இந்தியப் பெருங்கடலிலும் கால் வைக்கிறது சீனா:செஷல்ஸ் தீவில் விரைவில் ராணுவத் தளம் உருவாகிறது

Added : டிச 12, 2011 | கருத்துகள் (2)
Share
Advertisement
பீஜிங்:இந்திய, சீன உறவில், மேலும் ஒரு சிக்கலை உருவாக்கும் வகையில், இந்தியப் பெருங்கடலில், முதன் முறையாக, ஒரு ராணுவத் தளத்தை அமைக்கப் போவதாக, சீனா நேற்று அறிவித்துள்ளது.இந்தியாவின் அண்டை நாடுகளான, பாகிஸ்தான், நேபாளம், மியான்மர், இலங்கை, வங்கதேசம் ஆகிய அனைத்தும், தற்போது, சீனாவுடன் நெருக்கமான உறவைப் பேணி வருகின்றன. போதாக்குறைக்கு, இந்த நாடுகள் சிலவற்றில், சீனா தனது
இந்தியப் பெருங்கடலிலும் கால் வைக்கிறது சீனா:செஷல்ஸ் தீவில் விரைவில் ராணுவத் தளம் உருவாகிறது

பீஜிங்:இந்திய, சீன உறவில், மேலும் ஒரு சிக்கலை உருவாக்கும் வகையில், இந்தியப் பெருங்கடலில், முதன் முறையாக, ஒரு ராணுவத் தளத்தை அமைக்கப் போவதாக, சீனா நேற்று அறிவித்துள்ளது.இந்தியாவின் அண்டை நாடுகளான, பாகிஸ்தான், நேபாளம், மியான்மர், இலங்கை, வங்கதேசம் ஆகிய அனைத்தும், தற்போது, சீனாவுடன் நெருக்கமான உறவைப் பேணி வருகின்றன. போதாக்குறைக்கு, இந்த நாடுகள் சிலவற்றில், சீனா தனது கடற்படைத் தளங்களையும் அமைத்து வருகிறது. பாகிஸ்தானுக்கு அணு உலைகளை நிறுவி, உதவி செய்து வருகிறது.


இந்நிலையில், இந்தியாவுக்கு மேலும் நெருக்கடி கொடுக்கும் வகையில், இந்தியப் பெருங்கடலில், ஆப்ரிக்கக் கண்டத்தின் அருகில் உள்ள மடகாஸ்கர் தீவின் வடக்கில் அமைந்துள்ள செஷல்ஸ் தீவில், ராணுவத் தளம் ஒன்றை அமைக்கப் போவதாக, சீன பாதுகாப்பு அமைச்சகம், நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்தியப் பெருங்கடலில், சீனா ராணுவத் தளம் அமைப்பது, இதுவே முதன் முறை என்பது குறிப்பிடத்தக்கது. ஏற்கனவே, சர்வதேச கடற்படுகை ஆணையத்துடன் சீனா ஒரு ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது. அதன்படி, இந்தியப் பெருங்கடலின் தென்மேற்குப் பகுதியில், 10 ஆயிரம் ச.கி.மீ., பரப்பளவில், அடுத்த 15 ஆண்டுகளுக்கு, சீனா, பாலிமெட்டாலிக் சல்பைட் தாது துரப்பணப் பணியில் ஈடுபடும்.


இந்நிலையில், செஷல்ஸ் தீவில் ராணுவத் தளம் அமைப்பதன் மூலம், தென்சீனக் கடலில் மட்டுமல்லாமல், இந்தியப் பெருங்கடலிலும், தனது ஆதிக்கத்தை நிலைநாட்ட சீனா முயல்வது வெளிப்படையாகியுள்ளது.இதுகுறித்து, சீன பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:பாதுகாப்பு நடவடிக்கைகளின் போது, செஷல்ஸ் தீவில் உள்ள துறைமுகங்களில் இருந்தோ, பிற நாடுகளில் இருந்தோ, போதுமான பொருட்கள் வினியோகத்தைப் பெறத் தான், இந்த ராணுவத் தளம் அமைக்கப்படுகிறது.


தொலை தூர பாதுகாப்பு நடவடிக்கைகளின் போது, கடற்படைகளுக்கு வேண்டிய பொருட்களை, அருகில் உள்ள துறைமுகங்களில் இருந்து பெறுவதற்காக, இதுபோன்ற ராணுவத் தளங்கள் அமைப்பது, சர்வதேச வழக்கம் தான்.கடந்த 2008ல், சீனா தனது முதல் கடல்படையை, ஏடன் வளைகுடாவுக்கு அனுப்பியதில் இருந்து, ஜிபவுட்டி, ஓமன் மற்றும் ஏமன் நாடுகளின் துறைமுகங்களில் இருந்து, இது போன்ற வினியோகங்கள் நடக்கின்றன.


கடந்த மாதம், செஷல்ஸ் தீவுக்கு, சீன பாதுகாப்பு அமைச்சர் லியாங் குவாங்லீ சென்ற போது, இந்த முடிவு எடுக்கப்பட்டது. இதை, செஷல்சும் வரவேற்றுள்ளது.இவ்வாறு, அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.ஆனால், சீனா தனது முதல் போர் விமானந்தாங்கிக் கப்பலை, கடந்த ஆகஸ்டில் வெள்ளோட்டம் விட்டதையும், செஷல்ஸ் தீவில் ராணுவத் தளம் அமைப்பதையும், இணைத்துப் பார்க்க வேண்டும் என நிபுணர்கள் கூறுகின்றனர்.


Advertisement
வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
rajmohan - chennai,இந்தியா
13-டிச-201121:52:53 IST Report Abuse
rajmohan மிகவும் நல்ல சமாசாரம், ஈழ தமிழர்களுக்கு செய்த கொடுமைக்கு, கடவுள் வழங்கிய பரிசு.
Rate this:
Cancel
sheela mani - dubai,ஐக்கிய அரபு நாடுகள்
13-டிச-201110:55:17 IST Report Abuse
sheela mani இந்தியாவை சுற்றிலும் சீனா அரண் அமைத்து விட்டது. கார்கில் போர் மாதிரி மிக சிறியதான போர் வந்தால் மக்கள் எல்லோரும் 2G , முல்லை பெரியார், அன்னா ஹசாரே எல்லாம் மறந்துவிட்டு இந்தியன் என்ற உணர்வோடு பொங்கி எழுவார்கள். இந்திய மக்களே இந்த ஒற்றுமையை எல்லா காலத்திலும் இருந்தால் நம் நாட்டில் போர் தொடுக்க வேண்டும் என்று கனவில் கூட நினைக்க மாட்டார்களே. பக்கத்துக்கு மாநிலம் நன்றாக இருந்தால் இந்தியாவுக்கே நல்லதுதானே . இந்தியன் என்ற உணர்வோடு இருங்கள். உங்கள் ஒற்றுமையை ஒரு போர் வந்தா தானா காட்ட வேண்டும்?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X