உணவு பாதுகாப்பு மசோதாவுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்

Added : டிச 18, 2011 | கருத்துகள் (9)
Advertisement
உணவு பாதுகாப்பு மசோதாவுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்

புதுடில்லி: பிரதமர் மன்மோகன்சிங் தலைமையில் நேற்று நடந்த, மத்திய அமைச்சரவை கூட்டத்தில், உணவு பாதுகாப்பு மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. நாட்டில் உள்ள, 63.5 சதவீத மக்களுக்கு மானிய விலையில் உணவுப் பொருட்கள் கிடைப்பதற்கு, இந்த மசோதாவில் வழிவகை செய்யப்பட்டுள்ளது.


கடந்த 2009 லோக்சபா தேர்தல் பிரசாரத்தின் போது, "நாங்கள் ஆட்சிக்கு வந்தால், உணவு பாதுகாப்பு மசோதா நிறைவேற்றப்படும்'என, காங்கிரஸ் வாக்குறுதி அளித்திருந்தது. ஆட்சிக்கு வந்த பின், இந்த மசோதாவை நிறைவேற்றுவதில் காங்கிரஸ் தலைவர் சோனியா, மிகுந்த ஆர்வம் காட்டினார். ஆனாலும், சில பிரச்னைகள் காரணமாக, மசோதாவுக்கு ஒப்புதல் வழங்குவதில் தாமதம் ஏற்பட்டது. இந்நிலையில், முக்கியத்துவம் வாய்ந்த இந்த மசோதாவுக்கு, மத்திய அமைச்சரவை நேற்று ஒப்புதல் அளித்தது. பார்லிமென்டின் நடப்பு கூட்டத் தொடரிலேயே, மசோதா அறிமுகப்படுத்தப்படும். இதன்பின், பார்லிமென்ட் நிலைக் குழு ஆய்வுக்கு அனுப்பப்படும். அனேகமாக, அடுத்தாண்டு பட்ஜெட் கூட்டத் தொடரில் இம்மசோதா நிறைவேற்றப்படலாம்.


இந்த சட்ட மசோதா அமலானால், நாட்டில் உள்ள மொத்த மக்களில், 63.5 சதவீதத்தினர் மானிய விலையில் உணவு தானியங்களைப் பெறுவர். இவர்களில், கிராமப்புறங்களில் 75 சதவீதம் பேரும், நகர்ப்புறங்களில் 50 சதவீதம் பேரும் பயனடைவர். 14 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு சூடான மதிய உணவு வழங்கப்படும். குடும்பத்தில் மூத்த பெண்மணியின் பெயரில் ரேஷன் கார்டு தரப்படும். வறட்சி, வெள்ளம் போன்ற இயற்கை சீற்ற காலங்களில், அரசு சார்பில் மானிய விலையில் உணவு தானியங்களை வழங்க முடியவில்லை எனில், அதற்குரிய தொகை பணமாக வழங்கப்படும். இந்த சட்டத்தால், உணவு மானிய செலவும், 95 ஆயிரம் கோடியாக அதிகரிக்கும். கடந்த நிதி ஆண்டில் உணவு மானிய செலவு, 63 ஆயிரம் கோடி ரூபாய். அதே நேரத்தில், உணவு தானியங்கள் தேவையும், 55 மில்லியன் டன்னிலிருந்து 61 மில்லியன் டன்னாக அதிகரிக்கும்.

இந்த சட்டத்தின் கீழ் பயனடைவோர், முன்னுரிமை பிரிவினர், பொதுப் பிரிவினர் என, இரண்டு பிரிவுகளாக பிரிக்கப்படுவர். தற்போதைய பொது வினியோக முறையில், வறுமைக் கோட்டுக்கு கீழ் உள்ளவர்களாக அங்கீகரிக்கப்பட்ட குடும்பத்தினர், முன்னுரிமை பிரிவில் இடம் பெறுவர். வறுமைக் கோட்டுக்கு மேல் உள்ளவர்கள், பொதுப் பிரிவில் இடம் பெறுவர். முன்னுரிமை பிரிவில் இடம் பெறும் குடும்பத்தை சேர்ந்தவர்களுக்கு, நபர் ஒன்றுக்கு மாதம் தோறும், ஏழு கிலோ அரிசி மற்றும் கோதுமை, முறையே கிலோ மூன்று மற்றும் இரண்டு ரூபாய் விலையில் வழங்கப்படும். பொதுப் பிரிவினருக்கு குறைந்தபட்ச ஆதரவு விலையில், 50 சதவீதம் விலை குறைவாக, குறைந்தபட்சம் மூன்று கிலோ உணவு தானியம் வழங்கப்படும்.

