பொது செய்தி

தமிழ்நாடு

மதுரைக்கு "முதல் மரியாதை':காவல்கோட்டம் புத்தகத்திற்கு "சாகித்ய அகாடமி' விருதுபெற்ற மதுரையைச்சேர்ந்த வெங்கடேசன்.

Added : டிச 27, 2011 | கருத்துகள் (2)
Share
Advertisement
"நம் நாட்டு வரலாற்றுக்குள் புதைந்து கிடக்கும் மேலான நோக்கங்கள், நம் மூதாதையரின் லட்சியம் செறிந்த வாழ்க்கை முறைகள், காலநடையில் உருவெடுத்த உயர்வு-தாழ்வுகள், நம் மண்ணின் மேன்மையை நிலைநிறுத்தப் போராடியவர்களின் வாழ்க்கை வரலாறுகளை, இன்றைய மக்களிடம் சேர்க்க எழுதுகோல் ஏந்துவதே ஓர் எழுத்தாளின் புனிதக் கடமை' என்றார் இத்தாலியின் சுதந்திரத்திற்கு தன்னை அர்ப்பணித்த மேதை
மதுரைக்கு "முதல் மரியாதை':காவல்கோட்டம் புத்தகத்திற்கு "சாகித்ய அகாடமி' விருதுபெற்ற மதுரையைச்சேர்ந்த வெங்கடேசன்.

"நம் நாட்டு வரலாற்றுக்குள் புதைந்து கிடக்கும் மேலான நோக்கங்கள், நம் மூதாதையரின் லட்சியம் செறிந்த வாழ்க்கை முறைகள், காலநடையில் உருவெடுத்த உயர்வு-தாழ்வுகள், நம் மண்ணின் மேன்மையை நிலைநிறுத்தப் போராடியவர்களின் வாழ்க்கை வரலாறுகளை, இன்றைய மக்களிடம் சேர்க்க எழுதுகோல் ஏந்துவதே ஓர் எழுத்தாளின் புனிதக் கடமை' என்றார் இத்தாலியின் சுதந்திரத்திற்கு தன்னை அர்ப்பணித்த மேதை மாஜினி. இதன்படி, இலக்கியத்தில் இதுவரை வராத பின் தங்கிய சமுதாய மனிதர்களை பதிவு செய்ய, பேனாவை சுழற்றுபவர் இவர்.


மதுரை மாவட்டம் கீழக்குயில்குடியை பின்னணியாகக்கொண்டு "தாதனூர்' எனும் புனைப்பெயரில், சிறு கிராமத்து மக்களின் களவும், காவலுமான வாழ்வினூடாக, பிரிட்டிஷ் ஆட்சியாளர்கள் மதுரையை கைப்பற்றுவதில் துவங்கி, கைரேகைச் சட்டத்தால் களப்பலியாகும் ஒரு மக்கள் குழுவின் வரலாறை, 10 ஆண்டு கடும் உழைப்பில் "காவல் கோட்டம்' நாவலில் பதிவு செய்திருக்கிறார் இவர். மதுரையில் மாலிக்காபூர் படையெடுப்பில் (கி.பி.1310) ல் துவங்கி, 1920 ல் பெருங்காமநல்லூர் துப்பாக்கிச்சூடு சம்பவத்துடன் நாவல் முடிகிறது.


இதற்கு சொந்தக்காரர் மதுரை ஹார்விபட்டியை சேர்ந்த விவசாயி சுப்புராம்-நல்லம்மாள் மகன் சு.வெங்கடேசன், 40. தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர், கலைஞர்கள் சங்க பொதுச் செயலாளர். இவரின் முதல் நாவலான "காவல் கோட்ட'த்திற்கு இலக்கியத்தின் மிக உயரிய 2011 க்கான "சாகித்ய அகாடமி' விருது கிடைத்துள்ளது. இது இவரின் முதல் நாவல்.
ஜெயகாந்தன் 1972 ல் சாகித்ய அகாடமி விருது பெற்ற போது வயது 38. அவருக்குப் பின் இளம் வயதில் அவ்விருதால், மதுரைக்கு "முதல்மரியாதை'யை பெற்றுத்தந்திருப்பவர் வெங்கடேசன்.


