒருமைப்பாடு, இறையாண்மைக்கு எதிராகச் செயல்படும் தேச விரோத சக்திகளைத் தோலுரித்துக் காட்டிட முன்வர வேண்டும் என்று இந்து முன்னணி கேட்டுக்கொள்கிறது.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X