லோக்பால் மசோதா: இன்று பரிசீலனை: லோக்பால் மசோதா குறித்து மத்திய அமைச்சரவை இன்று பரிசீலிக்கிறது. லோக்பால் மசோதாவை நடப்பு பார்லிமென்ட் கூட்டத்தொடரில் தாக்கல் செய்யாவிட்டால், தொடர் போராட்டங்களை நடத்த போவதாக, சமூக ஆர்வலர் அன்னா ஹசாரே அறிவித்துள்ளார். லோக்பால் மசோதாவை இந்த கூட்டத்தொடரில் தாக்கல் செய்ய, மத்திய அரசும் உறுதியாக உள்ளது. இதையடுத்து தாக்கல் செய்யப்பட உள்ள, லோக்பால் மசோதாவின் இறுதி வடிவத்துக்கு, அமைச்சரவையின் ஒப்புதல் பெற, பிரதமர் மன்மோகன்சிங் தலைமையில் அமைச்சரவை கூட்டம் இன்று கூட உள்ளது. பிரதமர் அலுவலக விவகாரத் துறை அமைச்சர் நாராயணசாமி, சட்ட அமைச்சர் சல்மான் குர்ஷித், மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் கபில் சிபல் ஆகியோர் நேற்று கூடி, லோக்பால் மசோதா குறித்து விவாதித்தனர். இதற்கிடையே பாரதிய ஜனதா தலைவர் அத்வானி குறிப்பிடுகையில், "வலுவான லோக்பால் மசோதாவை நாங்கள் ஆதரிக்கிறோம். இதில் இரு வேறு கருத்துக்கே இடமில்லை, லோக்பால் மசோதா பார்லிமென்டில் தான் நிறைவேற்ற வேண்டும்' என்றார்.


Advertisement


வாசகர் கருத்து (9)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
vidhuran - slc,யூ.எஸ்.ஏ
19-டிச-201119:41:37 IST Report Abuse
vidhuran அருமையான திட்டம்!. இந்தப் பிஜேபி MP-களெல்லாம் கடந்த ஒருமாதமாக வெறும் ரகளையாகவே பண்ணி பண்ணி ரொம்ப சோர்வடைந்து விட்டார்கலேன்றே நினைக்கிறேன். இல்லாவிட்டால் எங்கோ பாதயாத்திரையோ, அல்லது உண்ணாவிரதமோ இருக்கச் சென்று விட்டார்கள். எப்படியோ ஒரு வழியாய் இந்தத் திட்டத்தையாவது நிறைவேற்ற விட்டார்கள்.
Rate this:
Share this comment
Cancel
K. Natarajan - coimbatore,இந்தியா
19-டிச-201117:11:12 IST Report Abuse
K. Natarajan இன்றைய கூலி நிலவரம்: ஆம்பிளை ஆளுக்கு முன்னூற்று ஐம்பது ரூபாய். பெண்களுக்கு இருநூறு ரூபாய். ஆக குடும்ப வருமானம் மாதம் குறைந்தது பன்னிரண்டாயிரம் ரூபாய். இது வறுமை கோட்டுக்கு மிக மேலே. அப்படி பார்த்தால் தமிழ் நாட்டிலும் கேரளாவிலும் வறுமை கோட்டுக்கு கீழே உள்ளவர்கள் மிக மிக குறைவு. இப்பொழுதே பாதி அரிசி மாட்டிற்கும் கோழிக்கும் போகிறது. மீதி கடத்தபடுகிறது. முடிவில் மிகப்பெரிய ஊழலுக்கு வழி வகுக்கும்.
Rate this:
Share this comment
Cancel
Pannadai Pandian - wuxi,சீனா
19-டிச-201110:12:55 IST Report Abuse
Pannadai Pandian இந்தியா முன்னேருறதா தெரியில. செல்வத்துக்கு விரயம்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X