நம்ம நட்புறவு நாட்டிலா இப்படி ஒரு எண்ணம் ; பகவத்கீதைக்கு தடை கோரினர்: இந்தியா கவலை

Updated : டிச 21, 2011 | Added : டிச 20, 2011 | கருத்துகள் (70)
Advertisement

மாஸ்கோ: இந்தியாவின் எதிரி நாட்டில் கூட இப்படி ஒரு எண்ணம் வரவில்லை ஆனால் நமது நட்புறவு நாடான ரஷ்யாவில் இந்து மத புனித நூலான பகவத்கீதைக்கு தடை கோரி கோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளனர்.

இந்த விவகாரம் பெரும் கவலை அளிப்பதாகவும், இதற்கு எதிரான தீர்ப்பு எதுவும் வராமல் பார்த்துக்கொள்ள வேண்டியது ரஷ்ய அரசின் பொறுப்பு என்றும் ரஷ்யாவிற்கான இந்திய தூதர் அஜய் மல்கோத்ரா அந்நாட்டு அதிகாரிகளிடம் வலியுறுத்தி கூறியுள்ளார்.

ரஷ்யாவில் உள்ள சைபீரிய மாகாணத்தின் டாம்ஸ்க் நகரில் ஒரு மத பிரிவினர் கோர்ட்டில் மனுத்தாக்கல் செய்துள்ளனர். இந்த மனுவில் கீதைக்கு தடை விதிக்க வேண்டும் என கோரியுள்ளனர். இந்த மனு மீதான விசாரணை நடந்தபோது இஸ்கான் தரப்பில் ஆஜரான வக்கீல் இது குறித்து இந்து மத நிபுணர்களிடம் விளக்கம் கேட்டு பெற வேண்டும், தடை விதிப்பது சரியாக இருக்க முடியாது என்றும் வாதாடினார். நீதிபதி இந்த விசாரணையை வரும் 28ம் தேதிக்கு ஒத்தி வைத்துள்ளார்.

இந்திய தூதர் அஜய் மல்கோத்ரா மாஸ்கோவில் உள்ள அதிகாரிகளை தொடர்பு கொண்டு இது ஒரு மத ரீதியான விஷயமாக சில வேற்று கருத்து உள்ளவர்களால் கிளப்பி விடப்பட்டுள்ளது. இதனை அனுமதிக்க கூடாது. இந்தியாவின் புனித நூலாக கீதை உலகம் முழுவதும் மதிக்கப்படுகிறது. இதில் அரசு தலையிட்டு உரிய எதிர்விளைவுகள் இல்லாமல் பார்த்து கொள்ள வேண்டும் என வலியுறுத்தினார்.

இந்தியாவுக்கான ரஷ்ய தூதர் அலக்சாண்டர் கதாகின் கூறுகையில்; இது ஏற்றுக்கொள்ள கூடிய விஷயமில்லை. சைபீரிய மாகாணம் அழகான பல்கலை., கொண்டது.
டாம்ஸ்க்நகர் மத சார்பின்மை கொண்ட நகரம் இங்கு இப்படி ஒரு செயல் குறித்து கவலைப்படுகிறேன். எந்த ஒரு புனித நூலையும் கோர்ட்டுக்கு இழுப்பது சரியல்ல எனறார்.