அவருடன் ஒரு நேர்காணல்:*எழுத்துலகில் ஆர்வம் வந்தது எப்படி? பள்ளியில் தமிழாசிரியர் இளங்குமரனார்தான் மொழி, இலக்கிய ஆர்வம், ரசனையை ஊட்டினார். 1982 ல் 7 ம் வகுப்பு படித்தபோது, பாரதி நூற்றாண்டு விழா பேச்சுப் போட்டியில் பரிசு பெற்றதன் மூலம் எழுத்துலக பயணம் துவங்கியது.


*முதல் படைப்பு?மதுரை மன்னர் திருமலை நாயக்கர் கல்லூரியில் பி.காம்., முதலாம் ஆண்டு படித்த போது, 1989 ல் "ஓட்டை இல்லாத புல்லாங்குழல்' கவிதை புத்தகம் வெளியானது. "திசையெல்லாம் சூரியன்', "பாசி வெளிச்சத்தில்', "ஆதிப்புதிர்'-கவிதை, "கலாசாரத்தின் அரசியல்', "மனிதர்கள், நாடுகள், உலகங்கள்,' "சமயம் கடந்த தமிழ்' உட்பட பல்வேறு ஆய்வு புத்தகங்களையும் எழுதியுள்ளேன்.


*"காவல் கோட்டம்' நாவலுக்கான உந்துசக்தி? இந்தியாவில் 2500 ஆண்டு பழமையான நகர் மதுரை. இன்றும் உயிர்ப்புடன் உள்ளது. பெரும் போர், அழிவுக்குப்பின் வேறொரு இடத்தில், அந்த ஊரை உருவாக்குவர். அப்படி எதுவுமின்றி மையப்புள்ளியாக மதுரை தழைத்திருக்கிறது. அதே நிலப்பரப்பில் திரும்பத் திரும்ப கட்டப்படுகிறது. இதன் எந்த ஒரு தெருவின் திருப்பத்திலும், வரலாற்றின் திருப்பம் இருக்கும். அதற்கு ஒரு ரசனை, ஈர்ப்பு உண்டு. மதுரையை பற்றி கட்டுரை, ஆய்வு மற்றும் வரலாற்று புத்தகங்கள் வெளிவந்துள்ளன. ஒரு மனிதன், மன்னன், குடும்பத்தை மையமாக வைத்து நாவல்கள் வெளிவந்துள்ளன. ஒரு நகரைப் பற்றிய நாவல் வெளிவந்திருக்கிறதா எனில், அநேகமாக இல்லை எனலாம். இதுவே மதுரையைப் பற்றி எழுதத் தூண்டியது.*நாவலுக்கான மெனக்கெடல் பற்றி...,?எழுதப்பட்ட வரலாறு, எழுதப்
படாத மக்கள் வரலாறு என 2 தடங்களில் நாவல் பயணிக்கிறது. மதுரை
மாவட்ட பூர்வீக கிராமங்களுக்கு பயணித்து, மக்களை சந்தித்தேன். குல தெய்வங்கள், வாழ்க்கை முறையை அறிந்தேன். பல இரவுகள் செலவிட்டேன். நாவல் எழுதத் துவங்கியபோது என் மூத்த மகள் யாழினி பிறந்தார். எழுதி முடித்தபோது அவர் என் தோளுக்கு இணையாக வளர்ந்திருத்தார். நாவலுக்காக 10 ஆண்டுகள் உழைத்தேன். இதற்காக நான் இழந்தது அதிகம்.


