Pokkisham- Santhom Church | சென்னை புனித தோமையார் பேராலயம்| Dinamalar

சென்னை புனித தோமையார் பேராலயம்

Added : டிச 25, 2011 | கருத்துகள் (2)
சென்னை புனித தோமையார் பேராலயம்

இந்த உலகில் நாம் நல்லவர்களாகத்தான் வாழ ஆசைப்படுகிறோம். ஆனாலும் ஒர் நாளில் சின்னதாக பொய் அல்லது பொறாமை படாமல் இருப்பதில்லை. இதெல்லாம் கூட பாவத்தின் வரையறைக்கும் வந்துவிழுகின்றன. இந்த பாவங்களை தனக்குள் ஏற்று பரிகாரம் தந்திட, கடவுளான இயேசு மனிதனாக பிறந்த தினமே இன்று கிறிஸ்துமஸ் திருவிழாவாக கொண்டாடப்படுகிறது.



வருந்துகிற மக்களோடு தன்னை இணைத்துக் கொண்டு மக்களுக்காகவே வாழ்ந்தவரான, சிலுவையில் பூட்டிய போதும் அன்பை மட்டுமே போதித்தவரான, உன் அண்டை வீட்டுக்காரனையும், அயலானையும் நேசி... உனக்குள்ள அனைத்தையும் ஏழைகளுக்கு கொடு... என்று வாழ்ந்த காலம் முழுவதும் சொல்லியவரும், எளிமையுடனும், நேசத்துடனும் அனைவர் மீதும் பாசத்துடனும் வாழ்ந்தவரும், கிறித்தவ மக்களின் உள்ளத்தில் வாழ்ந்து கொண்டு இருப்பவருமான, இயேசு கிறிஸ்துவின் 12 சீடர்களில் ஒருவரான புனித தோமையார் தேசிய திருத்தலம் பற்றிய கட்டுரை இது.


உலகிலேயே மூன்று இடங்களில்தான் சீடர்களின் கல்லறை மீது ஆலயங்கள் கட்டப்பட்டுள்ளன. ஒன்று ரோமில் உள்ள புனித ராயப்பர் ஆலயம், இரண்டு ஸ்பெயினில் உள்ள புனித யாகப்பர் ஆலயம், மூன்றாவது சென்னை மயிலாப்பூரில் உள்ள சாந்தோம் சர்ச் என்றழைக்கப்படும் புனித தோமையார் தேசிய திருத்தலம்.


புனித தோமையார், "என் ஆண்டவரே... என் தேவனே...' என்று அறிக்கை வெளியிட்டு இயேசுவின் உயிர்ப்பிற்கு சாட்சியாக விளங்கியவர்.
கி.பி.52ல் இந்தியா வந்த தோமையார் இங்கிருந்தபடி பல அற்புதங்களை நிகழ்த்தினார், பின்னர் கி.பி.72ல் அவர் இறந்ததும் அவரது கல்லறை மீது இந்த ஆலயம் எழுப்பப்பட்டது. பின்னர் படிப்படியாக இந்த ஆலயம் நவீனப்படுத்தப்பட்டு இன்று பேராலயமாக விண்ணைமுட்டும் அளவிற்கு எழுந்துள்ளது.

இந்த ஆலயம் அப்போதும் இப்போதும் பல ஆச்சரியங்களை தன்னகத்தே கொண்டுள்ளது. கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாட்ட பரபரப்பில் இருந்தபோதும் பங்கு தந்தையான காணிக்கைராஜ், ஆலயத்தின் அனைத்து பகுதிகளையும் சுற்றிக் காண்பித்தார். அவர் சுற்றிக் காட்டிய சில இடங்கள் இதுவரை கேமிராவின் கண்ணில் படாத இடங்களாகும். சாந்தோம் சர்ச்சிற்கு நேரில் போனால் மட்டுமே பார்க்கக்கூடிய, பொக்கிஷமாக பாதுகாக்கக்கூடிய விஷயங்களை இங்கே படமாக வழங்கியுள்ளோம்.


கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு வாழ்த்துக்கள்.


-எல்.முருகராஜ்.


Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X