Advertisement
வாசகர் கருத்து (70)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Endless - Mumbai,இந்தியா
21-டிச-201115:30:42 IST Report Abuse
Endless அனைவர்க்கும் ஒரு சிறு வேண்டுகோள்.... நான் தேடிய வரை... எனக்கு தெரிந்த வரை ஹிந்து மதம் என்று ஒன்று கிடையாது....மத நோக்கில் வெளியி‌ல் இருந்து வந்தவர்களால் இப்பெயர் வந்தது. "ஹிந்து" என்பதற்கு "அழகான" என்று பொருள்.... நமது தேசத்தில் உருவாகி தழைத்து கொண்டிருப்பது மதம் அல்ல "பாரத தர்மம்" அதாவது வாழும் முறை (way of life). பல மொழிகள் பல கடவுள்கள் பல நம்பிக்கைகள்..பல சம்பிரதாயங்கள் என, மனித குணநலனுக்கு ஏற்ப உருவானவை (ஒருவரால் உருவாய்க்கபட்டது இல்லை) ...இதையே வெளியி‌ல் இருந்து மத நோக்கோடு வந்தவர்கள் மதம் என்று கூறினார்கள்... காலபோக்கில் நாமும் நமது "பாரத தர்மத்தை" மதம் என்று தவறாக கருத துவங்கிவிட்டோம்... நம் பண்பாடு தனிமனித சுதந்திரத்தின் ஒரு எடுத்துகாட்டு... கோவிலுக்கு போகவோ, மறைகளை வாசிக்கவோ நமக்கு கட்டாயம் கிடையாது... நம் இஷ்டம் போல எந்த கடவுளையும் வணங்கலாம்.. இஷ்டப்படி வணங்கலாம்.. ஒருவரின் பக்தியி‌ன் வெளிபாடு என்பது அவரவர் குணத்திற்கு ஏற்ப அமைத்து கொள்ளலாம்... (உதாரணம் மீரா...ஆண்டாள்... ஞாயனசம்மந்தர், கண்ணப்பர்.. குகன்.. சபரி... இன்னும் பலபல)... இவ்உலகம் மனிதராகிய நமக்கு மட்டும் இல்லை, மற்ற உயிரி‌னங்களுக்கும் சேர்த்து தான் என்பதை விளக்கவே ஒவ்வொரு கடவுளிடமும் தனி தனி வ்ருக்ஷம் (மரம்), வாகனம் (மிருகம்) போன்றவை இருக்கபெற்றன. தசாவதாரத்தின் (evolution theory) முதல் ஐந்து அவதாரங்கள் உருவ பரினாமத்தை (physical evolution) குறிப்பது, மற்ற ஐந்து அவதாரங்கள் மனிதனின் குண பரினாமத்தை (psychological evolution) குறிப்பது. நமது இந்த சுதந்திர பாரம்பர்யத்தில் வந்த நம் முன்நோர்களால் உருவாகபட்டவை பல பல... மனித வாழ்கைக்கு தேவையான அணைத்து அறிவுரைகளும் சாஸ்திர வடிவில் உள்ளன. இன்னும் பல நல்ல விஷயங்களை உள்ளடக்கியது நமது "பாரத தர்மம்". இம்மண்ணில் பிறந்து இங்கு விளைந்ததை உண்டு சில இங்கு வாழ்ந்து கொண்டிருக்கும் சிலரின் கருத்துகளை பார்த்தால் என்ன சொல்வது என்று தெரியவில்லை... சுயநல மாற்றம் அவர்களை இப்படி பேசவைக்கிறது....வாழ்க எங்கள் பாரதம்... வாழ்க எங்கள் பாரத பண்பாடு
Rate this:
Share this comment
Cancel
Sankeethaa - Chennai,இந்தியா
21-டிச-201112:25:02 IST Report Abuse
Sankeethaa திருக்குறளை தேசிய நூலாக அறிவிக்க வேண்டும்: உலகிலேயே அதிக மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ள நூல்களில் மூன்றாம் இடத்தைத் திருக்குறள் வகிக்கிறது. இதுவரை 80 மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது. "இறைவன் மனிதனுக்குச் சொன்னது கீதை மனிதன் இறைவனுக்குச் சொன்னது திருவாசகம் மனிதன் மனிதனுக்குச் சொன்னது திருக்குறள்" வள்ளுவன் தன்னை உலகினுக்கேதந்து வான் புகழ் கொண்ட தமிழ்நாடு.
Rate this:
Share this comment

Microsoft OLE DB Provider for SQL Server error '80040e31'

Query timeout expired

/xtralog_load_full_taboolabc.asp, line 393