பொது செய்தி

இந்தியா

கிரெடிட் கார்டுகளுக்கான புதிய விதிமுறைகள்

Updated : ஜூலை 10, 2010 | Added : ஜூலை 10, 2010 | கருத்துகள் (3)
Share
Advertisement

மும்பை :கிரெடிட் கார்டு வழங்குதல் மற்றும் உபயோகித்தலில் புதிய விதிமுறைகளை, இந்திய ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ளது. இதுகுறித்து ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள செய்தி்க்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது : கிரெடிட் கார்டு பயன்பாடு குறித்த புதிய வழிமுறைகளை ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ளதாகவும், இந்த வழிமுறைகளை மீறும் வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்கள் கடுமையான தண்டனைக்கு உள்ளாவர் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில் மேலும் தெரிவித்துள்ளதாவது : சமீபகாலமாக, கிரெடிட் கார்டு உபயோகிப்பாளர்களிடமிருந்து அதிகளவில் புகார்கள் வருவதாகவும், அந்த புகார்கள் பெரும்பாலும், அதிகளவில் பணம் வசூலிப்பதாகவும், அதற்கு உரிய விளக்கம் வழங்கப்படுவதில்லை என்று உள்ளதாகவும் அது தெரிவி்த்துள்ளது. கிரெடிட் கார்டுகள் இலவசமாக வழங்கப்படுகின்றது என்பதை தெரிவித்து, பின் ஆண்டுக்கட்டணம் வசூலிக்கப்படுவதாகவும், புதிய லோன்கள் குறித்த அழைப்புகள் அடிக்கடி போன் மூலம் வருவதாகவும், பில் தவறாக அனுப்பப்படுவதாகவும், உரிய நிறுவனத்திடம் சென்று விசாரித்தால், அதற்குரிய விளக்கம் அளிக்கப்படுவதில்லை என்றும் அதில் ‌தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த குறைகளை நிவர்த்தி செய்ய, இந்திய ரிசர்வ் வங்கி 2007ம் ஆண்டே, கிரெடிட் கார்டுகளுக்கான வழிமுறைகளை வகுத்து வெளியிட்டதாகவும் , ஆனால் அதனை சில வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்கள் பின்பற்றுவதில்லை என்றும் அதில் தெரிவித்துள்ளது. தற்போது, புதிய வழிமுறைகள் வகுக்கப்பட்டு வெளி்யிடப்பட்டள்ளதாகவும், இந்த வழிமுறைகளை மீறுவோர் மீது கடுமையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. ரிசர்வ் வங்கி வகுத்துள்ள புதிய வழிமுறைகளாவன : உபயோகிப்பாளர்களுக்கு கிரெடிட் கார்டு வழங்கப்படுவதற்கு முன்னரே, வட்டி விகிதங்களை தெரிவிக்க வேண்டும் என்றும், தங்கள் நிறுவனம் வசூலிக்கப்படும் முறைகள் குறித்து தெரிவிக்கப்பட வேண்டும் என்றும், வட்டி , பணம் வசூலிக்கப்படும் முறைகள் ஒளிவுமறைவில்லாததாக இருக்க வேண்டும் என்றும், இதுகுறித்த விபரங்களை வங்கிகள் மற்றும் நிதிநிறுவனங்கள் தங்கள் இணையதளத்தில் வெளியிட வேண்டும் என்றும், வட்டி விகித மாற்றத்தை, அவ்வப்போது தங்கள் வாடிக்கையாளர்களுக்கு தெரிவிக்க வேண்டும் என்றும், வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களிடம், கிரெடிட் கார்டு உபயோகிப்பாளர்கள் ஏதாவது புகாரைத் தெரிவித்தால், அதிகபட்சம் 60 நாட்களுக்குள் அதற்கு தீர்வு காண வேண்டும் என்றும், உபயோகிப்பாளர்களுக்கு உரிய விளக்கத்தை உரிய நேரத்தில் தெரிவிக்க வேண்டும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் தற்போது 1.9 கோடி கிரெடிட் கார்டு உபயோகிப்பாளர்கள் உள்ளதாகவும், ஐசிஐசிஐ வங்கி, ‌ஹெச்டிஎப்சி வங்கி, ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா, பஞ்சாப் நேஷனல் வங்கி, வெளிநாட்டு வங்கிகளான ஸ்டாண்டர்ட் சார்ட்டர்ட் வங்கி, ‌ஹெச்எஸ்பிசி வங்கி, சிட்டிபாங்க் உள்ளிட்ட வங்கிகள் தற்போது கிரெடிட் கார்டுகளை வழங்கி வருவதில் முன்னணி வகிப்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement
வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
சு.சிவகுமார் - chennai,இந்தியா
10-ஜூலை-201015:31:10 IST Report Abuse
சு.சிவகுமார் கிரெடிட் கார்டு நியூஸ் படித்தேன்.பேங்க் சில விதிமுறைகள் பின்பற்றினால் கிரெடிட் கார்ட்களில் நடக்கும் சில தவறுகளை குறைக்கலாம். கிரெடிட் கார்டில் பயன்படுத்துபவரின் போட்டோ கண்டிப்பாக இருக்கவேண்டும். கிரெடிட் கார்டு பயன்படுத்தும் போது கார்டு சீக்ரெட் நம்பரை போட்டால் தான் மிஷின் அக்சப்ட் பண்ணவேண்டும்.(ஏடிஎம் கார்டு மாதிரி ). கிரெடிட் கார்டு பயன்படுத்தும்போது அவர்களின் கைவிரல் ரேகை பதிவு செய்ய சொல்லலாம்.வங்கியில் கார்டு கொடுக்கும் போது கைவிரல் ரேகை வாங்கி ஸ்கேன் செய்து வைத்து கொள்ளவேண்டும் . நன்றி .
Rate this:
Cancel
s.sivakumar - chennai,இந்தியா
10-ஜூலை-201014:49:33 IST Report Abuse
s.sivakumar I read credit card news . I will give some suggeston about cretid card, 1) compulsary user photo print in credit card, 2)credit card swipe time the machine accept only put in secret code number (likly ATM card) 3) user finger print taken card using time.
Rate this:
Cancel
வ.நந்தகுமார் - chennai,இந்தியா
10-ஜூலை-201014:01:19 IST Report Abuse
வ.நந்தகுமார் டேய் கடன் வாங்கி சாவதிங்க.......இருக்கறத வச்சி நிம்மதியா இருக்க பாருங்க ...சரியா
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X