இணையதள தகவல்கள் தணிக்கை செய்யப்படாது: மத்திய அரசு உறுதி

Added : டிச 15, 2011 | கருத்துகள் (8)
Share
Advertisement

புதுடில்லி: சமூக வலைத்தளங்களின் நிர்வாகிகளுடன், மத்திய அரசு தரப்பில், நேற்று பேச்சு வார்த்தை துவக்கப்பட்டது. "இணையதளங்கள் மற்றும் வலைத்தளங்களில் வெளியாகும் தகவல்களை, தணிக்கை செய்யும் எண்ணம் அரசுக்கு இல்லை' என, அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


"சமூக வலைத் தளங்கள் மற்றும் இணையதளங்களில் வெளியாகும் சில தகவல்கள், மத உணர்வுகளை புண்படுத்தும் வகையில் உள்ளன. இதுபோன்ற தகவல்களை வெளியிடுவதை தவிர்க்க வேண்டும். அரசின் இந்த முயற்சிக்கு, சம்பந்தப்பட்ட தளங்கள், ஒத்துழைப்பு அளிக்கவில்லை எனில், தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும்' என, மத்திய தொலைத் தொடர்பு துறை அமைச்சர் கபில் சிபல், கடந்த வாரம் கூறியிருந்தார். இதற்கு கடும் எதிர்ப்பு எழுந்தது. இந்நிலையில், கூகுள், பேஸ்புக், டுவிட்டர் போன்ற சமூக வலைத்தளங்கள் மற்றும் இணையதளங்களின் நிர்வாகிகளுடன், அமைச்சர் கபில் சிபல், நேற்று பேச்சுவார்த்தையை துவக்கினார். இதன்பின், அவர் கூறியதாவது: சமூக வலைத் தளங்களால், நாட்டுக்கும், குடிமக்களுக்கும், எந்த வகையில் பலன் கிடைக்கும் என்பது பற்றி, சம்பந்தபட்ட நிர்வாகிகளிடம் கருத்து கேட்கப்பட்டு வருகிறது. வலைத்தள நிர்வாகிகள் மட்டுமல்லாமல், வெளியுறவு அமைச்சகம், தகவல் தொடர்பு அமைச்சகம் ஆகியவற்றின் அதிகாரிகளிடமும், இது தொடர்பாக கருத்து கேட்கும் நடவடிக்கை துவங்கியுள்ளது என்றார்.


Advertisement
வாசகர் கருத்து (8)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Kasimani Baskaran - Singapore,சிங்கப்பூர்
16-டிச-201114:59:35 IST Report Abuse
Kasimani Baskaran "ஜனநாயகம் அதிகமாக உள்ளது. அதனால் ஒரு முனையை மழுங்க அடிப்பதில் எந்த தவறும் இல்லை" - கத்தியை மொத்தத்தில் உடைத்து போட்டு விட்டால் தேவலாம்.
Rate this:
Cancel
ramesh - villupuram,இந்தியா
16-டிச-201109:45:44 IST Report Abuse
ramesh பிளாக் பெர்ரி மேல சொன்ன தடைகள் என்ன ஆனது . செட்டில் ஆகி விட்டதா ?
Rate this:
Kasimani Baskaran - Singapore,சிங்கப்பூர்
16-டிச-201117:32:23 IST Report Abuse
Kasimani BaskaranTechnically it would not be possible to give access to the government to de-crpt information on the fly. However they can assist the government if there is a request to monitor certain user/number. Government asked them to setup servers locally in India - to which the government of India has access to. Blackberry does only provide limited access to even the United States government....
Rate this:
Cancel
Kasimani Baskaran - Singapore,சிங்கப்பூர்
16-டிச-201107:25:23 IST Report Abuse
Kasimani Baskaran தினமலர் மட்டும் தணிக்கை செய்யாமல் பொது மக்கள் எழுதும் கருத்தை வெளியிடுகிறதா என்ன?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X