*சாகித்ய அகாடமி விருது கிடைக்கும் என எதிர்பார்த்தீர்களா?
எதிர்பார்க்கவில்லை. 60 வயது கடந்த மூத்த தலைமுறை எழுத்தாளர்களுக்குத்தான் அதிகமாக இவ்விருது கொடுத்துள்ளனர். கேரள படைப்பாளிகளுக்கு உரிய காலத்தில் அங்கிகாரம் கிடைத்துள்ளது. வயதை கணக்கில் எடுக்காமல், தகுதியை கணக்கில் கொண்டு எனக்கு விருது அறிவித்துள்ளது நல்ல விஷயம்.இதனால் 24 மொழிகளில் இந்நாவல் மொழி பெயர்க்கப்படும். இந்தியாவில் எங்கோ ஓர் மூலையில் உள்ள வாசகனுக்கு மதுரையின் ரத்தமும், சதையுமான வரலாறு கொண்டு சேர்க்கப்படும். பொங்கி சுழித்தோடும் பெருநதி போல், மதுரை வீதிகளில் வரலாறு பாய்ந்தோடுகிறது.


அந்நதியின் மீது மலரைத் தூவுவதுபோல் தூவி, மாநகரை வணங்குகிறேன்.*ஒவ்வொரு முறையும் இவ்விருது அறிவிக்கப்படும் போது, விமர்சனம் எழுகிறதே? வயதைப் பற்றித்தான் விமர்சனம் எழுகிறது. தகுதியான படைப்பிற்கு உரிய காலத்தில் அங்கீகாரம் என்பது எல்லோருக்கும் நிகழ வேண்டும். இவருக்கு மட்டும் ஏன் நிகழ்ந்தது என கேட்பது என்னவகை இலக்கிய அறம்? எனத் தெரியவில்லை. *மொழி, இலக்கியம், அரசியல் என அனைத்திலும் இளைய தலைமுறை அந்நியப்பட்டு நிற்கிறதே...,?


உலகமயமாக்கலின் தாக்கத்தால், முழுக்க முழுக்க கொள்கை நீக்கம்
செய்யப்பட்ட மனிதர்களாக மாற்றப்படுகின்றனர். இதில், இளைஞர்கள் அதிகம் பாதிக்கப்படுகின்றனர். பன்னாட்டு கம்பெனிகளின் படையெடுப்பால், நுகர்வு கலாசாரம் உச்சம் பெற்றுள்ளது. பண்பாட்டு தள கூறுகளை, வேர்களை இழந்து, வேரற்ற மனிதர்களாக ஆக்கும் அபாயம் உள்ளது. மனித மனதை படிக்கும் ஒரே கருவி இலக்கியம். அது மனிதனுக்கு அடியுரமாக இருக்கிறது.*அடுத்த படைப்பு? பிரிட்டிஷ் ஆட்சியில் மக்களுக்கு செய்த அநீதிகள் பற்றி, இதுவரை வெளிவராத தகவல்களுடன் ஒரு ஆய்வு புத்தகம் எழுதுகிறேன். தமிழ் பாரம்பரியம் பற்றிய வரலாற்று நாவல் எழுதுகிறேன். இது மொத்த தமிழ் மரபின் சாரமாக இருக்கும். இவ்வாறு மனம் திறந்தார். இவரை வாழ்த்த 94424-62888. -பாரதி.


Advertisement
வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Mubarak Ali - Ipoh,மலேஷியா
28-டிச-201113:29:31 IST Report Abuse
Mubarak Ali நம்ம ஊர்க்காரருக்கு கிடைத்தால் நமக்குக் கிடைத்த மகிழ்ச்சி...விருது கிடைத்ததில் அவரை விட எனக்கு பரபரப்பு தொற்றிக் கொண்டது.அவரை எனக்குத் தெரியாது.என்னையும் அவருக்குத் தெரியாது. மதுரை மண்ணும்,ஆர்வி பட்டி இரயிலும்,திருப்பரங்குன்றம் மலையும் எங்களை ஒன்றிணைத்தது. வெங்கடேசனுக்கு வாழ்த்துச் சொல்ல நினைத்தேன். தினமலர் அவரின் தொடர்பு எண்ணைத் தந்தது. தொலைபேசி வாழ்த்திய பின்பு மனம் இன்னும் சந்தோஷமாக இருக்கிறது. வாழ்த்துக்கள்.
Rate this:
Cancel
suresh Kumar N. - Bangalore,இந்தியா
28-டிச-201110:41:31 IST Report Abuse
suresh Kumar N. வாழ்த்துக்கள் நண்பரே!!!.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X